இரவில் நாகினி பாம்பாக மாறும் மனைவி.. அதிர்ந்த கணவர்.. வினோத சம்பவம்!
Uttar Pradesh Man Bizarre Complaint : இரவில் தனது மனைவி பாம்பாக மாறி தன்னை கடிப்பதாக உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார். தன்னை இரவில் அவர் கொலை செய்ய முயற்சிப்பதாகவும் அவர் புகார் மனுவில் கூறியுள்ளார்.

உத்தர பிரதேசம், அக்டோபர் 08 : உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் காவல்நிலையத்தில் வினோத புகார் ஒன்றை அளித்துள்ளார். அதாவது, தன் மனைவி இரவில் பாம்பாக மாறி தன்னை கடிப்பதாக அவர் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பாம்பு கடியால் பலரும் உயிரிழந்து வருகின்றனர். அப்படி இருக்கும்போது, மனைவி பாம்பாக மாறியதாக படத்தில் வருவது போன்று, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் வினோதமாக புகார் அளித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் மஹ்மூதாபாத் பகுதியில் உள்ள லோத்சா கிராமத்தில் வசிப்பவர் மீராஜ். இவரது மனைவி நசீமுன். இவர் தனது மனைவி நசீமுன் மீது நூதன புகார் ஒன்றை அளித்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நடைபெற்றது. அக்கூட்டத்தில் லோத்சா பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். அவர்கள் சாலைகள், ரேஷன் கார்டு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
அப்போது, மீராஜ் வினோத புகார் ஒன்றை அளித்தது பேசும் பொருளாக மாறியது. அதாவது, அந்த புகார் மனுவில், ஐயா, என் மனைவி நசீமுன் இரவில் பாம்பாக மாறி என்னை துரத்துகிறார். என்னை பலமுறை பாம்பாக மாறி இரவில் கடித்திருக்கிறார். என் மனைவி என்னை மனரீதியாக சித்திரவதை செய்கிறாள். நான் தூங்கும்போது எந்த இரவிலும் என்னைக் கொல்லக்கூடும். தனது மனைவி பலமுறை தன்னைக் கொல்ல முயன்றார். ஆனால், ஒவ்வொரு முறையும் நான் தாக்குதலை தடுக்கப்பதால் நான் உயிருடன் இருக்கிறேன்.
Also Read : இமாச்சல பிரசேதத்தில் அதிர்ச்சி.. நிலச்சரிவில் பேருந்து சிக்கி 15 பேர் உயிரிழப்பு!




இரவில் நாகினி பாம்பாக மாறும் மனைவி
திருமணமானதிலிருந்து, தனது மனைவி இரவில் பாம்பாக மாறி தன்னைக் கொல்ல முயற்சி செய்கிறார்” என்றார். இவரது புகார் மனு அங்கிருப்பவர்களை அதிர்ச்சிகுள்ளாகியது. இதனை அடுத்து, மாவட்ட ஆட்சிசயர் விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுத்து, அறிக்கை அளிக்குமாறு எஸ்.டி.எம் உத்தரவிட்டுள்ளது.
மேராஜின் கூற்றுப்படி, அவரது மனைவி ஏற்கனவே இரவில் பாம்பாக மாறி ஒருமுறை கடித்ததாகவும், அதன்பிறகு தொடர்ந்து கடிக்க துரத்துவதாக அவர் குற்றச்சாட்டியுள்ளார். இந்த விஷயம் உண்மையா அல்லது வேறு ஏதேனும் கட்டுக்கதையா என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரித்து வருவதாக தெரிகிறது.
Also Read : அரசு அலுவலகர்கள் இனி சோஹோ ஆஃபிஸ் பயன்படுத்த வேண்டும் – மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு
இந்த செய்தி சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியது. நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதாவது, நீங்களும் ஒரு நாகப்பாம்பாக மாற வேண்டும் என்று பயணர் ஒருவர் கூறியுள்ளார். “அந்த மனிதர் மிகவும் அதிர்ஷ்டசாலி. அவர் தனது திருமண வாழ்க்கையில் ஸ்ரீதேவியைக் கண்டுபிடித்தார்” என்று மற்றொருவர் நகைச்சூவையாக பதிவிட்டுள்ளார்.