Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

யுபிஐ விதிகளில் புதிய மாற்றம் – Google Pay, Paytm யூஸ் பண்றீங்களா? அப்போ இத தெரிஞ்சுக்கோங்க!

Upi Usage Alert : கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ செயலிகளை நாள்தோறும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் சில நேரங்களில் யுபிஐ சேவைகள் முடங்குவதால் பணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க யுபிஐ செயலியில் வருகிற ஆகஸ்ட் 1, 2025 முதல் புதிய மாற்றம் நடைமுறைக்குவரவிருக்கிறது. அதுகுறித்து விரிவாக இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

யுபிஐ விதிகளில் புதிய மாற்றம் – Google Pay, Paytm யூஸ் பண்றீங்களா? அப்போ இத தெரிஞ்சுக்கோங்க!
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 11 Jun 2025 15:30 PM

பேடிஎம் (Paytm), கூகுள் பே (Google Pay), போன்பே உள்ளிட்ட யூபிஐ (UPI) அடிப்படையிலான பயன்பாடுகளை நாள்தோறும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவைகள் மக்களின் பணப்பரிவர்த்தனைகளை மிகவும் எளிதாக்கியிருக்கிறது. இருந்த இடத்தில் இருந்தே ஒருவருக்கு பணப்பரிவர்த்தனை செய்ய முடியும். மேலும் கடைகளுக்கு செல்லும் மிகப் பெரிய தொகையை எடுத்து செல்ல வேண்டியதில்லை. போன் மூலமாகவே பணம் செலுத்திவிடலாம். ஆனால் சில நேரங்களில் யுபிஐ சேவைகள் முடங்குவதால் பணம் செலுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. இந்த நிலையில், யூபிஐ சேவையின் ஒட்டுமொத்த சுமையை குறைக்கும் வகையில் நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) சில புதிய தொழில்நுட்ப மாற்றங்களை நடைமுறைக்கு கொண்டுவரவிருக்கிறது. ஆகஸ்ட் 1, 2025 முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கு வரவிருக்கிறது.

யுபிஐ சேவையில் புதிய மாற்றம்

தற்போதைய நிலவரப்படி, ஒரு மாதத்திற்கு 16 பில்லியன் யுபிஐ பரிவர்த்தனைகள் நடைபெறுகிறது. இதனால் யுபிஐ சேவையில் மிகுந்த அழுத்தம் காணப்படுகிறது. ஏப்ரல் மாதம் மட்டும் 5 மணி நேரத்திற்கு யுபிஐ பணப் பரிவர்த்தனை முற்றிலும் செயலிழந்தது. இது கடந்த 3 வருடங்களில் மிக அதிக நேரம் செயலிழந்த காரணத்தால் பயனாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.  நேஷனல் பேமெண்ட் கார்பரேஷன் ஆஃப் இந்தியா தற்போது கூகுள் பே, போன் பே போன்ற பேமென்ட் சேவை வழங்குநர்கள் மற்றும் வங்கிகளுக்கு கீழ்காணும் முக்கிய வழிமுறைகளை ஜூலை 31, 2025க்குள் பின்பற்ற உத்தரவிட்டுள்ளது.

  • அதன் படி கூகுள் பே, போன் பே போன்ற ஆப்களின் பண இருப்பை (Balance) 50 முறைக்கு மேல் பார்க்க அனுமதிக்கப்படாது.
  • மேலும் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கையை 25 முறைக்கு மேல் பார்க்க முடியாது.
  • மேலும் ஆட்டோபே (Autopay) சேவைகள் உதராணமாக நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் சந்தா ஆகியவை பீக் ஹவர்ஸில் செலுத்த முடியாது. அதாவது காலை 10 மணி வரை, பிற்பகல் 1 முதல் மாலை 5 மணி வரை, இரவு 9.30 மணிக்கு பிறகு என இந்த நேரங்களில் மட்டுமே ஆட்டோபே சேவைகள் நடைபெறும்.

ஏன் இந்த கட்டுப்பாடுகள்?

யுபிஐ செயலிகள் ஒரு வினாடிக்கு 7,000 யூபிஐ பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. ஒரு நிமிடம் கூட சேவை நின்றுவிட்டால், 4 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இதற்குக் காரணமாக அதிக அளவில் செய்யப்படும் பேலன்ஸ் செக் செய்வது  தான் என்று கூறப்படுகிறது.  யூபிஐ சேவையை தங்கு தடையின்றி வழங்க NPCI இந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது. ஆகஸ்ட் 1 முதல் பயனாளர்கள் தங்களது பரிவர்த்தனை முறைகளை சற்று மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.