AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என முடிவு செய்யும் தேர்தல் – மு.க.ஸ்டாலின் பேச்சு

Booth Agent Meet : திமுக சார்பில் நடைபெற்ற வாக்குசாவடி முகவர் மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், வெல்லப்போவது தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்பதை முடிவு செய்யப்போவது இந்த தேர்தல். நாம் போராடுவது திமுகவின் வெற்றிக்காக அல்ல. தமிழ்நாட்டின் வெற்றிக்காக என்று பேசினார்.

தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என முடிவு செய்யும் தேர்தல் – மு.க.ஸ்டாலின் பேச்சு
முதல்வர் மு.க.ஸ்டாலின்
Karthikeyan S
Karthikeyan S | Published: 11 Feb 2026 21:11 PM IST

சென்னை, பிப்ரவரி 11 : தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் என் வாக்குசாவடி வெற்றி வாக்குசாவடி என்ற பெயரில் சென்னை – விழுப்புரம் மண்டலத்திற்கான வாக்குசாவடி முகவர் மாநாடு பிப்ரவரி 11, 2026 அன்று காஞ்சிபுரம் மாவட்டம் கோவளம் அருகே திருவிடந்தையில் உள்ள கலைஞர் திடலில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 49 சட்டன்ற தொகுதிகளை சேர்ந்த வாக்கு சாவடி குழு நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதும் நடைபெறும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து முகவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை மற்றும் வட தமிழ்நாடு திமுகவின் கோட்டை. தேர்தல் பணிகளில் திமுகவுக்கு ஈடு இல்லை. மைக்ரோ மேனேஜ்மென்ட் முதல் மேக்ரோ மேனேஜ்மென்ட் வரை அனைத்திலும் திமுக முன்னிலை வகித்து வருகிறது. இந்தியாவில் வேறு எந்த மாநில கட்சிகளுக்கும் இல்லாத கட்டமைப்பு நமக்கு உள்ளது. ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் 150 வாக்குகள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம். அந்த இலக்கை எட்டினால் 2 கோடியே 60 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற முடியும். என்றார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய வீடியோ

 

இதையும் படிக்க : கூட்டணி ஆட்சியா? அல்லது ஒரு கட்சி ஆட்சியா? “மக்கள் முடிவு செய்வார்கள்”.. மாணிக்கம் தாகூர் பதிலடி!

மேலும் பேசிய அவர் குறைந்தது 2 கோடியே 50 லட்சம் வாக்குகள் பெற வேண்டும். ஒவ்வொரு முகவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 40 முதல் 50 வாக்குகளை முழுமையாக பதிவு செய்யச் செய்வது அவசியம். ஒரு வாக்கு கூட தவறக் கூடாது. நாம் எவ்வளவு திட்டமிட்டு உழைத்தாலும், இறுதியில் வெற்றியை உறுதி செய்வது வாக்கு சாவடி முகவர்கள் தான். ஒவ்வொரு வாக்கு சாவடியையும் வெற்றி வாக்கு சாவடியாக மாற்றுபவர்கள் நீங்கள். உங்கள் உழைப்பின் மூலம் 7வது முறையாக நாம் ஆட்சிக்கு வரவிருக்கிறோம் என்றார்.4

தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா?

மேலும் பேசிய அவர், மக்கள் தான் நம் எஜமானர்கள். திராவிட மாடல் அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்து செல்லுங்கள். தமிழகத்தில் ஆட்சி்கு எதிரான மன நிலை இல்லை. கடந்த 2021 தேர்தலை விட இப்போது நமக்கு அதிக ஆதரவு உள்ளது. திமுக சாதனைகளை பட்டியலிட்டாலே மக்கள் நமக்கு தவறாமல் வாக்களிப்பார்கள். ஒவ்வொரு பணியாளரும் திமுக சாதனைகள் குறித்த புத்தகத்தை படிக்க வேண்டும். உங்களுக்கு பொறுப்பளிக்கப்பட்ட நூறு வாக்காளர்களுடன் தொடர்பில் இருங்கள். 200க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக வெற்றி பெறும் என்றார்.

இதையும் படிக்க : “ஆட்சியில் பங்கு”.. தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு

வெல்லப்போவது தமிழ்நாடு அணியா, டெல்லி அணியா என முடுவு செய்யப்போவது இந்த தேர்தல். வெறுப்பை விதைத்து அதன் மூலம் வெற்றி பெற துடிக்கும் விஷ விதைகளை தமிழகத்தில் விடக்கூடாது. நாம் போராடுவது திமுகவின் வெற்றிக்காக அல்ல. தமிழ்நாட்டின் வெற்றிக்காக. டெல்லி பாஜகவின் டப்பா என்ஜி முன்பாக, திராவிட மாடல் சூப்பர் என்ஜின் தலை குனியாது. அதற்காக ஓய்வின்றி உழைத்து வருகிறேன் என்று பேசினார்.

Follow Us