Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நவம்பரில் அறிமுகமாக வரிசை கட்டி நிற்கும் ஸ்மார்ட்போன்கள்.. பட்டியல் இதோ!

New Smartphones to Launch in November | ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில், நவம்பர் மாதம் சில நிறுவனங்கள் அறிமுகம் செய்ய உள்ள புதிய ஸ்மார்ட்போன்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

நவம்பரில் அறிமுகமாக வரிசை கட்டி நிற்கும் ஸ்மார்ட்போன்கள்.. பட்டியல் இதோ!
ஸ்மார்ட்போன்கள்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 01 Nov 2025 19:29 PM IST

ஸ்மார்ட்போன் (Smartphone) நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் தங்களது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில், தற்போது நவம்பர் மாதம் தொடங்கியுள்ளதால் பல முன்னணி நிறுவனங்கள் தங்களது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய வரிசை கட்டி நின்றுக்கொண்டு இருக்கின்றன. குறிப்பாக, ஒன்பிளஸ் 15 (OnePlus 15), லாவா அக்னி 4 (Lava  Agni 4) உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக உள்ளன. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

நவம்பரில் அறிமுகமாக வரிசை கட்டி நிற்கும் ஸ்மார்ட்போன்கள்

ஒன்பிளஸ் 15

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் புதிய மாடல் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போன் நவம்பர் 13, 2025 இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. 7,300 mAh பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.60,000 முதல் ரூ.70,000 வரை விற்பனை செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : Oppo Find X9, Oppo Find X9 Pro ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.. சிறப்பு அம்சங்கள் என்ன?

லாவா அக்னி 4

லாவா (Lava) நிறுவனத்தின் லாவா அக்னி 4 ஸ்மார்ட்போன் நவம்பரில் அறிமுகமாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் Full HD+ டிஸ்பிளே, 4nm மீடியாடெக் டைமன்சிட்டி 8350 சிப்செட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இது ரூ.25,000-க்கு அறிமுகமாகும் என கூறப்பட்டுகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கான அறிமுக தேதி குறித்து அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடவில்லை.

ரியல்மி ஜிடி 8 ப்ரோ

ரியல்மி 8ஜிடி (Realme 8GT) ஸ்மார்ட்போன் நவம்பரில் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. 7,000 mAh பேட்டரி, 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் என பல அட்டகாசமான அம்சங்களை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.59,999-க்கு இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : Spam Calls: போன் வரும்போது பெயரும் வரும்.. ஸ்பேம் கண்டறிய களத்தில் இறங்கிய தொலைத்தொடர்பு துறை!

iQOO 15

இந்த iQOO ஸ்மார்ட்போன் 8 எலைட் ஜென் 5 SoC, சாம்சங் எம்14 AMOLED டிஸ்பிளே என பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. இது இந்தியாவில் ரூ.54,999-க்கு அறிமுகமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் நவம்பர் 26, 2025 அன்று அறிமுகமாக உள்ளது.