Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் சூப்பர் அறிவிப்பு…ரூ.3,500 கோடி நிதியை ஒதுக்கிய தமிழக அரசு!

Kalaignar Kanavu Illam Project: கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், மேலும் 1 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணிகளுக்கு ரூ.3,500 கோடியை ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், வீடுகள் இல்லாத பயணிகளுக்கு கான்கிரீட் வீடுகள் கிடைக்கும்.

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் சூப்பர் அறிவிப்பு…ரூ.3,500 கோடி நிதியை ஒதுக்கிய தமிழக அரசு!
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 1 லட்சம் வீடுகள்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 13 Feb 2026 07:09 AM IST

தமிழகத்தில் குடிசை வீடுகளில் வசித்து வருபவர்கள், சேதம் அடைந்த வீடுகளில் வசிப்பவர்கள் மற்றும் ஏழை எளிய மக்கள், தகுதியுடைய பயனாளிகள் ஆகியோருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், இலவசமாக வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகிறது. இதில், தகுதியுடைய பயனாளிகளுக்கு தமிழக அரசு சார்பில் 360 சதுர அடி நிலம் இலவசமாக வழங்கப்படுவதுடன், அந்த இடத்தில் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் வீடுகள் அரசு சார்பில் கட்டப்பட்டு வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது கடந்த 2024- ஆம் ஆண்டு தமிழக அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. குடிசை இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில் ஊரகப் பகுதிகளில் சுமார் ரூ.3,100 கோடியில் 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 1 லட்சம் வீடுகள்

தமிழகத்தில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், தற்போது வரை சுமார் 2 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்த திட்டத்தின் கீழ், மேலும் 1 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த வீடுகள் கட்டுமான பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தற்போது வரை 2 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலையில், வருகிற 2030- ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை குடிசை இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: வளிமண்டல காற்று சுழற்சி.. 5 மாவட்டங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ரிப்போர்ட் இதோ..

2030-க்குள் 8 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு இலக்கு

அதன்படி, ரூ. 2030- ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் மொத்தம் 8 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ரூ.3.10 லட்சம் நிதியாகவும், மீதமுள்ள ரூ. 40 ஆயிரம் இரும்பு கம்பிகள், சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் ஆகவும் வழங்கப்படும். இதில், சொந்தமாக நிலம் வைத்திருக்கும் பயனாளிகள் மற்றும் ஏழை, எளியோர், குடிசையில் வசிப்பவர்கள் தகுதி பெற்றவர்களாவர். இந்த வீட்டில் கூடுதல் வசதிகள் ஏதேனும் தேவை இருப்பின் அதற்காக கூடுதல் நிதியை பெறுவதற்கு வழிவகை உள்ளது. இதற்காக வங்கியில் சுமார் 1.50 லட்சம் வரை கடன் பெற்றுக் கொள்ளலாம்.

கலைஞர் கனவு திட்டம்

கடந்த 2010- ஆம் ஆண்டு கலைஞர் வீடு வழங்கும் திட்டம் (Kalaignar Veedu Vazhangum Thittam) என்ற பெயரில் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்தத் திட்டத்தின் கீழ், குடிசையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது. அதன்படி, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தமிழகத்தில் சுமார் 8 லட்சம் குடிசைகள் இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, 2030-க்குள் குடிசை இல்லாத மாநிலமாக மாற்றுவதற்காக முதல்வர் மு. க. ஸ்டாலின் கலைஞர் கனவு இல்லம் திட்டம் என பெயர் மாற்றி அறிவித்தார்.

மேலும் படிக்க: 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்து நாட்டு கல்வெட்டில் தமிழ் வணிகர் பெயர் – வியந்துபோன ஆய்வாளர்கள்