Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Spam Calls: போன் வரும்போது பெயரும் வரும்.. ஸ்பேம் கண்டறிய களத்தில் இறங்கிய தொலைத்தொடர்பு துறை!

Calling Name Presentation: தொழில்நுட்ப ரீதியாக Calling Name Presentation (CNAP) என்று அழைக்கப்படும் இந்த புதிய சேவை, அழைப்பை மேற்கொள்ளும்போது அழைப்பவரின் பெயரை காண்பிக்கும். ஒவ்வொரு சந்தாதாரரின் சிம் கார்ட் வாங்கப்பட்ட பெயரை கொண்டு, அழைப்பு வரும்போது, 4 ஜி மற்றும் 5 ஜி நெட்வொர்க் வழியாக அழைப்பு வந்தால், அழைப்பு வரும் செல்போனில் பெயர் மற்றும் எண் இரண்டும் காண்பிக்கப்படும்.

Spam Calls: போன் வரும்போது பெயரும் வரும்.. ஸ்பேம் கண்டறிய களத்தில் இறங்கிய தொலைத்தொடர்பு துறை!
ஸ்பேம் கண்டறிதல்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 29 Oct 2025 21:26 PM IST

ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள இன்றைய காலத்தில் செல்போன்களே (Cell Phone) அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், ஸ்பேம், மோசடி மற்றும் தேவையற்ற அழைப்புகள் காரணமாக நாம் பெரியளவில் சிரமத்தை எதிர்கொள்கிறோம். இந்த சிரமத்தை தவிர்க்கும் வகையில், மத்திய அரசு (Central Govt) ஒரு முக்கிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது. அதன்படி, அழைப்பு வரும்போது இனிமேல் எண் மட்டுமல்ல, அழைப்பவரின் பெயரும் தெரியவரும். இதற்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், தொலைத்தொடர்புத் துறையின் ஒரு திட்டத்தை அங்கீகரித்துள்ளது. இது பயனர்கள் அழைப்பை ஆன் செய்வதற்கு முன்பே யார் அழைக்கிறார்கள் என்பதை அறிய அனுமதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஸ்பேம் மற்றும் மோசடி அழைப்புகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சேவை பெரும்பாலான 4 ஜி மற்றும் 5 ஜி அழைப்பாளர்களுக்கு மட்டும் பெற முடியும். அதேநேரத்தில், தொழில்நுட்ப காரணங்களால் 2 ஜி பயன்படுத்துபவர்களால் உடனடியாக பலனை பெற முடியாது.

ALSO READ: தவறாக இருந்தாலும் ஏஐ சாட்பாட்கள் உங்கள் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

இந்த சேவை எப்போது தொடங்கும்..?


தொழில்நுட்ப ரீதியாக Calling Name Presentation (CNAP) என்று அழைக்கப்படும் இந்த புதிய சேவை, அழைப்பை மேற்கொள்ளும்போது அழைப்பவரின் பெயரை காண்பிக்கும். ஒவ்வொரு சந்தாதாரரின் சிம் கார்ட் வாங்கப்பட்ட பெயரை கொண்டு, அழைப்பு வரும்போது, 4 ஜி மற்றும் 5 ஜி நெட்வொர்க் வழியாக அழைப்பு வந்தால், அழைப்பு வரும் செல்போனில் பெயர் மற்றும் எண் இரண்டும் காண்பிக்கப்படும்.

அதேநேரத்தில், அழைப்பு 2 ஜி அல்லது மிகவும் பழைய நெட்வொர்க்கிலிருந்து வந்தால், எண் மட்டுமே காண்பிக்கப்படும். இந்த பெயர் வாடிக்கையாளர் விண்ணப்ப படிவம் வழங்கப்பட்ட பெயரிலிருந்து எடுக்கப்பட்டதாக தகவல் மையம் தெரிவித்துள்ளது. இந்த அம்சம் இயல்பாகவே அனைத்து புதிய அழைப்பாளர்களுக்கும் பொருந்தும். ஆனால், பயனர்கள் விரும்பவில்லை என்றால் விலகுவதற்கான விருப்பமும் அதில் இருக்கும்.

ALSO READ: ரஃபேல் போர் விமானத்தில் பறந்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு!

இதன் நன்மைகள் என்ன..?

ஸ்பேம் உள்ளிட்ட தேவையற்ற அழைப்புகளை குறைக்க இந்த திட்டம் வாய்ப்புள்ளது. எடுத்துக்காட்டாக, அழைப்பவரின் பெயர் உங்களுக்கு தெரியவில்லை என்றால், பயனர்கள் பெரும்பாலும் அழைப்புகளை ஏற்க மாட்டார்கள். அதேநேரத்தில், முக்கியமான அழைப்புகளையும் தவறவிடலாம். இப்படியான சூழ்நிலையில், பெயர்களை தானாக தெரிந்துகொள்வது உங்களுக்கு நம்பிக்கை தரும். தெரியாத எண்கள் ஸ்பேமாக இருந்தால், இது முக்கிய கருவியாக இருக்கும். இப்போது, பெயர்கள் தெரியும் என்பதால், ஸ்பேம் எண்கள் நன்றாக தெரியும். இதனால், அழைப்பிற்கு பதிலளிக்கலாமா இல்லையா என்பதை பயனர்கள் முன்கூட்டியே தீர்மானிக்க முடியும்.