Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உங்கள் பெயரில் போலி Instagram கணக்கு தொடங்கப்படுகிறதா?.. அப்போ இத பண்ணுங்க!

Instagram Fake Account Problem | இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பலருக்கும் போலி கணக்கு ஒரு மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும். அதாவது தங்களது பெயரில் போலி கணக்கு தொடங்கும் நபர்கள் சிலர் அதன் மூலம் மோசடி செய்ய முயற்சி செய்வர். இந்த நிலையில், போலி இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உங்கள் பெயரில் போலி Instagram கணக்கு தொடங்கப்படுகிறதா?.. அப்போ இத பண்ணுங்க!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 25 Jul 2025 00:29 AM

உலக அளவில் பில்லியன் கணக்கான பொதுமக்கள் பொழுதுபோக்கு செயலியாக உள்ளது தான் இன்ஸ்டாகிராம் (Instagram). இந்த செயலி பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தாலும், இதில் சில பாதுகாப்பு சிக்கல்கள் உள்ளது. குறிப்பாக இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்படுவது, போலி கணக்குகள் உருவாக்கப்படுவது உள்ளிட்ட பல பிரச்னைகளை சந்திக்கின்றனர். இதில் பெரும்பாலான பொதுமக்கள் சந்திப்பது தங்களின் பெயரில் போலி கணக்குகள் (Fake Account) உருவாக்கப்படுவது. இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் உங்கள் பெயரில் போலி கணக்குகள் உருவாக்கப்பட்டால் அது குறித்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உலக அளவில் பில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் இன்ஸ்டாகிராம்

மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலியை உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியில் பொதுமக்கள் தங்களது பெயர்களில் கணக்கு தொடங்கி பயன்படுத்தலாம். இந்த கணக்கு மூலம் ஒருவர் புகைப்படங்கள், ஸ்டோரி, நண்பர்களுடன் உரையாடுவது, பாடல்கள் பகிர்வது உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இவ்வாறு இன்ஸ்டாகிராமில் ஒவ்வொருவரும் தங்களுக்கென கணக்கு தொடங்கி பயன்படுத்தும் நிலையில், அவற்றை வேறு சிலர் போலியாக உருவாக்கி மோசடி மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதையும் படிங்க : ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உங்களை டிராக் செய்வதை தடுக்க வேண்டுமா?.. அப்போ இத பண்ணுங்க!

இன்ஸ்டாகிடாம் போலி கணக்குகள் – செய்ய வேண்டியது என்ன?

  • இன்ஸ்டாகிராமில் போலி கணக்குகள் குறித்து புகார் அளிப்பதற்கு முன்னதாக அதில் சில விஷயங்கள் குறித்து ஆராய வேண்டும்.
  • உங்களின் முழு பெயர், புகைப்படம், பயோ உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதா என்பதை சோதனை செய்யுங்கள்.
  • உங்களை போல் குறுஞ்செய்தி அனுப்புதல், மோசடி செய்ய முயற்சி செய்தல் ஆகியவற்றை ஆராயுங்கள்.
  • பண பரிவர்த்தனை, ஓடிபி, உள்ளிட்ட முக்கிய தகவல்கள் திருட முயற்சி செய்யப்படுகிறதா என்பதை சோதனை செய்யுங்கள்.
  • உங்களை குறித்த தவறான மற்றும் போலி செய்திகள் பரப்பப்படுகிறதா என்பதை சோதனை செய்யுங்கள்.

மேற்குறிப்பிட்ட இந்த தகவல்கள் திருடப்பட்டு உங்களது பெயரில் போலி கணக்குகள் உருவாக்கப்படடால் அது குறித்து தாராலமாக புகார் செய்யலாம்.

போலி கணக்குகளை ரிப்போர்ட் செய்வது எப்படி?

  1. அதற்கு முதலில் அந்த போலி கணக்குக்குள் நுழைய வேண்டும்.
  2. அதில் கொடுக்கப்பட்டுள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்ய வேண்டும்.
  3. அதில் Report என்ற ஆப்ஷனை கிளிக் செய்து Report Account என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

இந்த மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றி போலி கணக்குகளை முடக்கம் செய்யலாம். விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாலும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கூறி கணக்கை ரிப்போர்ட் செய்ய கூறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.