Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

2050ல் கண்டென்ட் கிரியேட்டர்களின் தோற்றம் எப்படி இருக்கும்? – ஏஐ வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

AI Predicts Future Looks: சமூக வலைதளங்களில் கன்டென்ட் கிரியேட்டர்கள் மற்றும் இன்ஃப்ளூயன்சர்களின் தோற்றம் 2050 ஆம் ஆண்டில் எப்படி இருக்கும் என ஏஐ மூலம் மாடல் ஒன்று வெளியாகியுள்ளது. தொடர்ந்து சமூக வலைதளங்களை பயன்படுத்துவதால் அவர்களது தோற்றத்தில் பாதிப்பும் ஏற்படும் என தெரியவந்துள்ளது.

2050ல் கண்டென்ட் கிரியேட்டர்களின் தோற்றம் எப்படி இருக்கும்? – ஏஐ வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ
ஏஐ மாடல்
Karthikeyan S
Karthikeyan S | Published: 13 Sep 2025 19:59 PM IST

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற சமூக வலைதளங்களில் உள்ள இன்ஃப்ளூயன்சர்கள் (Influencers) மற்றும் கண்டென்ட் கிரியேட்டர்கள் தங்களின் அழகான தோற்றத்தின் மூலம் மக்களை கவர்கிறார்கள். ஆனால் எதிர்காலத்தில் அவர்கள் நிலைமை மிக மோசமாக இருக்கும் என ஏஐ வெளியிட்ட போட்டோ நமக்கு உணர்த்துகிறது. மற்ற துறைகளைப் போல சமூக வலைதளங்களில் இன்ஃபளூயன்சர்களும் அதிக வருமானம் ஈட்டி வருகின்றனர். இந்த நிலையில் இன்ஃப்ளூயன்சர்கள் வாழ்க்கயை பெருமளவு பாதிக்கும் எனவும் அவர்களின் முக அமைப்பே மாறும் எனவும் ஏஐ அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

2050 ஆம் ஆண்டு இன்ஃப்ளூயன்சர்களுக்கு ஏற்படும் மாற்றம்

கேசினோ.ஆர்க் (Casino.org) என்ற ததளம் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் வருகிற 2050 ஆம் ஆண்டு கண்டென்ட் கிரியேட்டர்கள் எப்படி இருப்பார்கள் என்பதைக் காட்டும் மாடல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 2050 ஆம் ஆண்டு கழுத்து எப்போதும் முன் நோக்கி சாய்ந்திருக்கும், தோள்கள் வளைந்து காணப்படும். முகத்தில் புள்ளிகள் இருக்கும். கழுத்து வலி இருக்கும் என அந்த இணையதளம் தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க : இனி வேலை ஈஸியா கிடைக்கும்… ஏஐ வேலைவாய்ப்பு தளத்தை உருவாக்கும் ஓபன்ஏஐ நிறுவனம்

நாளுக்கு நாள் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்து வருவதால், உடல்நலனில் பெரிய பாதிப்புகள் ஏற்படும் ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. இது குறித்து பல ஆய்வுகள் அதிர்ச்சி அளிக்கும் தகவல்களை வெளியிட்டுள்ளது. அடிக்கடி மொபைல் பயன்படுத்துவததால் கழுத்தின் சமநிலை பாதித்து, எப்போதும் முன்னோக்கி இருக்கும் அபாயம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவா என்ற ஏஐ மாடல்

சமூக வலைதளங்களில் கண்டென்ட் கிரியேட்டர்கள் மற்றும் இன்ஃப்ளூயன்சர்களின் எதிர்கால தோற்றத்தை விளக்குவதற்காக நிபுணர்கள் அவா என்ற டிஜிட்டல் மாடலை உருவாக்கியுள்ளனர்.

ரிங் லைட்டின் கீழ் நீண்ட நேரம் போஸ் கொடுப்பதால் அவர்களின் தோல் வளைந்து காணப்படும்.  இடைவிடாது கண்டென்ட் தயாரிப்பதன் காரணமாக முக அழகு குறைந்து ஆரோக்கிய சிக்கல்கள் உருவாகும்.  இது தொடர்ந்து கண்டென்ட் உருவாக்குவன் காரணமாக ஏற்படும் விளைவுகள் என்றும் இதன் மூலம் இன்ஃப்ளூயன்சர்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் எனவும் அறிவுறுத்துகின்றனர்.

90 மணி நேரம் வேலை

பிபிசி வெளியிட்ட தகவலின் படி பல இன்ஃப்ளூயன்சர்கள் வாரத்திற்கு 90 மணி நேரம் வரை வேலை செய்கின்றனர். அவர்களுக்கு பெரும்பாலான நேரம் மொபைல் போனில் தான் கழிகிறது. இதனால் கழுத்து மற்றும் முதுகெலும்பு தசைகள் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகின்றன.

இதையும் படிக்க : சிறிய குற்ற வழக்குகளில் இனி ஏஐ மூலம் தீர்ப்பு?.. வெளியான முக்கிய தகவல்!

வாழ்க்கை முறை மாற்றம்

இன்று கண்டென்ட் கிரியேஷன் என்பது மிகவும் கவர்ச்சிகரமான தொழிலாக இருந்து வருகிறது. ஆனால் மற்ற தொழில்களை போல அதில் ஒரு ஒழுங்குமுறை இல்லை. அரசால் அங்கீகரிக்கப்படாத துறையாக இருந்து வருகிறது. இதில் எவ்வளவு நேரம் வேலை பார்க்கிறோமோ அவ்வளவு பணம் கிடைக்கும் என்பதால் பலரும் முழுமூச்சில் இஙங்கியுள்ளனர். இதனால் நாளடைவில் உடல் மற்றும் மன நலனுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

உலக அளவில் 5 கோடிகளுக்கு மேல் கண்டன் கிரியேட்டர்கள் கொண்ட இந்த துறை வேகமாக வளர்ந்து வரும் துறையாக இருக்கிறது. இதற்கென ஒழுங்குமுறை கொண்டுவருவது அவசியமாகிறது. இல்லையெனில் இதில் பலரும் பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.