AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகம் முழுவதும் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வெதர்மேன் பிரதீப் ஜான் ரிப்போர்ட்..

Weather update: நாளை (பிப்.13) தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான முதல் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

தமிழகம் முழுவதும் மிதமான மழைக்கு வாய்ப்பு.. வெதர்மேன் பிரதீப் ஜான் ரிப்போர்ட்..
வெதர்மேன் பிரதீப் ஜான்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 12 Feb 2026 06:42 AM IST

சென்னை, பிப்ரவரி 12: தமிழகத்தில் தொடர்ந்து அதிகாலையில் பனிமூட்டம் இருக்கும் என்றும் நாளை தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம், இந்தியப் பெருங்கடலில் நடக்கும் முக்கிய மாற்றம் காரணமாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார். வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும். ஆனால், இந்த ஆண்டு வெப்பச்சலனம் காரணமாக இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. வரும் 18 அல்லது 19 ஆம் தேதிக்குள் மழை பெய்யுமா என்பது தெளிவாகத் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா? “மக்கள் முடிவு செய்வார்கள்”.. மாணிக்கம் தாகூர் பதிலடி!

இன்றைய வானிலை நிலவரம்:

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, இன்று (பிப்.12) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான முதல் மிதமான பனிமூட்டம் காணப்படும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

நாளை மழைக்கு வாய்ப்பு:

நாளை (பிப்.13) தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான முதல் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிபேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னை வானிலை நிலவரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 20-21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : 12ஆம் வகுப்பு மட்டுமே படித்து முடி மாற்று சிகிச்சை.. சென்னையில் சிக்கிய வட மாநில போலி மருத்துவர்கள்..

பிரதீப் ஜான் எச்சரிக்கை:

இது குறித்து அவர் தனது x பக்கத்தில் பகிர்ந்திருப்பதாவது, “வடகிழக்கு பருவமழை காலத்தில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிகம் தென்படாமல் இருந்த மாடன்-ஜூலியன் அலைவு (MJO), தற்போது வலுவான தீவிரத்துடன் இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைந்துள்ளது. ‘கிங் மேக்கர்’ என வர்ணிக்கப்படும் இந்த MJO இந்தியப் பெருங்கடலுக்கு வரும்போது, அது வானிலை போக்கையே முழுமையாக மாற்றியமைக்கும் ஆற்றல் கொண்டது. இதன் தாக்கத்தால், பிப்ரவரி கடைசி வாரம் முதல் மார்ச் முதல் வாரம் வரை தமிழகத்தில் மழை எதிர்பார்க்கப்படுகிறது.

இது பருவத்தையொட்டி பெய்யும் மழை அல்ல என்பதால், இந்த கணிப்பை மிகுந்த எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். இந்த நிகழ்வு பிப்ரவரி 18 அல்லது 19 ஆம் தேதி வாக்கில் உறுதிப்படுத்தப்படும். ‘MJO வந்தால் எதையாவது கொடுக்காமல் போகாது’ என்பது வானிலை வட்டாரங்களில் நிலவும் ஒரு பொதுவான கருத்தாக உள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

Follow Us