AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இண்டர்நெட் இல்லாமல் யுபிஐ மூலம் பணம் அனுப்ப முடியுமா? எப்படி செய்வது?

UPI Without Internet : இப்போது யுபிஐ பயன்பாட்டிற்கு இண்டர்நெட் தேவை இல்லை. மத்திய அரசு அறிமுகப்படுத்திய *99# யுபிஐ சேவை மூலம் இண்டர்நெட் மற்றும் ஸ்மார்ட்போன் இல்லாமல் கூட பணம் அனுப்பலாம். மேலும் யுபிஐ பின்னையும் மாற்றலாம். இந்த சேவை 24 மணி நேரமும் செயல்படும்.

இண்டர்நெட் இல்லாமல் யுபிஐ மூலம் பணம் அனுப்ப முடியுமா? எப்படி செய்வது?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 29 Jun 2025 15:55 PM IST

இப்போதெல்லாம் நாம் அனைவரும் வெளியே செல்லும்போது பணம் எடுத்து செல்வதில்லை. மிகப்பெரிய ஷாப்பிங் மால்கள் தொடங்கில் வீட்டின் அருகே இருக்கும் பெட்டி கடைகள் வரை யுபிஐ (UPI) பயன்பாடு வந்து விட்டது. நம் ஸ்மார்ட்போன்கள் (Smartphone) மூலமாக யுபிஐ ஐடியைப் பயன்படுத்தி பணம் செலுத்த முடிகிறது. ஆனால் சில நேரங்களில் நம் ஸ்மார்ட்போன்களில் டேட்டா முடிந்திருக்கும் அல்லது நெட்வொர்க் இல்லாமல் இருக்கும்போது யுபிஐ மூலம் பணம் செலுத்த முடியாது.  அது நமக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும். ஆனால் இனி அது குறித்து கவலைப்படத் தேவையில்லை. இதற்காக மத்திய அரசும் தேசிய கொடுப்பனவு கழகமும்( NPCI) இண்டர்நெட் இல்லாமல் பயன்படுத்தும் யுபிஐ சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு *99# எண் மூலம் செயல்படும் கட்டமைக்கப்படாத துணை சேவை தரவு (USSD – Unstructured Supplementary Service Data) அடிப்படையிலான யுபிஐ சேவையின் மூலம் இண்டர்நெட் இல்லாமல் கூட எளிதாக பணத்தை மாற்றலாம்.

*99# யுபிஐ சேவை என்றால் என்ன?

*99# என்பதுகட்டமைக்கப்படாத துணை சேவை தரவு அடிப்படையிலான மொபைல் வங்கிச் சேவையாகும், இது இணைய இணைப்பு மற்றும் ஸ்மார்ட்போன் இல்லாமல் பணம் அனுப்பவும், இருப்பைச் சரிபார்க்கவும், உங்கள் யுபிஐ பின்னை மாற்றவும் உங்களை அனுமதிக்கிறது. இந்த சேவை 24 மணி நேரமும் செயல்படுகிறது. மேலும் நாட்டின் அனைத்து மொபைல் நெட்வொர்க் மூலமாகவும் பணம் அனுப்ப முடியும்.

இணையம் இல்லாமல் பணம் அனுப்புவது எப்படி?

இணையம் இல்லாமல் பணம் அனுப்ப, முதலில் உங்கள் மொபைல்போனின் டயலரில் *99# என டைப் செய்து அழைப்பை மேற்கொள்ளுங்கள். மொழியைத் தேர்ந்தெடுக்கும் ஆப்சன் உங்களுக்கு வழங்கப்படும்.  உங்கள் விருப்ப மொழியைத் தேர்வு செய்த பிறகு  நீங்கள் பணம் அனுப்ப விரும்பும் யுபிஐ ஐடியின் விவரங்களை அனுப்பவும். இதைச் செய்த பிறகு, உங்களுடைய யுபிஐ பின்னை பதிவிடவும். ஒரு முறை விவரங்களை சரிபார்த்த பிறகு நீங்கள் அனுப்ப விரும்பும் பணத்தை செலுத்தலாம். இதன் மூலம் நீங்கள் ரூ.5,000 மட்டுமே பரிமாற்றம் செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த செயல்முறையின் மூலம் உங்கள் யுபிஐ பின்னையும் மாற்றலாம்.

யுபிஐ பின் இல்லை என்றால் என்ன செய்வது?

உங்கள் மொபைல் டயலரில் *99# குறியீட்டை டைப் செய்து காலர் பட்டனை பிரஸ் செய்யவும். மொழியைத் தேர்ந்தெடுத்து, யுபிஐ பின் என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த ஆப்சன் உங்களுக்கு 5வது இடத்தில் காட்டப்படும்.

இப்போது இங்கே வங்கியின் அக்கவுண்ட் நம்பரின் கடைசி 6 இலக்கங்கள் மற்றும் டெபிட் கார்டின் காலாவதி தேதி (MMYY) கேட்கப்படும். இது உங்கள் டெபிட் கார்டு தொடர்பான தகவல். அதனை அளித்த பிறகு,  உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு ஒடிபி வரும். ஒடிபியை உள்ளிடவும். இப்போது உங்களிடம் புதிய யுபிஐ பின்னை உருவாக்குமாறு கேட்கப்படும். உங்களுக்கு விருப்பமான 4 அல்லது 6 இலக்க பின்னை உள்ளிட்டு உறுதிப்படுத்தவும். அந்த பின் தான் உங்கள் யுபிஐ பின் என்பதால் யாரிடமும் பகிரக் கூடாது என்பதை நினைவில் கொள்ளவும்.

Follow Us