கழிவறையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நபரா நீங்கள்?.. இந்த பாதிப்பு வர 46% வாய்ப்பு.. மருத்துவர்கள் எச்சரிக்கை!
Smartphone Use i n Toilet Risk | பெரும்பாலான பொதுமக்கள் கழிவறைக்கு செல்லும்போது ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்றனர். ஆனால், அவ்வாறு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதன் மூலம் பெரிய உடல்நல பாதிப்பு ஏற்படும் ஆபத்து உள்ளதாக மருத்துவர் ஒருவர் எச்சரித்துள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தற்போதைய காலக்கட்டத்தில் அனைவரும் தங்களது கைகளில் ஸ்மார்ட்போன் (Smartphone) வைத்துள்ளனர். ஸ்மார்ட்போன் இல்லாதவர்களை பார்ப்பதே மிக அரிதாகிவிட்டது. அந்த அளவுக்கு ஸ்மார்ட்போன் பொதுமக்களின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டது. ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ள வேளையில், அதே அளவுக்கு அது தொடர்பான உடல்நல சிக்கல்களும் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்த நிலையில், கழிவறையில் அமர்ந்து ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் சிக்கல்கள் குறித்து மருத்துவர் ஒருவர் அதிர்ச்சியூட்டும் தகவல்களை கூறியுள்ளார்.
கழிவறையில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நபர்களுக்கு ஆபத்து – மருத்துவர் எச்சரிக்கை
பொதுமக்கள் மத்தியில் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், அவர்கள் எங்கு சென்றாலும் ஸ்மார்ட்போனை உடன் எடுத்து செல்கின்றனர். அதிலும் குறிப்பாக சிலர் கழிவறைக்கு செல்லும்போது ஸ்மார்ட்போனை உடன் எடுத்துச் செல்கின்றனர். அவ்வாறு கழிவறைக்கு செல்போன் எடுத்துச் செல்லும் நபர்களுக்கு மூலம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக வேலூர் சிஎம்சியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் எச்சரித்துள்ளார்.




இதையும் படிங்க : AI : சிறிய குற்ற வழக்குகளில் இனி ஏஐ மூலம் தீர்ப்பு?.. வெளியான முக்கிய தகவல்!
கழிவறையில் ஸ்மாட்ர்ட்போன் பயன்படுத்தினால் மூலம் வரும்
Smartphones in the Toilet: A Hidden Health Risk You Should not Ignore
In today’s fast-paced world, many of us carry our smartphones everywhere, even into the toilet. For some, the bathroom has become a mini reading lounge, a place to catch up on news, emails, or social media… pic.twitter.com/VvfdU0w3Gi
— Dr Sudhir Kumar MD DM (@hyderabaddoctor) September 5, 2025
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மருத்துவர் சுதிர் குமார், கழிவறைக்கு ஸ்மார்ட்போன் கொண்டுசெல்லும் நபர்களுக்கு 46 சதவீதம் மூலம் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். அதாவது, மலம் கழிக்கும்போது ஸ்மார்ட்போன் பயன்படுத்தப்படும் நிலையில், கவனச்சிதறல் ஏற்பட்டு இத்தகைய பாதிப்பு ஏற்படுவதாக அவர் கூறுகிறார்.
ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன?
கழிவறைக்கு செல்லும்போது ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அதாவது, மூன்றில் இரண்டு இளைஞர்கள் தாங்கள் கழிவறையை பயன்படுத்தும்போது ஸ்மார்ட்போனை உடன் எடுத்து செல்கின்றனர்.
- கழிவறைக்கு செல்லும்போது ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத நபர்களுடன் ஒப்பிடுகையில், ஸ்மார்ட்போன் எடுத்துச் செல்லும் நபர்கள் 5 நிமிடங்கள் கழிவறையில் அமர்ந்திருக்கின்றனர்.
முறையற்ற டையட், உடல் உழைப்பை தாண்டி இதுவும் மூலத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது என கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.