Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குடும்பத்தையே சீர்குலைத்த புற்றுநோய்.. மனைவி மீதான அதீத பாசத்தால் விபரீத முடிவு.. தந்தை, மகன் பலி!!

அதில் ‘ஹேப்பி லைப்’ என்று வாசகத்தை எழுதி பெற்றுள்ளார். அந்த கேக்கை சாப்பிட்டு குடும்பத்தினர் அனைவரும் தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் விஷத்தை கலந்து வைத்திருந்தார். அதோடு, இந்த முடிவை யாருக்கும் பகிராமலும் இருந்துள்ளார். தொடர்ந்து, அந்த கேக்கை வீட்டில் இருந்த 4 பேரும் வெட்டி மகிழ்ச்சியுடன் சாப்பிட்டுள்ளனர்.

குடும்பத்தையே சீர்குலைத்த புற்றுநோய்.. மனைவி மீதான அதீத பாசத்தால் விபரீத முடிவு.. தந்தை, மகன் பலி!!
பலியான தந்தை, மகன்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 12 Feb 2026 13:24 PM IST

சென்னை, பிப்ரவரி 12: சென்னை பெரம்பூரில் 4 வயது மகனுக்கு கேக்கில் விஷம் கலந்து கொடுத்து கொன்றுவிட்டு, தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, விஷம் கலந்த கேக்கை சாப்பிட்ட மனைவியும், மகளும் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மகிழ்ச்சியாக வாழ்ந்த வந்த இந்த குடும்பத்தை நிலைகுலையச் செய்தது என்ன பிரச்சனை? எதனால் அவர்கள் தற்கொலைக்கு முயன்றனர் என்பது குறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிக்க: பகலில் IT வேலை, சொகுசு வாழ்க்கை.. இரவில் வீடு வீடாக திருட்டு.. போலீசாருக்கு தண்ணி காட்டிய பலே கில்லாடி!!

புற்றுநோயால் மனைவி பாதிப்பு:

சென்னை பெரம்பூர் சங்கரமடம் சாலையில் வசித்து வந்தவர் சகாய செபஸ்டியன் (43). துணியார் நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ரெக்ஸி பியூலா (38). இவர்களுக்கு இவாஞ்சலி ஆல்வினா (8) என்ற மகளும், இவான் ஆண்டோ (4) என்ற மகனும் உள்ளனர். இவாஞ்சலி ஆல்வினா, அருகில் உள்ள தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவான் ஆண்டோ, பிரிகேஜி படித்து வந்தார். இந்நிலையில், பியூலா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மனைவி மீதான அதீத பாசத்தால் விபரீதம்:

ஆனாலும் அவரது உடல் நிலை நாளுக்கு நாள் முன்னேற்றமின்றி மோசமடைந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, மனைவி மீது அதீத பாசம் வைத்திருந்த சகாய செபஸ்டியன், அவரது உடல்நிலை கண்டு மனவேதனை அடைந்தார். தொடர்ந்து, மனைவியை காப்பற்ற போராடிய அவர், அது பலனளிக்கவில்லை என்பதால் உடைந்துபோனார். இதன் காரணமாக குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளலாம் என விபரீதமாக செபஸ்டியன் முடிவு செய்தார்.

‘ஹேப்பி லைப்’ என கேக் வெட்டி தற்கொலை:

அதன்படி, நேற்று முன்தினம் இரவு சகாய செபஸ்டியன், பேக்கரி கடைக்கு சென்று வீட்டுக்கு கேக் வாங்கி வந்துள்ளார். அதில் ‘ஹேப்பி லைப்’ என்று வாசகத்தை எழுதி பெற்றுள்ளார். அந்த கேக்கை சாப்பிட்டு குடும்பத்தினர் அனைவரும் தற்கொலை செய்து கொள்ளும் முடிவில் விஷத்தை கலந்து வைத்திருந்தார். அதோடு, இந்த முடிவை யாருக்கும் பகிராமலும் இருந்துள்ளார். தொடர்ந்து, அந்த கேக்கை வீட்டில் இருந்த 4 பேரும் வெட்டி மகிழ்ச்சியுடன் சாப்பிட்டுள்ளனர்.

மனைவி, மகள் இறந்தாக செபஸ்டியன் தற்கொலை:

அதுவே, தங்களது இறுதி நிமிடம் என்பதை அறியாத குடும்பத்தினர், ஒருவருக்கு ஒருவர் கேக்கை ஊட்டியும் மகிழ்ந்தனர். இதனிடையே, கேக்கை சாப்பிட்ட சிறிது நேரத்தில் செபஸ்டியனின் மகன் ஆண்டோ, மயக்கம் அடைந்து அதே இடத்தில் கீழே விழுந்து உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து, மனைவி மற்றும் மகள் இருவரும் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இதனால், அவர்களும் இறந்துவிடுவார்கள் என்று கருதிய செபஸ்டியன், வீட்டில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மயக்கத்தில் இருந்த மனைவி, மகள்:

தொடர்ந்து, மறுநாள் காலையில் மயக்கம் தெளிந்த இவாஞ்சலி ஆல்வினா, தனது தந்தை தூக்கில் தொங்குவதையும், சகோதரன் இறந்து கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். தொடர்ந்து, தாயும் சுயநினைவின்றி கிடைப்பதை பார்த்து பதறிபோயுள்ளார். இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மயங்கி கிடந்த ரெஜினா பியூலா மற்றும் இவாஞ்சலி ஆல்வினா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: மும்பை ரயிலில் பர்தா அணிந்து பெண் பயணிகளிடம் பாலியல் சீண்டல் செய்த நபர்.. அதிர்ச்சி சம்பவம்!

அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்கொலை செய்த தந்தை மற்றும் உயிரிழந்த மகன் ஆகிய இருவரது சடலத்தையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இவ்விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)