AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இனி UPI மூலம் பணம் அனுப்புறவங்க கவனம் – ஜூன் 30 முதல் நடைமுறைக்கு வரும் புதிய மாற்றம்

New UPI Guidelines : இந்தியர்கள் மத்தியில் பணப்பரிவர்த்தனை செய்ய யுபிஐ மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியிருக்கிறது. இந்த நிலையில் வருகிற ஜுன் 30, 2025 அன்று முதல் யுபிஐ மூலம் பணம் அனுப்பவுதற்கு இந்தியத் தேசிய கொடுப்பனவு கழகம் முதிய விதிமுறைகளை அறிவித்திருக்கிறது. அது குறித்து விரிவாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

இனி UPI மூலம் பணம் அனுப்புறவங்க கவனம் – ஜூன் 30 முதல் நடைமுறைக்கு வரும் புதிய மாற்றம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 31 May 2025 15:34 PM IST

இந்தியர்களின் தினசரி பண பரிமாற்றங்களில் யுபிஐ (Unified Payments Interface) மிக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. வீட்டின் அருகில் இருக்கும் மளிகைக் கடைக்கோ அல்லது பெரிய நிறுவனங்களுக்கோ யுபிஐ ஐடி மூலம் எழுதில் பணம் அனுப்பலாம். கடைகளுக்கு பொருட்களை வாங்க செல்லும்போது  பணம் எடுத்து செல்வதன் அபாயம் யுபிஐ ஆப்களின் வருகைக்கு பிறகு வெகுவாக குறைந்துள்ளது. அனைத்து வகையான பணப்பரிவர்த்தனைகளும் டிஜிட்டல் முறையில் மாறியுள்ளதால் தேவையில்லாமல் வங்கிககளுக்கு செல்லும் நிலையும் குறைந்துள்ளது.   இப்போது, இந்தியத் தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) ஒரு புதிய விதியை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகள் ஜூன் 30, 2025 முதல் அமலுக்கு வருகிறது. இந்த விதிகள் குறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

புதிய விதிகள்

  • வாடிக்கையாளர் கடைக்காரருக்கு பணம் அனுப்பும்போது,  அதனை கடைக்காரரின் வங்கி மற்றும் பணம் வசூலிக்கும் ஏஜென்சி (PSP) இரண்டும் ஒன்றாக இருந்தால்  அந்த பணப்பரிவர்த்தனை சரியாக நடைபெற்றதாக அதற்கான தகவல் உடனே வாடிக்கையாளருக்கு மெசேஜ் அனுப்பப்படும். இந்த மாற்றம் online system-ல் மட்டுமே செய்யப்படுகிறது.
  • மற்ற கணக்குகள், ஜிஸ்டி அறிக்கைகள், அபராதம் தொடர்பான விஷயங்கள் போன்றவை பழைய முறைபடி தொடரும்.
  • அதே போல நாம் கடைக்காரருக்கு பணம் அனுப்புகிறோம் என்றால் அந்தப் பணம் வாடிக்கையாளருக்கு திரும்ப செலுத்தப்படவில்லை என்றால் வாடிக்கையாளருக்கே திருப்பி அனுப்பப்படும்.
  • அதே நேரம் கடைக்காரர் உண்மையில் நமக்கு பொருள் அல்லது சேவை வழங்கியிருப்பதால் பணத்தை திருப்பி அனுப்பும் முன்  கடைக்காரர் அதனை உறுதிப்படுத்த வேண்டும்.

யுபிஐ ஆப் இல்லாமல் எப்படி பணம் அனுப்புவது?

 

 

இந்த புதிய விதிகள் வாடிக்கையாளர்களின் அனுபவம் மேம்பட வேண்டும் என்பதற்காகவும் புகார்கள் குறைய வேண்டும் என்பதற்காகவும் பரிவர்த்தனை முடிவுகள் விரைவாக உறுதி செய்யப்பட வேண்டும் என்பதற்காகவும் கொண்டுவரப்பற்றிருக்கிறது.  இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனை முறைகள் தற்போது நவீனமயமாகி வருகிறது.  இந்தியத் தேசிய கொடுப்பனவு கழகம் வெளியிட்டுள்ள இந்த புதிய மாற்றம், வணிகர்களும் வாடிக்கையாளர்களும் தன்னிச்சையாக, பாதுகாப்பாக பணப்பரிவர்த்தனை செய்யும் சூழலை உருவாக்கும். வருகிற ஜூன் 30, 2025 முதல் நடைமுறையில் வரும் இந்த மாற்றம், நம்மை ஒரு பாதுகாப்பான டிஜிட்டல் இந்தியாவை நோக்கி அழைத்து செல்லும்

Follow Us