7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எங்கெல்லாம் தெரியுமா?
Tamil Nadu Weather Update: சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், ஜனவரி 23, 2026 தேதியான நேற்று பிற்பகல் முதல் பல்வேறு பகுதிகளில் லேசான சாரல் மழை தொடர்ந்து பெய்து வந்தது. இதன் காரணமாக குளிர்ந்த காற்று வீசி வருகிறது.
வானிலை நிலவரம், ஜனவரி 24, 2026: கிழக்கு திசை வளிமண்டல அலை நிலவி வருகிறது. அதேபோல் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஜனவரி 24, 2026 தேதியான இன்று தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை காணப்படும் வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடரும் மிதமான மழை:
இதனைத் தொடர்ந்து ஜனவரி 25 தேதியான நாளை தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்த சூழலில், வரக்கூடிய நாட்களில் லேசான அல்லது மிதமான மழை பதிவாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் – ரயில் சேவைகளில் முக்கிய மாற்றம்
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், ஜனவரி 23, 2026 தேதியான நேற்று பிற்பகல் முதல் பல்வேறு பகுதிகளில் லேசான சாரல் மழை தொடர்ந்து பெய்து வந்தது. இதன் காரணமாக குளிர்ந்த காற்று வீசி வருகிறது.
ஜனவரி 26ஆம் தேதியைப் பொருத்தவரையில், தென் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பதிவாகக் கூடும் என்றும், அதனைத் தொடர்ந்து 27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் கணிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலையில் மாற்றம் இருக்காது:
குறைந்தபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரையில் இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும் என்றும், பெரிய அளவில் மாற்றம் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரக்கூடிய நாட்களில் ஒரு சில இடங்களில் மழை பதிவாகும் என்பதன் காரணமாக இரவு நேர வெப்பநிலை சற்று உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: அது டப்பா எஞ்சின் – பிரதமரின் விமர்சனத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்
சென்னையில் மிதமான சாரல் மழை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரையில், பகல் நேரங்களில் ஓரளவு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை நகரைப் பொருத்தவரையில், நேற்று மாலை முதல் மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, அண்ணா சாலை, கிழக்கு கடற்கரை சாலை, திருவான்மியூர், ஓஎம்ஆர், பெரும்பாக்கம், மேடவாக்கம், மீனம்பாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வந்த சூழலில், இந்த லேசான மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.