Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

காதலியை பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்த காலதன்.. தானும் தற்கொலை!

Lover Killed His Girlfriend in Andhra | ஆந்திர பிரதேசத்தில் தனியாக பேச வேண்டும் என அழைத்து காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்த காதலன், தானும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலியை பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்த காலதன்.. தானும் தற்கொலை!
கொலை செய்த நபர்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 04 Oct 2025 09:02 AM IST

காகிநாடா, அக்டோபர் 04 : ஆந்திராவில் (Andhra) காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்த இளைஞர், தானும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலியை தனியாக பேச அழைத்த அந்த இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் அந்த பெண்ணை கொலை செய்துள்ளார். இந்த நிலையில்,  காதலியை அவரது காதலன் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட விவகாரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்த காதலன்

ஆந்திர பிரதேச மாநிலம் காகிநாடா மாவட்டம் துர்காடா பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி தீப்தி, இவர் 12 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த அசோக் என்ற 19 வயது இளைஞரை அவர் காதலித்து வந்துள்ளார். தசரா பண்டிகையையொட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தீப்தி தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அசோக் சென்றுள்ளார்.

இதையும் படிங்க : அரசு வேலைக்காக இப்படியா? பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த சோகம்.. தாய் செய்த கொடூரம்!

தனியாக பேச வேண்டும் என அழைத்து கொடூர செயல் செய்த காதலன்

தீப்தி இருக்கும் இடத்திற்கு சென்ற அசோக் அவரை தனியாக பேச வருமாறு அழைத்துள்ளார். அதன்படி, தீப்தியும் அங்கு சென்றுள்ளார். தீப்தி அந்த இடத்திற்கு வந்ததும் தான் மறைத்து வைத்திருந்த பிளேடால், அந்த இளம் பெண்ணின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் கடும் ரத்தப்போக்கில் உயிருக்கு போராடிய தீப்தி ஒருசில நிமிடங்களில் அதே இடத்தில் உயிரை விட்டுள்ளார். காதலியை கொலை செய்த கையோடு அசோக், அருகில் இருந்த ரயில் தண்டாவளத்திற்கு சென்று ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க : ஆறு பேரை வீட்டில் வைத்து தீ வைத்து கொளுத்திய விவசாயி.. மூட நம்பிக்கையின் உச்சத்தில் நடைபெற்ற சம்பவம்?

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்த காதலன் தானும் தற்கொலை செய்துக்கொண்டது ஏன் என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.