Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஜிமெயிலின் இந்த 5 சீக்ரெட்ஸ் பற்றி தெரியுமா? உங்கள் வேலை சில நிமிடங்களில் முடியும்

Hidden Gmail Tricks: ஜிமெயில் மின்னஞ்சல்களை அனுப்பவும் பெறுவதற்காக மட்டுமே பயன்படும் என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் ஜிமெயிலில் பலரும் அறியாத விஷயங்கள் அதில் இருக்கிறது. இந்த கட்டுரையில் ஜிமெயிலில் நம் வேலைகளை எளிதாக்கும் 5 அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜிமெயிலின் இந்த 5 சீக்ரெட்ஸ் பற்றி தெரியுமா? உங்கள் வேலை சில நிமிடங்களில் முடியும்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 01 Sep 2025 19:43 PM

கூகுள் (Google) நிறுவனத்தின் ஜிமெயில் மின்னஞ்சல்களை அனுப்புவதற்கும், பெறுவதற்கும் முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது. நம் வேலைகளை எளிதாகவும், வேகமாகவும் செய்யும் ஒரு ஸ்மார்ட் கருவியாக ஜிமெயில் மாறியுள்ளது. பெரும்பாலும் நமக்கு வரும் இமெயில்களை பார்ப்பதற்கு மட்டுமே ஜிமெயிலை (Gmail) நாம் பயன்படுத்துகிறோம். இது நம் வேலைகளை மிகவும் எளிதாக்கும் பல அம்சங்களை வழங்கி வருகிறது. ஆனால் இது குறித்து பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. ஜிமெயில் உள்ள சிறந்த 5 அம்சங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இமெயிலை ஷெட்யூல் செய்யும் வசதி

பல நேரங்களில் இமெயில்களை உடனடியாக அனுப்புவதற்கு பதிலாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அனுப்ப வேண்டியிருக்கும். இந்த நிலையில் ஜிமெயிலில் கொடுக்கப்பட்டுள்ள ஷெட்யூல் வசதி உதவியினால், மின்னஞ்சலை முன் கூட்டியே எழுதி, அதனை திட்டமிட்ட தேதி மற்றும் நேரத்தில் அனுப்ப முடியும். இது வணிக நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப ஏதுவாக இருக்கும்.

இதையும் படிக்க : கூகுள் டிரான்ஸ்லேட்டில் இனி புது மொழியே கற்கலாம்.. வந்தது அசத்தல் ஏஐ அம்சம்!

ஸ்மார்ட் கம்போஸ் வசதி

சில நேரங்களில் நீண்ட மின்னஞ்சல்களை எழுதுவதில் சிக்கல் இருக்கலாம். அந்த நேரத்தில் ஸ்மார்ட் கம்போஸ் வசதி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த அம்சம் உங்கள் எழுத்து பாணியைப் புரிந்துகொள்வதன் மூலம் தானாகவே பரிந்துரைகளை வழங்குகிறது. நீங்கள் ஒரு சில வார்த்தைகளை டைப் செய்தவுடன் முழு வரியும் தோன்றும். இது நேரத்தை மிச்சப்படுத்துகிறது. மற்றும் மின்னஞ்சல் எழுதுவதை மிகவும் எளிதாக மாற்றுகிறது

கான்ஃபிடென்ஷியல் வசதி

நீங்கள் ஒரு முக்கியமான அல்லது தனிப்பட்ட டாக்குமென்ட்டை அனுப்ப வேண்டியிருக்கும் பட்சத்தில், ஜிமெயிலின் கான்ஃபிடென்ஷியல் வசதி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த வசதியின் மூலம் நீங்கள் அனுப்பும் மின்னஞ்சலின் காலாவதி தேதியை நீங்களே முடிவு செய்யலாம்.  அதாவது குறிப்பிட்ட நேரம், தேதி வரை மட்டுமே உங்கள் மின்னஞ்சல் ஒருவரின் இன்பாக்ஸில் இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால் அதனை முன் கூட்டியே முடிவு செய்யலாம். இதன் மூலம் பெறுநர் உங்கள் மின்னஞ்சலை ஃபார்வேர்டு செய்யவோ, ஸ்கீரன்ஷாட் எடுக்கவோ, டவுன்லோடு செய்யவோ முடியாது.

இதையும் படிக்க : கூகுளில் தொலைபேசி எண்களை தேடுகிறீர்களா ? மோசடியில் சிக்கும் ஆபத்து

ஆஃப்லைன் பயன்முறை

சில நேரங்களில் நெட்வொர்க் பிரச்னை காரணமாக மின்னஞ்சலை அனுப்புவதோ பெறுவதோ கடினமாகிவிடும். ஜிமெயின் ஆஃப்லைன் பயன்முறை இந்த சிக்கலுக்கு தீர்வாகும். இண்டர்நெட் இல்லாவிட்டாலும் நீங்கள் மின்னஞ்சலை படிக்கலாம்.

ஃபில்டர் மற்றும் லேபிள்

உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸில் ஒவ்வொரு நாளும் நிறைய மின்னஞ்சல்கள் வரும். இதுபோன்ற நேரங்களில் உங்களால் குறிப்பிட்ட மெசேஜை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. இதுபோன்ற நேரங்களில் ஃபில்டர் மற்றும் லேபிள்கள் அம்சத்தை பயன்படுத்தலாம். இதன் மூலம் உங்கள் மின்னஞ்சல்களை உடனடியாக கண்டுபிடிக்கலாம்.