ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உங்களை டிராக் செய்வதை தடுக்க வேண்டுமா?.. அப்போ இத பண்ணுங்க!
Stop Facebook and Instagram Tracking | ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் பெரும்பாலான பொதுமக்களின் முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது தாங்கள் டிராக் செய்யப்படுவது தான். இதன் காரணமாக ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் தங்களது தகவல்களை திருடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், தகவல்கள் டிராக் செய்யப்படுவதை தடுப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பொதுமக்கள் மத்தியில் ஸ்மார்ட்போன் (Smartphone) பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், அவர்கள் தங்களது அன்றாட தேவைகளுக்காக பல செயலிகளை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தும் பொழுதுபோக்கு செயலிகள் தான் ஃபேஸ்புக் (Facebook) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram). இந்த செயலிகள் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக உள்ள நிலையில், பலரும் தங்களது அன்றாட வாழ்வில் இவற்றை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால், இவ்வாறு சமூக ஊடக செயலிகளை பயன்படுத்தும் பொதுமக்களின் குற்றச்சாட்டாக இருப்பது, தாங்கள் பின்தொடரப்படுவது தான். இந்த நிலையில், இந்த செயலிகள் உங்களை டிராக் செய்வதை தடுப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பயனர்களை டிராக் செய்யும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம்
மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகளை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த செயலிகள் பொழுதுபோக்கிற்கு சிறந்த அம்சமாக உள்ள நிலையில், அதிக நேரம் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பொதுமக்கள் அதிக நேரம் இந்த செயலிகளை பயன்படுத்தும்போது, தங்களது தகவல்கள் திருடப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். அதாவது, கூகுளில் தேடும் தகவல்கள் மற்றும் பொருட்கள் குறித்து சமூக ஊடகங்களில் விளம்பர வருவது, அந்த பொருட்கள் குறித்த பரிந்துரை வருவது உள்ளிட்டவை பொதுமக்கள் சந்திக்கும் மிகப்பெரிய சிக்கலாக உள்ளது.
இதையும் படிங்க : இந்த ஒரே ஒரு செயலி போதும்.. காணாமல் போன ஸ்மார்ட்போன் உங்கள் வசம் வந்துவிடும்!




இன்ஸ்டாகிராம் டிராக் செய்யப்படுவதை தடுப்பது எப்படி?
- அதற்கு முதலில் இன்ஸ்டாகிராம் செயலிக்கு செல்ல வேண்டும்.
- அதில் உள்ள Profile Picture-ஐ கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு வலது பக்கத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று கோடுகளை கிளிக் செய்து, அதில் Settings and Privacy என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- அதில் உள்ள Activity மற்றும் Activity off Meta Technologies என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- அதில் Disconnect Future Activity என்ற அம்சத்தை கிளிக் செய்து பிற இணையதளங்கள் மற்றும் செயலிகள் உடனான டிராக்கிங் இணைப்பை துண்டிக்க வேண்டும்.
இதையும் படிங்க : Instagram : இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் AI Backdrop செட் செய்வது எப்படி?.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!
ஃபேஸ்புக் டிராக் செய்யப்படுவதை தடுப்பது எப்படி?
- அதற்கு முதலில் ஃபேஸ்புக் செயலிக்குள் நுழைந்து அங்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்ய வேண்டும்.
- அதில் Settings and Privacy என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- அதில் Your Facebook Information என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள Off – Facebook Activity என்ற அம்சத்தை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு Manage Your Off – Facebook Activity என்பதை கிளிக் செய்து பிறகு Manage Future Activity என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
மேற்குறிப்பிட்ட இந்த முறையை பின்பற்றி உங்கள் தரவுகள் மற்றும் தகவல்களை ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம செயலிகள் டிராக் செய்வதை தடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.