Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஏஐ பெண்களின் வேலைவாய்ப்பில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.. ஐநா பரபரப்பு தகவல்!

UN Report on AI Job Replacement | செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் தாக்கம் காரணமாக ஏராளமான மக்கள் தங்களது வேலைகளை இழந்து வருகின்றனர். இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவால் பெண்கள் அதிக அளவில் வேலை இழப்பை சந்திக்க கூடும் என ஐநா தெரிவித்துள்ளது.

ஏஐ பெண்களின் வேலைவாய்ப்பில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.. ஐநா பரபரப்பு தகவல்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 23 Sep 2025 20:23 PM IST

உலக அளவில் செயற்கை நுண்ணறிவின் (AI – Artificial Intelligence) தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் வளர்ச்சியால் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தங்களது வேலையை இழக்கும் நிலையில், ஐநா நடத்திய ஆய்வில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, உலக அளவில் செயற்கை நுண்ணறிவால் பெண்கள் அதிக வேலை இழப்பை சந்திக்க நேரிடுவார்கள் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு அம்சம் பெண்களின் வேலைவாய்ப்பை அதிக அளவு பாதிக்கும் என ஐநா கூறியுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உலக அளவில் ஆதிக்கம் செலுத்தும் செயற்கை நுண்ணறிவு

தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியாக செயற்கை நுண்ணறிவு அம்சம் உள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு அம்சம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. காரணம் செயற்கை நுண்ணறிவு அம்சத்தால் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தங்களது பணியை இழந்துள்ளனர். ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்கு செயற்கை நுண்ணறிவு அம்சம் காரணம் இல்லை என நிறுவனங்கள் தெரிவித்தாலும் செயற்கை நுண்ணறிவு அம்சம் மறைமுக காரணியாக செயல்பட்டு பல ஆயிரம் ஊழியர்கள் தங்களது வேலையை இழக்க முக்கிய காரணமாக உள்ளது. ஏற்கனவே செயற்கை நுண்ணறிவு அம்சத்தால் ஊழியர்கள் பல சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில், ஐநா தற்போது அதிர்ச்சியூட்டும்  தகவலை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : ஆண்களுக்கான அட்டகாசமான ஏஐ பிராம்ப்டுகள்.. இந்த ஸ்டைல்களில் உங்கள் புகைப்படங்களை எடிட் செய்யுங்கள்!

பெண்கள் அதிக வேலை இழப்பை சந்திப்பார்கள் – ஐநா ஆய்வில் தகவல்

செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் தாக்கம் மிக தீவிரமாக உள்ள நிலையில் ஐநா நடத்திய ஆய்வில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஐநாவின் அறிக்கையின் படி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தாக்கம் காரணமாக உலக அளவில் பணியாற்றும் ஆண்களில் 21 சதவீத நபர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதேபோல உலக அளவில் 28 சதவீத பெண்கள் வேலைவாய்ப்பை இழக்கக்கூடும் என்று ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகிறது.

இதையும் படிங்க : ஜெமினி இணைப்பு முதல் ஸ்மார்ட் தேடல் வரை… கூகுள் குரோமில் 10 புதிய ஏஐ வசதிகள்

செயற்கை நுண்ணறிவு அம்சத்தால் ஏற்படும் இந்த மாற்றத்தின் காரணமாக பொருளாதார சுதந்திரம் மற்றும் சமூகத்தில் அவர்களின் பங்கு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே பெண்களுக்கு உள்ள பல்வேறு தடைகளை தாண்டி பணி செய்து வரும் நிலையில்,  செயற்கை நுண்ணறிவு அம்சத்தின் தாக்கம் குறித்து ஐநா கூறியுள்ளது மேலும் அதிர்ச்சியூட்டும் வகையில் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.