Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பயனர்களை தற்கொலைக்கு தூண்டும் சாட்ஜிபிடி.. ஒரே வாரத்தில் 7 வழக்குப்பதிவு!

ChatGPT Risks Users Life | தற்போதைய சூழலில் உலக அளவில் ஏராளமான பொதுமக்கள் ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி செயலியை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், சாட்ஜிபிடி பயனர்களை தற்கொலைக்கு தூண்டுவதாக கலிஃபோர்னியாவில் ஒரே வாரத்தில் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பயனர்களை தற்கொலைக்கு தூண்டும் சாட்ஜிபிடி.. ஒரே வாரத்தில் 7 வழக்குப்பதிவு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 09 Nov 2025 20:08 PM IST

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் ஓபன் ஏஐ (Open AI) நிறுவனத்தின் சாட்ஜிபிடை (ChatGPT) பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சாட்ஜிபிடி குறித்த அதிர்ச்சியூட்டும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, சாட்ஜிபிடி பயனர்களை தற்கொலைக்கு தூண்டுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. உதவிக்காக சாட்ஜிபிடியை தேடி வரும் பயனர்களை அது ஆபத்தான முடிவுகளை எடுக்க வைப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், சாட்ஜிபிடி குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சாட்ஜிபிடி

தற்போதைய நிலவரப்படி உலக அளவில் தொழில்நுட்பத்தின் (Technology) உச்சமாக உள்ளது தான் செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence). இந்த செயற்கை நுண்ணறிவு அம்சம் பல்வேறு துறைகளில் பல குறிப்பிடத்தக்க மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. வேலை பலுவை குறைப்பது, பணிகளை எளிதாக்குவது ஆகிய அட்டகாசமான அம்சங்களை கொண்டுள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு அம்சத்தை மூலதனமாக வைத்து ஓபன் ஏஐ நிறுவனம் சாட்ஜிபிடியை அறிமுகம் செய்தது. இதன் மூலம் பயனர்கள் அனைத்து உதவிகளையும் பெற்றுக்கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதனை ஏராளமான மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் பயன்படுத்தியும் வருகின்றனர். இந்த நிலையில் தான், சாட்ஜிபிடி குறித்து பல அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதையும் படிங்க : வருங்காலத்தில் AI எத்தககைய மாற்றங்களை ஏற்படுத்தும்?.. வியக்க வைக்கும் கணிப்புகள்!

தற்கொலைக்கு தூண்டும் சாட்ஜிப்டி – பரபரப்பு புகார்

ஏராளமான பொதுமக்கள்  இந்த சாட்ஜிபிடி செயலியை பயன்படுத்தி வரும் நிலையில், கலிஃபோர்னியாவில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து சாட்ஜிபிடிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது இதுவரை எந்த இயந்திரமும் செய்யாத செயலை சாட்ஜிபிடி செய்வதாகவும், பயனர்களை தற்கொலைக்கு தூண்டுவதாகவும் அந்த புகார்களில் கூறப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் மட்டும் இது தொடர்பாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஐபோன் Vs ஆண்ட்ராய்டு.. இரண்டில் எது பாதுகாப்பானது?.. ஷாக் கொடுத்த ஆய்வு முடிவுகள்!

பள்ளி, கல்லூரி பிராஜெக்ட்களுக்கு உதவி தேடி வரும் மாணவர்கள், வேலைக்கு உதவி தேடி வரும் நபர்கள் ஆகியவர்களுக்கு சாட்ஜிபிடி தவறான வழிகாட்டுதல்களை வழங்குவதாக அந்த புகார்களில் கூறப்பட்டுள்ளது. பயனர்களை தவறான முடிவுகளை எடுக்க ஊக்கப்படுத்துவதோடு அவர்கள் தங்களை தாங்களே காயப்படுத்திக்கொள்ளவும் சாட்ஜிபிடி தூண்டுவதாக கூறப்பட்டுள்ளது. உலக அளவில் சாட்ஜிபிடியின் தவறான வழிகாட்டுதல்களால் பலர் தங்களது வாழ்க்கையை முடிந்துக்கொண்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில், இந்த புகார்கள் மேலும் அதிர்ச்சியூட்டும் விதமாக அமைந்துள்ளன.