AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா? “மக்கள் முடிவு செய்வார்கள்”.. மாணிக்கம் தாகூர் பதிலடி!

Coalition govt Or one-party govt: ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது; இது எங்களுக்கும் தெரியும்; காங்கிரஸுக்கும் தெரியும் என்றார். மேலும், திமுக - காங்கிரஸ் இணைந்துதான் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும். ஆட்சியில் பங்கு என்ற பேச்சே தற்போது எழவில்லை. ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு பொருந்தாத கோரிக்கை என்று முதல்வர் கூறினார்.

கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா? “மக்கள் முடிவு செய்வார்கள்”.. மாணிக்கம் தாகூர் பதிலடி!
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 11 Feb 2026 13:14 PM IST

சென்னை, பிப்ரவரி 11: கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். 2006ல் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது நம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தவறு என்றும் கூறி அவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் என்ற கருத்தை எம்பி மாணிக்கம் தாகூர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கட்சி தலைமை அமைதி காக்குமாறு கூறியும் அவர் திமுகவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். காங்கிரஸ் தரப்பில் கூடுதல் தொகுதி கேட்பதாலேயே திமுகவும் இன்னும் பேச்சுவார்த்தை குழுவை அமைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க: தவெகவினர் மீது தாக்குதல்.. கர்ப்பிணி உட்பட 2 பேர் ஐசியூவில் சிகிச்சை.. விஜய் கடும் கண்டனம்!!

திமுக மீது வருத்தம் தெரிவித்த காங்கிரஸ்:

இந்த சூழ்நிலையில், டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழகப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், ‘கடந்த நவம்பர் மாதமே தமிழக காங்கிரஸ் கமிட்டிக்காக 5 பேர் கொண்ட ஒரு குழுவை காங்கிரஸ் தலைவர் அமைத்தார். இதைத்தொடர்ந்து இக்குழு கடந்த டிசம்பர் 3ஆம் தேதி முதல்வரைச் சந்தித்து பேசியது. இந்த சந்திப்பு நடந்து 70 நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்திருந்தார்.

திமுக – காங்கிரஸ் இடையே வலுத்த மோதல்:

இவ்வாறு காங்கிரஸ் கட்சியின் மேல் மட்டம் முதல் கீழ் மட்டம் வரை அனைத்து தரப்பிலும், திமுக மீது தங்களது அதிருப்தியை பொதுவெளியில் வெளிப்படுத்த தொடங்கினர். குறிப்பாக, அவர்கள் கேட்கும் தொகுதியை திமுக தர முன்வருகிறதா? இல்லையா? என்பதை அறிய வேண்டும் என்ற முனைப்பு அனைத்து தரப்பினரிடமும் அதிகரித்துள்ளது. அதோடு, இந்த பேச்சுவார்த்தைகள் ஒத்துவராத பட்சத்தில் காங்கிரஸின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சியில் பங்கு தமிழநாட்டு ஒத்துவராது:

இந்த சூழலில், இன்று காலை இந்தியா டுடே நடத்தும் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது; இது எங்களுக்கும் தெரியும்; காங்கிரஸுக்கும் தெரியும் என்றார். மேலும், திமுக – காங்கிரஸ் இணைந்துதான் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும். ஆட்சியில் பங்கு என்ற பேச்சே தற்போது எழவில்லை. ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு பொருந்தாத கோரிக்கை. அது எங்களை விட காங்கிரஸுக்கு நன்றாக தெரியும். நாங்கள் ஒற்றுமையாக இருப்பதை பிடிக்காதவர்கள் செய்யும் திட்டமிட்ட சதி தான் அந்த கோஷம் என்று அவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

குழப்பத்திற்கு விடை கிடைத்தது:

இதன் மூலம், தமிழகத்தில் நீண்ட நாட்களாக நீடித்த குழப்பத்திற்கு தெளிவான விடை கிடைத்துவிட்டது. அதாவது, முதல்முறையாக விஜய் ஆட்சியில் பங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டது முதல் இந்த பரபரப்பு தமிழகத்தில் கிளம்பியது. அதன்படி, ஆளுங்கட்சியான திமுக என்ன முடிவெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பிலும் அதிகரித்தது. குறிப்பாக கூட்டணி கட்சிகளின் அழுத்தத்தை எவ்வாறு அக்கட்சி சமாளிக்கும் போன்ற கேள்விகள் எழுந்தன. இதற்கு பதிலளிக்கும் வகையில், ஸ்டாலின் தமிழகத்திற்கு ஒத்துவராது என்று ஒரே வார்த்தையில் பதிலளித்துவிட்டார்.

மேலும் படிக்க: மத்திய அமைச்சர் பதவி கேட்கும் தேமுதிக?.. பேச்சுவார்த்தை நடத்தும் பாஜக.. திண்டுக்கல் சீனிவாசன் சொன்ன தகவல்!!

மக்கள் முடிவு செய்வார்கள்:

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினினிற்கு பதிலளிக்கும் வகையில், காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் பரபரப்பு கருத்தை முன்வைத்துள்ளார். அதன்படி, கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். 2006ல் மக்கள் தீர்ப்பை செயல்படுத்தாதது நம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தவறு என்றும் கூறி அவர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Follow Us