தைவான், ஹாங்காங்கை புரட்டி போட்ட ரகசா புயல்.. 17 பேர் பலி.. 20 லட்சம் பேர் பாதிப்பு!
Super Typhoon Ragasa : ரகசா என்ற சூப்பர் சூறாவளி புயலால் ஹாங்காங், தைவான் நாடுகள் நிலைகுலைந்துள்ளது. இந்த புயல் பல பகுதிகளில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயலின் கோரதாண்டவத்தால் ஹாங்காங் வெள்ளத்தில் மிதக்கிறது. இந்த புயலாலி 20 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தைவான், செப்டம்பர் 25 : ரகசா புயலால் தைவான், ஹாங்காங் கடுமையாக பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இந்த புயலால் தைவான், ஹாங்காங்கில் 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கோர புயலால் சுமார் 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காலநிலை மாற்றத்தால் உலக நாடுகளில் கடுமையான பேரழிவை சந்தித்து வருகின்றன. சூறாவளி, வெள்ளம், நிலநடுக்கம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களால் உலக நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், உயிரிழப்புகளும் அதிகம் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தென்கிழக்கு ஆசிய நாடுகளை ரகசா புயல் தாக்கியுள்ளது. 2025ஆம் ஆண்டு மிகப்பெரிய தீவிர புயலாக ரகாசா உருவெடுத்துள்ளது. இந்த புயலால் ஹாங்காங், தைவான் கடும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.
தைவானில் இருந்து சுமார் 740 கி.மீ தொலைவில் உள்ள பிலிப்பைன்ஸில் உள்ள படேன்ஸ் தீவுகளில் ரகாசா கரையைக் கடந்தது. தைவான், ஹாங்காங்கில் ரகாசா புயலால் பல்வேறு இடங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகள், கட்டிடங்கள் அனைத்தும் நீரில் அடித்து செல்லப்பட்டன. தைவான் அனைத்து விமானங்களையும் நிறுத்தியுள்ளது. ஹாங்காங் விமான நிலையம் அடுத்த 36 மணி நேரத்திற்கு அனைத்து விமானங்களையும் நிறுத்தியுள்ளது. கிழக்கு தைவானில் உள்ள ஹுவாலியன் கவுண்டியில் இருந்து சுமார் 300 பேர் வெளியேற்றப்பட்டனர்.




Also Read : எச்1பி விசாவி கட்டண உயர்வு.. மருத்துவர்களுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா முடிவு?
தைவான், ஹாங்காங்கை புரட்டி போட்ட ரகாசா புயல்
Lake overflows with catastrophic flooding, following landslide
14 dead, 18 injured in Taiwan https://t.co/sJkA350DDh pic.twitter.com/a2heFY0FYS
— RT (@RT_com) September 24, 2025
சீன நகரமான ஷென்சென்-லிருந்து 4 லட்சம் மக்கள் வெளியேற்றப்படுகிறார்கள். இந்த வெள்ளத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தாகவும், 124 பேர் காணவில்லை. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த புயலால் அரசு அலுவலகங்கள், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதியில் வெள்ளம் சூழந்துள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
Also Read : ஏஐ பெண்களின் வேலைவாய்ப்பில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.. ஐநா பரபரப்பு தகவல்!
இந்த புயல் சீனாவின் குவாங்க்டோங் கடலோர பகுதியான தைஷான் ஜான்ஜியாங் இடையே கரையை கடக்கக் கூடும். கரையை கடக்கும்போது பலத்த காற்று வீசக்கூடும். இதனால், சீனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அங்கு வசிக்கும் மக்களை வெளியேற்றி வருகிறது. இந்த ரகாசா புயலால் தைவான், ஹாங்காங் மற்றும் சீனாவும் பாதிக்கப்பட்டுள்ளன.
அவர்களுக்கு உதவி செய்ய உலக நாடுகள் முன்வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 2009 ஆம் ஆண்டில், மொராகோட் புயல் தைவானின் தெற்கில் பெரும் அழிவை ஏற்படுத்தியது. இந்த புயலால் 700 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பில்லியன் டாலர் வரை சேதத்தை ஏற்படுத்தியது.