வரதட்ணை கேட்டு கொலை.. கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்.. நடந்தது என்ன?
Uttar Pradesh Murder : உத்தர பிரதேச மாநிலத்தில் வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணியை அவரது கணவர் அடித்தே கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கூடுதலாக ரூ.5 லட்சம் கேட்டு கர்ப்பிணியை துன்புறுத்தி கணவர் மற்றும் அவரது உறவினர்கள் கொலை செய்தது தெரியவந்துள்ளது.

உத்தர பிரசேதம், அக்டோபர் 06 : உத்தர பிரதேசத்தில் வரதட்சணை கேட்டு கர்ப்பிணியை கணவர் மற்றும் குடும்பத்தினர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூடுதலாக ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு, கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கர்ப்பிணை கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. நாட்டில் வரதட்சணை கொடுமையால் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிலர் விபரீத முடிவுகளையும் எடுத்து வருகின்றனர். மேலும், வரதட்சணை கொடுமையால் பெண்கள் கொலை செய்யப்பட்டும் வருகின்றனர். வரதட்சணைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. வரதட்சணைக்கு எதிராக கடும் சட்டங்கள் இருந்தாலும், அதை கேட்பது தொடர் கதையாகி வருகிறது.
அப்படியொரு சம்பவம் தான் தற்போது உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் வரதட்சணை கேட்டு கர்ப்பிணியை அவரது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், மெயின்புரி மாவட்டத்தில் உள்ள கோபால்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெண் ரஜ்னி குமாரி (21). அதே பகுதியைச் சேர்ந்தவர் சிச்சின். இவர்கள் இரண்டு பேருக்கும் 2025 ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. இப்போது ரஜ்னி குமாரி கர்ப்பமாக இருக்கிறார். திருமணத்திற்கு வரதட்சணை தங்கம், ரொக்கத்தை பெண் வீட்டார் கொடுத்ததாக தெரிகிறது.
Also Read : டிரம்மில் கிடந்த பச்சிளம் குழந்தை.. தந்தை செய்த கொடூரம்.. கடைசியில் நடந்த ஷாக்!




கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்
இருப்பினும், கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் சச்சின் மற்றும் அவரது சகோதரர்கள் ரஜ்னி குமாரியை கொடுமைப்படுத்தி வந்துள்ளதாக தெரிகிறது. வீடு ஒன்று கட்டுவதற்காக ரூ.5 லட்சத்தை வரதட்சணையாக, கணவர் சச்சின் கேட்டு தாக்கி வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவத்தன்று மீண்டும் ரஜ்னி குமாரியிடம் ரூ.5 லட்சத்தை கேட்டுள்ளனர். அப்போது, ரஜ்னி குமாரி கொடுக்க மறுத்துள்ளார்.
இதனை அடுத்து, கணவர் சச்சின் மற்றும் அவரது சகோதரர்கள் ரஜ்னி குமாரியை ஈவு இரக்கமின்றி கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் ரஜ்னி குமார் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அவரது சுனிதா தேவி, தனது மாமியார் வீட்டிற்கு வந்து ரஜ்னி குமாரியை பார்த்துள்ளார். அப்போது, அவர் ரத்த வடிந்தபடி சடலமாக கிடந்துள்ளார். உடனே ஓஞ்சா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
Also Read : சிங்கம் படம் போல நடந்த கடத்தல்.. டன் கணக்கில் மின்னணு கழிவுகள்.. குஜராத்தில் ஷாக் சம்பவம்!
இதனை அடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்ததாக தெரிகிறது. கைதானவர்கள் கணவர் சச்சின், அவரது சகோதரர்கள் பிரன்ஷு மற்றும் சஹ்பாக் மற்றும் உறவினர்கள் ராம் நாத், திவ்யா மற்றும் டினா ஆகியோர் கைதானதாக தெரிகிறது. மேலும், விசாரணையில் ரூ.5 லட்சத்தை தராததால் ரஜ்னி குமாரியை கொலை செய்து, அவரது உடலை வயலில் தகனம் செய்ததாக போலீசார் கூறினர்.