VIDEO: ரஃபேல் போர் விமானத்தில் பறந்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு!
President Droupadi Murmu sets record in Ambala: குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று ரஃபேல் விமானத்தில் பறந்துச் சென்றார். பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள இந்த போர் விமானத்தில், ஆயுதப் படைகளின் உச்ச தளபதியான அவர் சென்றது வரலாற்று சிறப்புமிக்கதாக பார்க்கப்படுகிறது.
ஹரியானா, அக்டோபர் 29: குடியரசுத் தலைவர் ஹரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து ரஃபேல் விமானத்தில் முதல்முறையாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு (Droupadi Murmu) பறந்தார். விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் பிரீத் சிங், விமானப்படை நிலையத்தில் இருந்து, திரெளபதி முர்முவை முறைப்படி வரவேற்று, மரியாதை செய்தார். அதோடு, அவருக்கு விமானப்படை சார்பில் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. மேலும், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் இந்த போர் விமானப் பயணம், நாட்டின் வரலாற்று சிறப்புமிக்கதாக பார்க்கப்படுவதுடன், இந்திய பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலும் அமைந்துள்ளது.
ரஃபேல் போர் விமானத்தின் சிறப்பு:




பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத் தயாரிப்பான ரஃபேல் விமானம், இந்திய விமானப்படையில் கடந்த 2020, செப்டம்பரில் முறைப்படி இணைக்கப்பட்டது. தற்போது 36 விமானங்கள் செயல்பாட்டில் உள்ள நிலையில், மேலும் 114 விமானங்களைக் கொள்முதல் செய்ய விமானப் படை தரப்பில் முன்மொழியப்பட்டுள்ளது. அதோடு, இந்த ரஃபேல் ஜெட் 4.5-ஆவது தலைமுறை போர் விமானமாகக் கருதப்படுகிறது. இவை எதிரிகளை அழிக்க ஒப்பிடமுடியாத ஆயுத அமைப்புகளையும், பல்வேறு வகையிலான சென்சார்களையும் கொண்டுள்ளது. இந்த ஜெட் விமானத்தால் மணிக்கு 1,900 கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 3,700 கிலோமீட்டர் வரை பறக்க முடியும்.
Also read: 8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!!
இதன் முக்கியம்சமாக, கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு, பதிலடியாக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ (Operation sindoor) நடவடிக்கையின்போது ரஃபேல் போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. அப்போது ரஃபேல் விமானங்கள் பாகிஸ்தான் விமானப்படையை (PAF) வென்று, இந்தியாவின் பாதுகாப்பு திறனை நிரூபித்தன.
முன்னதாக, கடந்த 2023-ம் ஆண்டு அசாமின் தேஜ்பூர் விமானப் படைத்தளத்தில் இருந்து சுகோய் 30 ரக போர் விமானத்தில் திரெளபதி முர்மு பயணம் செய்துள்ளார். அவருக்கு முன்பு முன்னாள் குடியரசுத் தலைவர்கள் அப்துல் கலாம் (2006) மற்றும் பிரதீபா பாட்டீல் (2009) ஆகியோர் சுகோய்-30 எம்கேஐ போர் விமானத்தில் பயணித்திருந்தனர். அதன்பிறகு 3வது குடியரசுத் தலைவராகவும், 2வது பெண் குடியரசுத் தலைவராகவும் திரெளபதி முர்மு இந்த பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
Also read: எந்தெந்த மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி..? எப்போது தொடக்கம்..? முழு விவரம் இதோ!
ரஃபேல் போர் விமானத்தில் பறந்த திரெளபதி முர்மு:
राष्ट्रपति #द्रौपदी_मुर्मु भारतीय वायुसेना के अत्याधुनिक लड़ाकू विमान राफ़ेल में ऐतिहासिक उड़ान भरी।#DroupadiMurmu #Rafale #IndianAirForce #Ambala@rashtrapatibhvn @IAF_MCC pic.twitter.com/LYsAPTRSLD
— आकाशवाणी समाचार (@AIRNewsHindi) October 29, 2025
முன்னதாக, ஹரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று வருகை தந்து, ரபேல் போர் விமானத்தில் பயணிப்பார் என்று குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவித்திருந்தது. அதன்படி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இன்று ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்துக்கு சென்றார். அங்கு அவருக்கு விமானப்படை வீரர்கள் சார்பில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், உரிய பாதுகாப்புகளுடன் ரஃபேல் விமானத்தில் முதல்முறையாக அவர் பறந்தார். இது ஆயுதப் படைகளுடனான அவரது பயணத்தில் மற்றொரு மைல்கல்லாக அமைந்தது.