Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பெண்கள் மீண்டும் பணியில் சேர இன்ஃபோசிஸ் புதிய திட்டம் – காரணம் என்ன?

Restart with Infosys: இந்தியாவில் திருமணம், குழந்தை பிறப்பு போன்ற காரணங்களுக்காக வேலையை விட்டு விலகும் பெண்களை மீண்டும் பணியில் சேர்க்க, இன்ஃபோசிஸ் நிறுவனம் ரீஸ்டார்ட் வித் இன்ஃபோசிஸ் என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பணியில் சேரும் பெண்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்குகிறது.

பெண்கள் மீண்டும் பணியில் சேர இன்ஃபோசிஸ் புதிய திட்டம் – காரணம் என்ன?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 19 Sep 2025 20:55 PM IST

இந்தியாவில் பெண்கள் (Woman) திருமணம், குழந்தை பிறப்பு போன்ற பல காரணங்களால் வேலையை விடும் சூழல் ஏற்படுகிறது. இதன் பின்னர் சிறிது இடைவேளைக்கு பிறகு அவர்களால் வேலையை தொடர முடியாத நிலை இருக்கிறது. இதன் காரணமாக அவர்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரமற்றவர்களாக காட்டுகிறது. இந்த நிலையில் இந்தப் பிரச்னைக்கு தீர்வு அளிக்கும் வைகயில் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் ரீஸ்டார்ட் வித் இன்ஃபோசிஸ் (Restart With Infosys) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பெண்கள் மீண்டும் வேலையில் இணைய இன்ஃபோசிஸ் நிறுவனம்

இன்ஃபோசிஸ் நிறுவனம் திருமணம், குழந்தை பிறப்பு போன்ற காரணங்களால் இடை நிற்கும் பெண்கள் சிறிது இடைவேளைக்கு பிறகு வேலையில் இணைவதற்காக ரீஸ்டார்ட் வித் இன்ஃபோசிஸ் என அழைக்கப்படுகிறது. இந்திய தொழில்நுட்ப துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கவும், வேலைவாய்ப்பில் பெண்களுக்கு சமமான வாய்ப்பை வழங்கவும் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : சாதாரண குடும்ப புகைப்படங்களை Class ஆக மாற்றும் Gemini AI.. எடிட் செய்வது எப்படி?

ரீஸ்டார்ட் வித் இன்ஃபோசிஸ் திட்டத்தின் நோக்கம்

இந்த திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் தொழில் அனுபவம் கொண்டுள்ள பெண்கள், குறைந்தது 6 மாதங்கள் வேலையில் இடைவேளை எடுத்து இருக்கும் பெண்கள் மீண்டும் வேலையில் சேர வாய்ப்பு வழங்குகிறது. தற்போது ஜாவா, செலினியம், டெஸ்டிங், ஓரகிள், சேல்ஸ்ஃபோர்ஸ் போன்ற பிரிவுகளில் பணியாளர்கள் வேலைக்கு சேர்த்துக்கொள்ளப்படவிருக்கின்றனர்.

பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை

இன்ஃபோசிஸ் நிறுவனம் ரீஸ்டார்ட் வித் இன்ஃபோசிஸ் திட்டத்தின் கீழ் வேலைக்கு சேரும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத் தொகை வழங்கப்படும். ஜாப் லெவல் 3ன் கீழ் பணிக்கு சேரும் பணியாளர்கள் ரூ.10,000, ஜாப் லெவல் 4ன் கீழ் பணிக்கு சேரும் பெண்கள் ரூ.25,000, ஜாப் லெவல் 5ன் கீழ் வேலைக்கு சேரும் பெண்கள் ரூ.35,000 மற்றும் ஜாப் லெவல் 6ன் கீழ் வேலைக்கு சேரும் பெண்களுக்கு ரூ.50,000ம் வழங்கப்படுகிறது. இது ஒரு பெண் பணியில் சேர்ந்த பிறகு அவருக்கு வழங்கப்படும்.

இதையும் படிக்க : இன்ஸ்டாவை கலக்கும் Retro Saree AI டிரெண்ட்.. பாதுகாப்பானதா?.. எச்சரிக்கும் வல்லுநர்கள்!

கடந்த 2024 முதல் 2025 நிதியாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனம் இந்த திட்டத்தின் மூலம் 900க்கும் மேற்பட்ட பெண்களை மேனேஜ்மென்ட் துறைகளில் நியமித்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் 500 பெண்களை வேலைக்கு சேர்ந்துள்ளனர். மேலும் கடந்த ஆண்டு மட்டும் இந்தியா முழுவதும் 15,000க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவரிகளை பணியில் சேர்த்துள்ளது.  தொழில் இடைவேளைக்கு பிறகு பெண்கள் மீண்டும் தங்களின் வேலையைத் தொடர்வதை உறுதி செய்வதே தங்கள்  நோக்கம் என இன்ஃபோசிஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது