Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட பெண்.. பகீர் பின்னணி!

Mother Killed Children and Killed Herself | ஆந்திராவில் குழந்தைக்கு பேச்சு வரவில்லை என கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், மனமுடைந்த மனைவி பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிள்ளைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட பெண்.. பகீர் பின்னணி!
உயிரிழந்தவர்கள்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 16 Oct 2025 19:41 PM IST

நகரி, அக்டோபர் 16 : ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்தவர் சாய் லட்சுமி என்ற 27 வயது இளம் பெண். இவருக்கு 30 அணில் குமார் என்ற மென் பொறியாளருடன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் இருவரும் ஹைதராபாத்தில் வசித்து வந்த நிலையில், அவர்களுக்கு சேதன் கார்த்திகேயா மற்றும் லாஸ்யத வள்ளி என்ற ஒரு ஆண் ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த குழந்தைகளுக்கு இரண்டு வயது ஆன நிலையில், மகன் சேதன் கார்திகேயாவுக்கு பேச்சு வராமல் இருந்துள்ளது.

மகனுக்கு பேச்சு வராததால் கணவன் – மனைவி இடையே தகராறு

மகன் பேசாத விரக்தியில் இருந்த அணில் குமார் அது தொடர்பாக மனைவியிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளார். அதுமட்டுமன்றி, தனது மகன் பேசாததற்கு மரபு பிரச்னை தான் காரணம் என நினைத்த அவர், தனது மனைவியை குறை கூறி வந்துள்ளார். மகனுக்கு பேச்சு வர வேண்டும் என்பதற்காக சாய் லட்சுமி மருத்துவமனைகளுக்கு சென்று வந்துள்ளார். இருப்பினும் கணவன் – மனைவிக்கு இடையேயான அந்த சிக்கல் தீராமலே இருந்துள்ளது.

இதையும் படிங்க : லிஃப்ட் கொடுப்பதாக கூறி இளம்பெண் பாலியல் வன்கொடுமை – இருவர் கைது

குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட பெண்

மகன் பேசாத விவகாரம் முற்றிய நிலையில், கணவன் மனைவி பல மாதங்களாக பேசமாலே இருந்துள்ளனர். இந்த நிலையில் அணில் குமார் விசாகப்பட்டினத்தில் உள்ள தனது சகோதரர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது இனியும் வாழ கூடாது என முடிவு எடுத்த சாய் லட்சுமி தூங்கிக்கொண்டு இருந்த தனது பிள்ளைகளை தலையணை வைத்து அழுத்தி கொலை செய்துள்ளார். பின்னர் தானும் தற்கொலை செய்துக்கொள்வதற்கு முன்னதாக தனது பெற்றோருக்காக வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க : 31வது மாடியில் இருந்து கீழே விழுந்த இளம் என்ஜினீயர்.. பரிதாபமாக பலியான சோகம்!

அந்த வீடியோவில் அவர் மாற மாட்டார். அதனால் மிகவும் வேதனையாக இருந்த போதிலும் இந்த தவறை செய்கிறேன். நான் இல்லாத பொழுது என் பிள்ளைகள் உயிரோடு இருப்பது அவசியமில்லை. என்னை மன்னித்து விடுங்கள் என்று வீடியோ பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த வீடியோவின் அடிப்படையில் சாய் லட்சிமியின் கணவர், மாமியார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.