Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மெட்டா ஏஐ காரணமாக குழந்தைகளுக்கு ஆபத்து? வலுக்கும் எதிர்ப்பு

AI Chatbot Controversy : மெட்டாவின் ஏஐ சாட்பாட் குழந்தைகளிடம் தவறான உரையாடலை மேற்கொள்வதாக ரூட்டர்ஸ் நிறுவனம் ஆதாரத்துடன் தகவல்களை பகிர்ந்துள்ளது. இது உலக அளவில் ஏஐ சாட்டினால் ஏற்படும் ஆபத்து குறித்து கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மெட்டா ஏஐ காரணமாக குழந்தைகளுக்கு ஆபத்து? வலுக்கும் எதிர்ப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 18 Aug 2025 19:49 PM

மெட்டா (Meta) நிறுவனம் மீண்டும் கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற சமூக வலைதளங்களில் மெட்டா ஏஐ தவறான முறையில் பதிலளிப்பதாக புகார் எழுந்துள்ளது. ரூட்டர்ஸ் இணையதளத்தில் வெளியான தகவலின் படி, ஏஐ சாட் பாட் 76 வயதான ஒருவருடன் காதல் உரையாடலில் ஈடுபட்டிருக்கிறது. அந்த சாட்பாட் உண்மையான பெண் என்று கூறியதுடன் ஒரு முகவரியையும் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதே பல குழந்தைகளுடன் தவறான முறையில் உரையாடலாம் என்றும் அதில் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும தவறான மருத்துவ தகவல்களையும் வெளியிடலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக 200 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை ரூட்டர்ஸ் வெளியிட்டுள்ளது.

மெட்டா சாட்பாட்கள் மீதான அதிர்ச்சி தகவல்கள்

குறிப்பாக குழந்தைகளிடம் அவர்களின் வயதுக்கு மீறிய உரையாடலை மேற்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான தகவல்களை ரூட்டர்ஸ் ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது. இது உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். மெட்டா ஏஐ சாட்பாட்கள் சிறுவர்களுடன் ரொமாண்டிக் உரையாடல்களில் ஈடுபட அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : டிஜிட்டல் கைது என கூறி மூதாட்டியிடம் ரூ.7.70 கோடி பணம் பறித்த கும்பல்.. ஷாக் சம்பவம்!

இது தொடர்பாக மெட்டா நிறுவனம் அளித்த விளக்கத்தில், எங்கள் கொள்கை இதற்கு எதிராக இருக்கிறது. அதன் படி குழந்தைகளை பாலியல் நோக்கில் சித்தரிக்கும் எந்த கண்டென்ட்களும் இடம் பெறக்கூடாது எனவும், மேலும் பெரியவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு இடையிலான பாலியல் உரையாடல்களும் வெளிப்படையாக தடை செய்யப்பட்டுள்ளன என வலியுறுத்தியுள்ளது.

மெட்டா மீது வழக்குப்பதிவு

இது தொடர்பாக மெட்டா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. செனட்டர் ஹாலி என்பவர் தலைமையிலான அமெரிக்க செனட் நீதிமன்றக் குழு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு குழு இந்த விவகாரத்தில் விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த விசாரணை மெட்டாவின் ஏஐ சாட்பாட் குழந்தைகளை ஏமாற்றுதல் போன்ற குற்றச் செயல்கள் நடந்துள்ளதாக என விசாரணையின் முடிவில் தெரியவரும் என்று கூறப்படுகிறது.  இது தொடர்பாக அனைத்து ஆவணங்களையும் செப்டம்பர் 19, 2025க்குள் சமர்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : உங்கள் இருப்பிடத்தை கண்காணிக்கும் இன்ஸ்டாகிராமின் புதிய மேப் வசதி – எப்படி தவிர்ப்பது?

செனட்டர் ஹாலி தனது குற்றச்சாட்டை வலுப்படுத்தும் வகையில் ஒரு உதாரணத்தை பகிர்ந்தார். அதில் மெட்டா ஏஐ சாட்பாட் 8 வயது குழந்தையின் உடலை கலைப்பொருள் எனவும் ஆழமாக மதிக்கும் பொக்கிஷம் என குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த விவகாரம் அமெரிக்காவில் மட்டுமல்ல உலக அளவில் ஏஐ பயன்பாட்டின் பாதுகாப்பு, ஒழுங்குமுறை மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு ஆகியவை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.