Droupadi Murmu: ரஃபேல் விமானத்தில் பறக்கப்போகும் குடியரசு தலைவர் முர்மு.. நாளை புதிய வரலாறு..!
Droupadi Murmu will fly a Rafale Jet: ரஃபேல் என்பது பிரெஞ்சு நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் தயாரித்த நவீன 4.5 தலைமுறை பல்நோக்கு போர் விமானமாகும். கடந்த 2016ம் ஆண்டு இந்தியா சுமார் ரூ. 59,000 கோடி செலவில் ரஃபேல் ஜெட் விமானங்களை வாங்கியது. இந்த ஜெட் விமானங்கள் வான்வழிப்போர், தரைவழித் தாக்குதல் மற்றும் கடல்சார் ரோந்துக்கு பயன்படுத்தப்படுகின்றன.
2025 அக்டோபர் 29ம் தேதியான நாளை ஹரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படை நிலையத்தில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம் நிகழ இருக்கிறது. இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு (Droupadi Murmu) ரஃபேல் போர் விமானத்தில் பறக்க இருக்கிறது. இது அவரது குடியரசு தலைவர் பதவியில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக அமையும். இந்தப் போர் விமானம் இந்திய விமானப்படையின் (Indian Air Force) வலிமையையும் இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களையும் வெளிப்படுத்தும். இந்திய குடியரசு தலைவர் முர்மு இந்திய ஆயுத படைகளின் உச்ச தளபதி ஆவார். அதன்படி, இந்த பதவியை வகிக்கும் முதல் பழங்குடிப் பெண்மணி மற்றும் இரண்டாவது பெண்மணி ஆவார்.
2023ல் SU-30 MKIல் பறந்த குடியரசு தலைவர்:
President of India Droupadi Murmu will visit Ambala, Haryana, tomorrow, where she will take a Sortie in Rafale
Earlier on April 8, 2023, the President took a sortie in a Sukhoi 30 MKI fighter aircraft at the Tezpur Air Force Station, Assam
Read here: https://t.co/1fYarch9D4…
— PIB India (@PIB_India) October 28, 2025
முன்னதாக, கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அசாமில் உள்ள தேஸ்பூர் விமானப்படை நிலையத்தில் சுகோய் – 30 எம்கேஐ போர் விமானத்தை இயக்கினார். இந்திய குடியரசு தலைவர் ஒருவர் போர் விமானத்தை ஓட்டுவது இது மூன்றாவது முறையாகும். திரௌபதி முர்மு பயணித்த போர் விமானம் வேகம் மணிக்கு 2,000 கிலோமீட்டரை 30 நிமிடஙக்ளில் கடந்தது. இதுகுறித்து பேசிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, “ இந்த அனுபவம் அற்புதமானது. இந்திய விமானப்படையின் வலிமையை கண்டு பெருமைப்படுகிறேன். இந்த விமானம் வரலாற்று சிறப்புமிக்கது மட்டுமல்லாமல் பெண்கள் இராணுவத்தில் சேர ஊக்குவிக்கும்” என்றார்.




ALSO READ: எந்தெந்த மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி..? எப்போது தொடக்கம்..? முழு விவரம் இதோ!
ரஃபேல் ஜெட் விமானம் பற்றிய விவரம்:
ரஃபேல் என்பது பிரெஞ்சு நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் தயாரித்த நவீன 4.5 தலைமுறை பல்நோக்கு போர் விமானமாகும். கடந்த 2016ம் ஆண்டு இந்தியா சுமார் ரூ. 59,000 கோடி செலவில் ரஃபேல் ஜெட் விமானங்களை வாங்கியது. இந்த ஜெட் விமானங்கள் வான்வழிப்போர், தரைவழித் தாக்குதல் மற்றும் கடல்சார் ரோந்துக்கு பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஜெட் விமானம் மணிக்கு 1,900 கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 3,700 கிலோமீட்டர் வரை பறக்க முடியும்.
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை போல ஒரு பெண் போர் விமானத்தை ஓட்டுவது, இராணுவம் மற்றும் அறிவியல் துறையில் உள்ள பெண்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும். இது இந்தியாவின் பாதுகாப்பில் வளர்ந்து வரும் தன்னம்பிக்கையை நிரூப்பிக்கிறது.