புதிய ஜிமெயில் ஏஐ மோசடி: 180 கோடி கணக்குகளின் பாஸ்வேர்டுகள் திருடப்படும் அபாயம் – எப்படி தவிர்ப்பது?
Google Issues Warning : ஜிமெயிலை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகிரார்கள். இந்த நிலையில் ஜிமெயிலில் ஏஐ மூலம் மோசடி நடைபெற்று வருவதாகவும், இதனால் பயனர்களின் பாஸ்வேர்டு, ஓடிபி போன்ற முக்கிய தகவல்கள் திருடப்படலாம் எனவும் கூகுள் எச்சரிக்கைவிடுத்துள்ளது.

கூகுளின் (Google ) தயாரிப்புகளில் ஒன்றான ஜிமெயிலை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் உலகம் முழுவதும் 180 கோடி பயனர்களுக்கு ஜிமெயில் ஒரு எச்சரிக்கை மெயில் அனுப்பியிருக்கிறது. அதில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஹேக்கர்கள் புதிய சைபர் தாக்குதலை நிகழ்த்தவிருக்கிறார்கள் என்றும் அதற்கு Indirect Prompt Injection என பெயரிட்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் பயனர்களின் பாஸ்வேர்டுகள் திருடப்படலாம் எனவும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் அந்நிறுவனம் அறிவுறுத்தியிருக்கிறது. இது உலக அளவில் ஜிமெயில் பயனர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மோசடி எப்படி நடக்கிறது ? தவிர்ப்பது எப்படி என பார்க்கலாம்.
எப்படி இந்த மோசடி வேலை செய்கிறது?
கூகுளின் அதிகாரப்பூர்வ வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதன் படி, ஹேக்கர்கள், மின்னஞ்சல், காலண்டர், டாக்குமென்ட் போன்றவற்றில் தீங்கு விளைவிக்கும் குறியீடுகளை அதில் மறைத்து வைத்திருக்கிறார்கள் எனவும் பயனர் அதனைப் பயன்படுத்தும்போது சிஸ்டத்தில் அந்த ரகசிய குறியீடுகள் செயல்பட்டு பாஸ்வேர்டுகள், ஓடிபி போன்ற முக்கிய தகவல்களை திருடக்கூடும் என குறிப்பிட்டுள்ளது. மேலும் நம் அனுமதியில்லாமல் பரிவர்த்தனைகள் இதன் மூலம் நடக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஏஐ தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் அதனால் ஆபத்துகளும் அதிகரித்திருக்கின்றன. இதன் தாக்கம் தனி நபர்கள் என்று மட்டும் அல்லாமல், நிறுவனங்கள் அரசு அமைப்புகள் என அனைவரையும் பாதிக்கும் என எச்சரிக்கைவிடுத்துள்ளது. ‘
இதையும் படிக்க : மெட்டா ஏஐ காரணமாக குழந்தைகளுக்கு ஆபத்து? வலுக்கும் எதிர்ப்பு




ஜெமினி ஏஐ மூலம் நடைபெறும் மோசடி
தி டெய்லி ரெக்கார்டு என்ற இதழில் வெளியான தகவலின்படி தொழில்நுட்ப நிபுணர் ஸ்கார்ட் பால்டர் மேன் தெரிவித்ததாவது, இந்த மோசடியில் ஹேக்கர்கள், கூகுள் ஜெமினி ஏஐ சாட்பாட்டை பயன்படுத்துகிறார்கள். இது ஜிமெயிலில் இருக்கும் மறைமுக குறியீடுகள் ஜெமினி ஏஐ மூலம் கண்டறிந்து பயனரின் விவரங்களை எடுக்க முடியும். இதில் ஆபத்து என்னவென்றால் பயனர் எதையும் கிளிக் செய்யாமல், அவரை அறியாமல் மறைமுகமாகவே இந்த வேலைகள் அனைத்தும் நடக்கும். இதில் பயனருக்கு எதிராக தானாகவே செயல்படும் நிலை உருவாகலாம். அதாவது சிஸ்டத்தின் கன்ட்ரோல் முழுவதையும் ஏஐ எடுத்துக்கொள்ளும்.
இதற்கான நடைமுறைகளில் கூகுள் ஏற்கனவே இறங்கியுள்ளது. ஜெமினி 2.5 மாடலில் இதுபோன்ற குறைகளை அடையாளம் காணும் திறனுடன் அப்டேட் வழங்கியுள்ளது. பயனர்கள் இதனைப் பயன்படுத்தலாம். மேலும் ஜிமெயிலில் சந்தேகத்துக்கு இடமான நடவடிக்கைகளை கண்டறிய கூகுள் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதையும் படிக்க : செயற்கை நுண்ணறிவால் இந்த 10 வேலைகளை செய்ய முடியாது.. மைக்ரோசாஃப்ட் வெளியிட்ட பட்டியல்!
இந்த ஜிமெயில் ஏஐ மோசடியில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி ?
- ஜெமினி ஏஐ கொடுக்கும் எல்லா தகவல்களையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.
- சந்தேகத்துக்கு இடமான ஜிமெயில் மெசேஜ்களை திறக்க வேண்டாம். அல்லது அதற்காக ஜெமினி ஏஐ பயன்படுத்த வேண்டாம். முக்கியமான ஜிமெயில்களை நீங்களே படித்து புரிந்துகொள்ளவும்.
- உங்களுக்கு சந்தேகம் இருந்தால் ஜெமினி ஸ்மார்ட் ஃபியேச்சரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும்.
- சந்தேகத்துக்கு இடமான லிங்க்குள், டாக்குமென்ட்களை திறப்பதை தவிர்க்கவும்.