ஒரே மேடையில் இரண்டு பெண்களை காதல் திருமணம் செய்த இளைஞர்!
Man Married Two Woman at the Same Time | கர்நாடகாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் இரண்டு பெண்களை ஒரே மேடையில் வைத்து திருமணம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பெங்களூரு, அக்டோபர் 19 : கர்நாடகா (Karnataka) மாநிலம் ஹொரபேட்டை பகுதியை சேர்ந்தவர் 25 வயதான வாசீம் சேக். இவர் கோவாவுக்கு வேலைக்கு சென்றுள்ளார். அந்த இடத்தில் ஷைபா சேக் மற்றும் ஜன்னத் கந்தர் ஆகிய இரண்டு பெண்களை அவர் சந்தித்துள்ளார். அவர்களுடன் நெருங்கி பழகவும் தொடங்கியுள்ளார். இந்த நிலையில் தான் வாசீம் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்துள்ளார். அவரின் முடிவை தெரிந்துக்கொண்ட தோழிகள் இருவரும் வாசீமை திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஒரே மேடையில் இரண்டு பெண்களை திருமணம் செய்த இளைஞர்
தனது இரண்டு தோழிகளும் தன்னை திருமணம் செய்துக்கொள்ள விரும்பம் தெரிவித்த நிலையில், வாசீம் முதலில் தயங்கியுள்ளார். ஆனால் அவரது தோழிகள் தங்களது முடிவில் பிடிவாதமாக இருந்துள்ளனர். இந்த நிலையில், அவர் அவர்களை திருமணம் செய்துக்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். பின்னர் வாசீம் மற்றும் அவரது தோழிகள் தங்களது குடும்பத்திடம் இது குறித்து பேசி சம்மதத்தையும் பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க : குழந்தைக்கு கொடுக்கப்பட்ட மருந்தில் நெளிந்த புழுக்கள்.. மபியில் அதிர்ச்சி சம்பவம்!




இரண்டு பெண்களை திருமணம் செய்வதற்கு வரவேற்பு தெரிவித்த குடும்பத்தினர்
அனைவரது சம்மதத்தை தொடர்ந்து அக்டோபர் 16, 2025 அன்று சிதர்துர்கா மாவட்டம் , ஹொரப்பேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வாசீம் தனது தோழிகளை திருமணம் செய்துக்கொண்டுள்ளார். ஒரே மேடையில் வைத்து தனது இரண்டு தோழிகளையும் அவர் கரம் பிடித்துள்ளார். திருமணத்தை தொடர்ந்து நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியிலும் வாசீம் தனது இரண்டு மனைவிகளுடன் பங்கேற்றார். அதுமட்டுமன்றி அவர் தனது மனைவிகளுடன் நடனமாடியுள்ளார். அது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : மந்திரவாதியுடன் கள்ளக்காதல்.. காதலனுடன் திட்டமிட்டு கணவனை கொலை செய்த மனைவி!
இந்த திருமணம் குறித்து கருத்து தெரிவித்துள்ள மணமக்களின் குடும்பத்தினர், இவர்கள் 3 பேரும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். ஆனால், ஒன்றாகவே தங்களது வாழ்க்கை பயணத்தை தொடர முடிவு செய்து திருமணம் செய்துக்கொண்டனர் என்று அந்த திருமணத்திற்கு வரவேற்பு தெரிவிக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ளனர். குடும்பத்தாரின் அனுமதியுடனும், ஆசிர்வாதத்துடன் இந்த திருமணம் நடைபெற்று இருந்தாலும் இந்த திருமண விழாவில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.
இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், அது தொடர்பாக பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.