AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சேலத்தில் இன்று விஜய் பிரசார கூட்டம்.. நுழைவுச் சீட்டு இருந்தால் மட்டுமே அனுமதி!!

TVK Vijay campaign in Salem: ஈரோடு சந்திப்புக்கு பின் 55 நாட்களுக்கு பிறகு, மீண்டும் திறந்தவெளி கூட்டத்தில் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கு, முக்கிய நிபந்தனையாக தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் 5,000 பேர் பங்கேற்ற காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

சேலத்தில் இன்று விஜய் பிரசார கூட்டம்.. நுழைவுச் சீட்டு இருந்தால் மட்டுமே அனுமதி!!
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 13 Feb 2026 07:35 AM IST

சேலம், பிப்ரவரி 13: சேலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின், நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று (பிப்.13) நடைபெறுகிறது. இந்த சந்திப்புக்கு 5,000 பேரை மட்டும் போலீசார் அனுமதித்துள்ளனர். கரூர் துயர சம்பவத்தைத் தொடர்ந்து ஈரோட்டில் அண்மையில் விஜய் பிரசாரம் செய்தார். இதனைத் தொடர்ந்து சேலம் சீலநாயக்கன்பட்டியில் இன்று இந்த நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் பங்கேற்க அனுமதி கொடுக்கப்படவில்லை. மேலும் இதில் பங்கேற்பவர்கள் அனைவருக்கும் அனுமதிச் சீட்டும் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : கூட்டணி ஆட்சி கதவை அடைத்த ஸ்டாலின்…ரகசியம் வைத்துள்ள செல்வப்பெருந்தகை..காங்கிரஸுக்கு இருக்கும் 2 சாய்ஸ்!

தவெக நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்:

கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு பொதுவெளியில் ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் விஜய் கலந்துகொண்டார். அதன்பின், ஜனநாயகன் ரிலீஸ் சிக்கல், சிபிஐ விசாரணை உள்ளிட்ட காரணங்களால் அவரது அடுத்தக்கட்ட மக்கள் சந்திப்பு நடைபெறாமல் இருந்தது. தொடர்ந்து, சேலத்தில் மக்கள் சந்திப்பை நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்றன. இந்த மக்கள் சந்திப்பிற்காக போலீசாரிடம் அனுமதி கோரப்பட்ட போது, மனுவில் வரைபடம் இணைக்கப்படவில்லை உள்ளிட்ட கேள்விகளை காவல் துறை எழுப்பயது. இதையடுத்து, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பதிலாக, தவெக நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டத்துக்கு தவெக தரப்பில் அனுமதி கோரப்பட்டது.

55 நாட்களுக்கு பிறகு திறந்தவெளி கூட்டம்:

இதையடுத்து, தவெக நிா்வாகிகள் கூட்டத்துக்கு 51 நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி வழங்கியது. இதையடுத்து, ஈரோடு சந்திப்புக்கு பின் 55 நாட்களுக்கு பிறகு, மீண்டும் திறந்தவெளி கூட்டத்தில் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கு, முக்கிய நிபந்தனையாக தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் 5,000 பேர் பங்கேற்ற காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. அதோடு, பேருந்தில் நின்றபடி மட்டுமே விஜய் பேச வேண்டும், இருக்கைகள் அமைக்கக்கூடாது. பங்கேற்கும் அனைவருக்கும் அனுமதி அடையாள அட்டை வழங்க வேண்டும். குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு அனுமதி இல்லை உள்ளிட்ட நிபந்தனைகள் போலீசாரால் விதிக்கப்பட்டுள்ளன.

நுழைவுச் சீட்டு உள்ளவர்களுக்கே அனுமதி:

இதையடுத்து, க்யூஆர் (QR) குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4,998 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என தவெக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது. அனுமதிச் சீட்டு பெறாத தொண்டர்களும், பொதுமக்களும் நேரில் வருவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்றும், இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் நேரலைகளில் காணுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : பைக்கில் புகுந்த பாம்பு..வழக்கறிஞர் செய்த சிம்பிலான செயல்..திருச்சியில் சுவாரஸ்ய நிகழ்வு!

தனி விமானத்தில் வருகை தரும் விஜய்:

இக்கூட்டத்தில் பங்கேற்க இன்று காலை 10 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் கூட்டம் நடைபெறும் திடலுக்கு செல்கிறார் விஜய். பின்னர் கூட்டம் முடிவடைந்ததும் அதேபோல் காரில் சென்று, விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் அவர் சென்னை திரும்புகிறார். இந்நிகழ்ச்சிக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Follow Us