Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அரசு வேலைக்காக இப்படியா? பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த சோகம்.. தாய் செய்த கொடூரம்!

Madhya Pradesh Crime News : மத்திய பிரதேசத்தில் பிறந்து மூன்று நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை பெற்றோர் காட்டில் வீசியுள்ளனர். அரசு வேலைக்காக பிறந்த குழந்தையை காட்டில் வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு கைது செய்துள்ளனர்.

அரசு வேலைக்காக இப்படியா? பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த சோகம்.. தாய் செய்த கொடூரம்!
குழந்தையை காட்டில் வீசிய பெண்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 02 Oct 2025 18:02 PM IST

மத்திய பிரதேசம், அக்டோபர் 02 : அரசு வேலைக்காக பிறந்த 3 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை  பெற்றோர் காட்டில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் அழுகை சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர், உடனே குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாராவில் உள்ள நந்தன்வாடி காட்டுப் பகுதியில் பிறந்த மூன்று நாட்ளே ஆன குழந்தைகள் கிடந்துள்ளது. குழந்தை ஒரு பாறைக்கு அடியில் இருந்துள்ளது. அப்போது குழந்தைக்கு மூச்சுத் திணறல், பூச்சிக் கடி, குளிரில் தவித்துள்ளது. இதனால், குழந்தை இரவு முழுவதும் அழுதுக் கொண்டே இருந்துள்ளது. இதனை கேட்ட அப்பகுதி கிராம மக்கள் உடனே பாறைக்கு அடியில் பார்த்த போது பச்சிளம் குழந்தை இருந்துள்ளது. அப்போது குழந்தை ரத்தம் தோய்ந்து இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் சிந்த்வாரா மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, குழந்தை தந்தை பப்லு தண்டோலியாவும், தாய் ராஜ்குமாரி தண்டோலியா ஆவர்.  இவர்கள் இருவரும் அரசு ஆசிரியாக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளன. இதில் தாய் ராஜ்குமார் கர்ப்பமடைந்தார். இதனால், கர்ப்பத்தை ரகசியமாக வைத்திருந்தார். 2025 செப்டம்பர் 23ஆம் தேதி அதிகாலை ராஜ்குமாரி வீட்டிலேயே பிரசவித்தார். இதனை அடுத்து, மூன்று நாட்களுக்கு பிறகு குழந்தையை காட்டில் வீசியது தெரியவந்துள்ளது.

Also Read : தவெகவினர் மிரட்டல்? – விஜய்க்கு எதிராக போஸ்டர் ஒட்டிய இளைஞர் தற்கொலை

அரசு வேலைக்காக தாய் செய்த கொடூரம்

இதுகுறித்து நந்தன்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கூறுகையில், “நடைபயிற்சி செய்பவர்கள்தான் முதலில் குழந்தையின் அழுகையை கேட்டனர். அது ஒரு விலங்கு என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் நாங்கள் அருகில் சென்றபோது, ​​சிறிய கைகள் இருப்பதை பார்த்தோம். உடனே கல்லை நகற்றி குழந்தை மீட்டோம். எந்த பெற்றோரும் இதைச் செய்யக்கூடாது” என்றனர்.

Also Read : ஆறு பேரை வீட்டில் வைத்து தீ வைத்து கொளுத்திய விவசாயி.. மூட நம்பிக்கையின் உச்சத்தில் நடைபெற்ற சம்பவம்?

பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 93 இன் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து பெற்றோரை கைது செய்தனர். அரசு விதியின்படி, மத்திய பிரதேசத்தில் மூன்று குழந்தைகளுக்கு மேல் வைத்திருந்தால் அரசு வேலை கிடையாது என்பது விதிமுறை என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவுகளின்படி, இந்தியாவில் மத்தியப் பிரதேசம்தான் அதிக எண்ணிக்கையிலான பிறந்த குழந்தைகள் கைவிடப்படுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.