AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விலை குறைவான விமான டிக்கெட்டை வாங்க உதவும் சாட்ஜிபிடி? எப்படி தெரியுமா?

Cheapest Flight ticket : விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது, ​​நீங்கள் வழக்கமாகப் பல செயலிகளுக்கு மாறி மாறிச் சென்று, விலைகளைத் தொடர்ந்து ஒப்பிட்டுப் பார்ப்பவராக இருந்தால், சாட்ஜிபிடி இப்போது அந்தச் சிக்கலுக்குத் தீர்வு கண்டுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

விலை குறைவான விமான டிக்கெட்டை வாங்க உதவும் சாட்ஜிபிடி? எப்படி தெரியுமா?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 24 Apr 2026 21:43 PM IST

விமான டிக்கெட் பெறும் செயல்முறையை எளிதாக்கும் வகையில், சாட்ஜிபிடி தற்போது இப்போது ஸ்கை ஸ்கேன்னர் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. பல இணையதளங்கள் மற்றும் செயலிகளுக்கு மாறி மாறிச் சென்று டிக்கெட் விலையை ஒப்பிட்டு பார்ப்பதை விட, நேரடியாக சாட்ஜிபியின் சாட் பகுதியிலேயே, விலை குறைவான விமான டிக்கெட்டுகளை நீங்கள் இப்போது கண்டறியலாம். இந்த வசதி தற்போது இந்தியாவில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

விலை குறைவான விமான டிக்கெட்டை வாங்க உதவும் சாட்ஜிபிடி?

இதன் மூலம், தேவையில்லாத ஃபில்டர்ஸ் மற்றும் இணைய பக்கங்களுக்கு இடையே தேடிச் செல்லும் விரக்தி இனி இருக்காது. செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உங்கள் அடுத்த பயணத்தை புத்திசாலித்தனமாகத் திட்டமிட்டு நம் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்தலாம்.

இதையும் படிக்க : உங்கள் போனை வேறு யாரும் கண்காணிக்கிறார்களா? எப்படி தெரிந்துகொள்வது?

விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது, ​​நீங்கள் வழக்கமாகப் பல செயலிகளுக்கு மாறி மாறிச் சென்று, விலைகளைத் தொடர்ந்து ஒப்பிட்டுப் பார்ப்பவராக இருந்தால், சாட்ஜிபிடி இப்போது அந்தச் சிக்கலுக்குத் தீர்வு கண்டுள்ளது. ஸ்கை ஸ்கேன்னர் என்ற நிறுவனத்துடன் இணைந்து சாட்ஜிபிடி இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளது. இந்தக் கூட்டு முயற்சி பயனர்களுக்குப் பெரும் நன்மைகளை வழங்கவிருக்கிறது. ஸ்கைஸ்கேன்னர் ஒரு தேடல் கருவியை சாட்ஜிபிடியில் இணைத்துள்ளது. இதன் மூலம் குறைந்த விலையில் உள்ள விமான டிக்கெட்டுகள் குறித்து உடனடியாக தெரிந்துகொள்ளலாம்.

இந்த வசதி இப்போது இந்தியாவில் உள்ள பயனர்களுக்கும் கிடைக்கும். இதற்காக பல இணையதள பக்கங்கள் மற்றும் செயலிகளில் தேடுவதற்கு பதிலாக நீங்ள் நேரடியாக சாட்ஜிபிடியின் சாட் பகுதியில் கேட்டாலே உங்களுக்கு தெளிவான பதிலை விரைவாக அளிக்கும். மேலும் அதற்கான லிங்க்குகளை சாட் பகுதியிலேயே நம்மால் பெற முடியும்.

இதையும் படிக்க : ஏஐ மனிதர்களின் சிந்திக்கும் திறனை குறைத்துவிடும்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இது வழக்கமான ஒரு சர்ச் இஞ்சின் போல அல்லாமல், நம் பெர்சனல் உதவியாளர் போல நமக்கு தேவையான விவரங்களை அது நமக்கு அளிக்கும். இந்த முடிவுகள் அனைத்தும் ஸ்கைஸ்கேன்னர் நிறுவனத்தின் கட்டமைப்பின் அடிப்படையிலேயே உங்களுக்கு முடிவுகளை வழங்கும். அதாவது நீங்கள் நேரடியாக ஸ்கைஸ்கேன்னர் நிறுவனத்தின் இணையதளத்தை பயன்படுத்தினால் என்ன முடிவுகள் கிடைக்குமோ அதற்கு நிகரான முடிவுகள் கிடைக்கும்.

Follow Us