ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு.. அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு!
Air India Flight Technical Issue | அசாமி இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. அப்போது விமானத்தின் இறக்கையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை கண்டறிந்த விமானிகள் உடனடியாக விமானத்தை தரையிறக்கியுள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு வந்த பொறியாளர்கள் விமானத்தின் சிக்கலை சரிசெய்தனர்.

கவுகாத்தி, அக்டோபர் 21 : அசாமில் (Assam) இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் (Air India Flight) திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட நிலையில், அந்த விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அதில் பயணம் செய்த பயணிகள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். விமானத்தில் இருக்கும் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஏர் இந்தியா விமான கோளாறு குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட கோளாறு
அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள லோக்பிரியா கோபிநாத் போர்டோலேப் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று (அக்டோபர் 20, 2025) காலை 12.20 மணிக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்படுவதற்கு தயாராக இருந்துள்ளது. அந்த விமானம், திப்ருகார் விமான நிலையத்திற்கு செல்வதற்காக இருந்துள்ளது. அதாவது கவுகாத்தியில் இருந்து புறப்படும் அந்த விமானம் சரியாக 1.25 மணிக்கு திப்ருகார் விமான நிலையத்திற்கு சென்றடையும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : சைவத்திற்கு பதிலாக அசைவ பிரியாணி.. ஆத்திரத்தில் உணவக உரிமையாளரை துப்பாக்கியால் சுட்ட நபர்




அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்
விமானம் கவுகாத்தி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்த நிலையில், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் இறக்கை பகுதியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. அதனை கண்டறிந்த விமானிகள் உடனடியாக விமானத்தை, கவுகாத்தி விமான நிலையத்திற்கு திருப்பி அவசர அவசரமாக தரையிறக்கியுள்ளனர். இதன் காரணமாக பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கொட்டாவியால் இளைஞருக்கு வந்த சிக்கல்.. மீண்டும் வாயை மூட முடியாமல் அவதி!
விரைந்து சிக்கலை சரிசெய்த பொறியாளர்கள்
விமானம் தரையிறக்கப்பட்ட நிலையில், அங்கு வந்த பொறியாளர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு சிக்கலை கண்டறிந்து அதனை மிக விரைவாக சரிசெய்துள்ளனர். இதனை தொடர்ந்து சீரான, ஏர் இந்தியா விமானம் கவுகாத்தியில் இருந்து புறப்பட்டு மாலை 6.20 மணிக்கு திப்ருகார் விமான நிலையத்திற்கு சென்றடைந்துள்ளது. விமானத்தில் ஏற்பட்ட கோளாறு கண்டறியப்பட்டு உடனடியாக அது சரிசெய்யப்பட்ட நிலையில், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.