கிணற்றில் குதித்த பெண்.. மீட்பு பணியின்போது 3 பேர் பலி.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!
3 Died in Well Rescue Tragedy in Kollam | கேரளாவில் கிணற்றில் குதித்த பெண்ணை மீட்பதற்காக மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கிணற்றின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்லம், அக்டோபர் 14 : கேரளாவில் (Kerala) கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றும் பணியில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீட்பு பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருந்தபோது கிணற்றின் சுற்று சுவர் இடிந்து விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கிணற்றில் விழுந்த பெண்ணை காப்பாற்றும் பணியில் மூன்று பேர் உயிரிழந்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கிணற்றில் விழுந்த பெண்ணை காப்பாற்றும் பணியின் போது விபரீதம்
கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் 33 வயதான அர்ச்சனா என்ற பெண். இந்த பெண் சம்பத்தன்று அங்குள்ள சுமார் 80 அடி ஆழா கிணற்றில் குதித்துள்ளார். இது தொடர்பாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதாவது சோனி குமார் என்ற தீயணைப்பு வீரர் பாதுகாப்பு உபகரணங்களுடன் கிணற்றில் இறங்கி அர்ச்சனாவை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதையும் படிங்க : 4 பிள்ளைகளுடன் தற்கொலை செய்துக்கொண்ட தாய்.. அழுகிய நிலையில் உடல்கள் மீட்பு.. பகீர் சம்பவம்!
திடீரென இடிந்து விழுந்த கிணற்றின் சுவர்
மீட்பு பணியின் போது திடீரென கிணற்றின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. அப்போது சுவர், கிணற்றில் இருந்த அர்ச்சனா மற்றும் தீயணைப்பு வீரர் குமார் ஆகியோர் மீது விழுந்துள்ளது. அதுமட்டுமன்றி, கிணற்றின் ஓரம் நின்றுக்கொண்டு இருந்த அர்ச்சனாவின் நண்பரான சிவகிருஷ்ணன் என்பவர், சுவர் இடிந்து விழுந்ததால் கிணற்றுக்குள் விழுந்துள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பாலியல் துன்புறுத்தல்…. ஐடி ஊழியர் தற்கொலை – வெளியான இன்ஸ்டாகிராம் பதிவு
மூன்று பேரும் பலியான சோகம்
தீயணைப்பு துறையின் உதவியுடன் மீட்கப்பட்ட அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால், அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த விவகாரத்தின் முதற்கட்ட விசாரணை தகவலின் படி, அரச்சனாவுக்கும் அவரது நண்பர் சிவகிருஷ்ணன் என்பவருக்கும் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக அவர் கிணற்றில் குதித்தது தெரி வந்துள்ளது.
கிணற்றில் விழுந்த பெண்ணை காப்பாற்றும் பணியில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.