AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புதுச்சேரி சட்டமன்ற கூட்டம்…ரூ.5,396 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்…முதல்வர் தாக்கல் செய்தார்!

Puducherry Interim Budget: புதுச்சேரியில் 5 மாதங்களுக்கு ரூ.5,396 கோடிக்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் என். ரங்கசாமி இன்றஉ தாக்கல் செய்தார். இதற்கான ஒப்பதல் குரல் வாக்கெடுப்பு மூலம் பெறப்பட்டது. மேலும், ரூ. 537.38 கோடிக்கு கூடுதல் செலவினங்களுக்கான ஒப்புதல் பெறப்பட்டது.

புதுச்சேரி சட்டமன்ற கூட்டம்…ரூ.5,396 கோடிக்கு இடைக்கால பட்ஜெட்…முதல்வர் தாக்கல் செய்தார்!
புதுச்சேரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 13 Feb 2026 06:30 AM IST

புதுச்சேரியில் 2 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அந்த மாநிலத்தில் முழு பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால், ஆளும் என். ஆர். காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கும் முடிவு செய்தது. அதன்படி, புதுச்சேரி சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று வியாழக்கிழமை ( பிப்ரவரி 12) தொடங்கியது. இதைத் தொடர்ந்து, நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்வர் என். ரங்கசாமி சட்டப்பேரவைக்கு வருகை தந்தார். இதை தொடர்ந்து, சட்டப்பேரவை தலைவர் ஆர். செல்வம் சட்டப்பேரவை தொடங்கி நடத்தினார். பின்னர், முதல்வர் என். ரங்கசாமி ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை அரசியல் நிர்வாக செலவுக்கான ரூ.5,396 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவை தலைவர் ஆர். செல்வம் இடைக்கால பட்ஜெட்டுக்கான ஆதரவை கோருவதற்கு குரல் வாக்கடுப்பை நடத்தினார்.

பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறப்பட்டது

இதில், அனைத்து கட்சியினர் சார்பிலும் பட்ஜெட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதன்படி, பட்ஜெட்டுக்கு சட்டமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. தற்போது, 5 மாதங்களுக்கு மட்டுமே இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் முடிந்து, அதில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் புதிய அரசு 2026-2027- ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். சட்டமன்ற கூட்டத் தொடரின் போது, 2025-2026 ஆம் நிதியாண்டுக்கான அரசின் பல்வேறு துறைகள் சார்பில் கூடுதல் செலவுக்கான அறிக்கையை முதல்வர் என். ரங்கசாமி மற்றும் துறை அமைச்சர்கள் ஆகியோர் துணை கொடையாக கோரினர்.

மேலும் படிக்க: நாளை சேலத்தில் விஜய் பிரசாரம்.. இவர்களுக்கு மட்டுமே அனுமதி.. தவெக வெளியிட்ட அறிவிப்பு!!

ரூ.537.38 கோடி கூடுதல் செலவினங்களுக்கு ஒப்புதல்

அதன்படி, அனைத்து துறைகளுக்கும் மொத்தமாக ரூ.537.38 கோடி கூடுதல் செலவினங்களுக்கு சட்டமன்றத்தின் ஒப்புதல் கோரப்பட்டது. அப்போது, சட்டப்பேரவை தலைவர் ஆர். செல்வம் சபையில் குரல் வாக்கெடுப்பை நடத்தி, கூடுதல் செலவினங்களுக்கான ஒப்புதலை பெற்றார். முன்னதாக சட்டப்பேரவை தலைவர் ஆர். செல்வம் பேச ஆரம்பித்தபோது, உருளையன்பேட்டை சுயேச்சை எம்எல்ஏ நேரு எழுந்து போலி மருந்து விவகாரத்துக்கும், சட்டப்பேரவை தலைவருக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவர் இந்த கூட்டத்தை நடத்த தகுதி அற்றவர் என்றும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மாநில அந்தஸ்துக்காக தேர்தலை புறக்கணிக்க தயார்

ஆனால், சபாநாயகர் தொடர்ந்து அவையை நடத்தினார். பின்னர், எம்எல்ஏ நேரு சபையை புறக்கணித்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து, முதல்வர் என்.ரங்கசாமி பேசுகையில், எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சிவா எழுந்து புதுச்சேரியின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மாநில அந்தஸ்து ஆகியவை கிடைக்கவில்லை என்றும், இதற்காக தேர்தலை புறக்கணிக்க தயாரா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு, இறுதியாக தேர்தலை புறக்கணிக்க தயார் என்று முதல்வர் என். ரங்கசாமி பதில் அளித்தார். இவ்வாறாக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றது.

மேலும் படிக்க: கூட்டணி ஆட்சி கதவை அடைத்த ஸ்டாலின்…ரகசியம் வைத்துள்ள செல்வப்பெருந்தகை..காங்கிரஸுக்கு இருக்கும் 2 சாய்ஸ்!

Follow Us