Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“ஆட்சியில் பங்கு”.. தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு

Share in governance: ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு பொருந்தாத கோரிக்கை. அது எங்களை விட காங்கிரஸுக்கு நன்றாக தெரியும் என்றும், நாங்கள் ஒற்றுமையாக இருப்பதை பிடிக்காதவர்கள் செய்யும் திட்டமிட்ட சதி தான் அந்த கோஷம் எனவும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

“ஆட்சியில் பங்கு”.. தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு
மு.க.ஸ்டாலின்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 11 Feb 2026 12:02 PM IST

சென்னை, பிப்ரவரி 11: ஆட்சியில் பங்கு’ என்பது தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது; இது எங்களுக்கும் தெரியும்; காங்கிரஸுக்கும் தெரியும் என்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னையில் இந்தியா டுடே நடத்தும் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அவர், திமுக – காங்கிரஸ் இணைந்துதான் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும். ஆட்சியில் பங்கு என்ற பேச்சே தற்போது எழவில்லை என்றார். ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு பொருந்தாத கோரிக்கை. அது எங்களை விட அவர்களுக்கு நன்றாக தெரியும். நாங்கள் ஒற்றுமையாக இருப்பதை பிடிக்காதவர்கள் செய்யும் திட்டமிட்ட சதி தான் அந்த கோஷம் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: தவெகவினர் மீது தாக்குதல்.. கர்ப்பிணி உட்பட 2 பேர் ஐசியூவில் சிகிச்சை.. விஜய் கடும் கண்டனம்!!

200 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்:

திமுக கூட்டணியில் ஏதாவது முறிவு ஏற்படுமா? என சிலர் சதி செய்கின்றனர்; இந்த சதியை பற்றி நாங்களும் கவலைப்படவில்லை; அவர்களும் கவலைப்படவில்லை என்று கூறிய அவர், திமுக கூட்டணியில் முறிவு ஏற்பட வேண்டும் என்பதற்காக “ஆட்சியில் பங்கு” என சிலர் கிளப்பிவிடுகின்றனர் என்றார். மேலும், திமுக- காங்கிரஸ் கூட்டணி நன்றாக இருக்கும் என்றும் அரசியலைத் தாண்டி என்னுடைய சகோதரர் போன்றவர் ராகுல் காந்தி எனவும் கூறிய அவர், சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும் எனவும் அவர் உறுதி கூறினார்.

திராவிட மாடல் 2.0 ஆட்சி தொடரும்:

திராவிட மாடல் ஆட்சியின் வெற்றிப்பயணத்தில் தமிழ்நாடு வரலாறு காணாத வகையில் வெற்றிநடை போட்டுச் செல்கிறது. இந்த வெற்றிப்பயணம் திராவிட மாடல் 2.0 ஆட்சியிலும் தொடரும். எப்போதும், என்றென்றும் மக்களுடன் இருக்கக்கூடிய இயக்கம் திமுக மக்களுக்காகப் பாடுபடக்கூடிய இயக்கம் திமுக. 2021 சட்டமன்றத் தேர்தலைவிட 2026 தேர்தல் கடினமாக இருக்கும் என்கிற பேச்சு, எதிர்க்கட்சிகள் மக்களை குழப்புவதற்காக பேசுவது. 2021 தேர்தலை விட 2026 தேர்தலில் திமுக கூட்டணி அதிகமான இடங்களைப் பெறும். திராவிட மாடல் அரசின் 5 ஆண்டுகால சாதனைகளை சொல்லி மக்களிடத்தில் நாங்கள் வாக்கு கேட்போம்.

மேலும் படிக்க: மத்திய அமைச்சர் பதவி கேட்கும் தேமுதிக?.. பேச்சுவார்த்தை நடத்தும் பாஜக.. திண்டுக்கல் சீனிவாசன் சொன்ன தகவல்!!

என்டிஏ கூட்டணிக்கு ஜீரோதான்:

பாஜகவின் வெறுப்பு அரசியலுக்குத் துணையாக இருப்பது அடிமைகள் மற்றும் அவதூறுகள். இவற்றைப் பயன்படுத்தி ஜனநாயகத்தின் விழுமியங்களை அழிக்கப் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு நன்மை செய்வார்கள் என்றுதான் ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைக்கப்படுகிறது. ஆனால், அவர்கள் ஒன்றிய பட்ஜெட்டில் கொடுத்தது ஜீரோதான். வரும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தமிழ்நாட்டு மக்கள் திருப்பிக் கொடுக்கப் போவது ஜீரோதான் என்றார்.