3 வயது குழந்தையை திட்டமிட்டு பட்டினி போட்டு கொலை செய்த பெற்றோர்.. லண்டனில் இந்திய வம்சாவளி பெற்றோர் கொடூர செயல்!
Indian Couple Starves 3-Year-Old Kid | லண்டனில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைன் சேர்ந்த தம்பதி தங்களது மூன்று வயது பெண் குழந்தையை திட்டமிட்டு பட்டினி போட்டு கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

லண்டன், அக்டோபர் 02 : இங்கிலாந்தில் (England) வசிக்கும் இந்திய வம்சாவளி தம்பதியின் மூன்று வயது பெண் குழந்தை பலியான விவகாரத்தில் கடும் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அந்த குழந்தையை அவரது பெற்றோரே பட்டினி போட்டு கொலை செய்தது தெரிய வந்துள்ளது. 2023 ஆம் ஆண்டு அந்த குழந்தை உயிரிழந்த நிலையில், இத்தனை ஆண்டுகள் நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் குழந்தையின் மரணத்திற்கு அவர்களது பெற்றோர்கள் தான் காரணம் என்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மூன்று வயது குழந்தையை பட்டினி போட்டு கொலை செய்த பெற்றோர்
இங்கிலாந்து நாட்டின் ஹயேஸ் பகுதியில் உள்ள பென்னைன் வே என்ற பகுதியில் இந்திய வம்சாவளி தம்பதி வசித்து வருகின்றனர். மன்பிரீத் ஜாதனா, ஜஸ்கிரெத் சிங் ஆகிய அந்த தம்பதிக்கு மூன்று வயதில் பெனலோப் சந்திரி என்ற மூன்று வயது பெண் குழந்தை இருந்துள்ளார். இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 17 ஆம் தேதி அந்த குழந்தை தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். குழந்தை உயிரிழந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த லண்டன் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க : Ukraine : போர் முடிந்ததும் பதவி விலகி விடுவேன்.. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!




ஊட்டச்சத்து குறைப்பாடால் உயிரிழந்த குழந்தை – விசாரணையில் அம்பலம்
குழந்தையின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், அது ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குழந்தை உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதிய நிலையில் அந்த குழந்தையை அவரது பெற்றோர் திட்டமிட்டு பல மாதங்கள் பட்டினி போட்டு வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் பல ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணையில், செப்டம்பர் மாதம் தம்பதியை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு அறிக்கையையும் தாக்கல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க : துரு பிடிக்கும் நிலவு.. பூமிதான் முக்கிய காரணம்.. ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கிய நிகழ்வு!
மூன்று வயது குழந்தையை அவரது பெற்றோர்களே பட்டினி போட்டு கொலை செய்தது உறுதியான நிலையில், பெற்றோர்கள் மீதான குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அடுத்தக்கட்ட விசாரணை நடத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக டிசம்பர் 16, 2025 அன்று நீதிமன்றத்தில் அடுத்தக்கட்ட விசாரணை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.