Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வருங்காலத்தில் AI எத்தககைய மாற்றங்களை ஏற்படுத்தும்?.. வியக்க வைக்கும் கணிப்புகள்!

Artificial Intelligence Future Impact | செயற்கை நுண்ணறிவு அம்சம் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வரும் காலங்களில் பல்வேறு மாற்றங்களை ஏஐ மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் வரும் காலங்களில் மனித வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவு அம்சம் எத்தகைய மாற்றங்களை மேற்கொள்ளும் என்பது குறித்து பார்க்கலாம்.

வருங்காலத்தில் AI எத்தககைய மாற்றங்களை ஏற்படுத்தும்?.. வியக்க வைக்கும் கணிப்புகள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 06 Nov 2025 14:08 PM IST

தொழில்நுட்பம் (Technology) நாளுக்கு நாள் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்த வகையில், தற்போது தொழில்நுட்பத்தின் உச்சமாக உள்ளது செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சம் தான். செயற்கை நுண்ணறிவு அம்சம் அனைத்து துறைகளிலும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சாதாரன பொதுமக்களும் தங்களது அன்றாட வாழ்வில் செயற்கை நுண்ணறிவு அம்சத்தை பயன்படுத்துகின்றனர். மனிதர்களின் வாழ்விலும் ஒரு முக்கிய அம்சமாக இந்த செயற்கை நுண்ணறிவு அம்சம் மாறிவிட்ட நிலையில், வரும் காலத்தில் இந்த செயற்கை நுண்ணறிவு அம்சம் மனிதர்களின் வாழ்வில் எத்தகைய மாற்றங்களை மேற்கொள்ளும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வரும் காலத்தில் செயற்கை நுண்ணறிவு அம்சம் நமது வாழ்க்கையை எப்படி மாற்றும்?

செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் மூலம் மனிதர்களின் வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட உள்ளதாக கூறப்படுகிறது. அது குறித்து பார்க்கலாம்.

நேரத்தை குறைக்கும்

செயற்கை நுண்ணறிவு கருவிகள் ஒரு வேலையை மனிதர்களை விடவும் பல மடங்கு அதிக வேகத்துடன் செய்து முடிக்கும். பிழை இல்லாத, விரைவான செயலாற்றும் திறன் இருக்கும் எனவும், பெரிய கணக்குகளை போடுவது, தரவுகளை ஆராய்வது என பல அம்சங்களை அது கொண்டு இருக்கும் என கருதப்படுகிறது.

இதையும் படிங்க : உங்கள் வைஃபை பாஸ்வேர்டை மறந்துவிட்டீர்களா? இனி ஈஸியா கண்டுபிடிக்கலாம்

துல்லியமான விடை

கோடிக்கணக்கான டேட்டாக்களை கொடுத்தாலும் அவற்றை ஒருசில நிமிடங்களில் ஆராய்ந்து அதற்கான சரியான விடையை வழங்கும் சிறப்பு திறனை செயற்கை நுண்ணறிவு அம்சம் கொண்டு இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் மருத்து துறையில் நோய்களை கண்டறிய செயற்கை நுண்ணறிவு அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.

கடினமான ஆய்வுகளை எளிமையாக்கும்

பூமி முதல் வானம் வரை என உலகில் உள்ள பல்வேறு அம்சங்கள் குறித்து விஞ்ஞானிகள் தொடர் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆய்வுக்கும் குறிப்பிட்ட கால அளவு தேவைப்படும் பட்சத்தில் இனி வரும் காலங்களில் அத்தகைய ஆய்வுகளை செயற்கை நுண்ணறிவு அம்சம் மிகவும் எளிதானதாக மாற்றிவிடும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க : இந்த 5 வழிகள் மூலம் வாட்ஸ்அப்பில் ரூ.1 லட்சம் சம்பாதிக்கலாம் – எப்படி தெரியுமா?

இரவு, பகல் பாராது சேவை

செயற்கை நுண்ணறிவு அம்சம் இரவு, பகல் பாராமல் உழைக்கும் அம்சத்தை கொண்டு இருக்கும் என்றும் இதன் காரணமாக தொடர்ந்து எந்த வித இடைவெளியும் இல்லாமல் பொதுமக்கள் சேவைகளை பெற முடியும் என்றும் கூறப்படுகிறது.