AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ.. பாதுகாப்பு கமிஷ்னரின் ஆய்வு இன்று தொடக்கம்!

Poonamallee - Vadapalani Metro Construction | பூந்தமல்லி மற்றும் வடபழனி இடையே மெட்ரோ கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இந்த மெட்ரோ வழித்தடத்தை பாதுகாப்பு கமிஷ்னர் ஏ.எம்.சவுத்ரி தலைமையிலான குழு இன்று முதல் ஆய்வு மேற்கொள்ள உள்ளது.

பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ.. பாதுகாப்பு கமிஷ்னரின் ஆய்வு இன்று தொடக்கம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 11 Feb 2026 08:08 AM IST

சென்னை, பிப்ரவரி 11 : சென்னையில் (Chennai) சில முக்கிய வழித்தடங்களில் மெட்ரோ (Metro) பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவற்றில் பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நிலையில், பூந்தமல்லி – வடபழனி இடையிலான 16 கிலோ மீட்டர் தூரத்திற்கு இன்று (பிப்ரவரி 11, 2026) சோதனை தொடங்குகிறது. இந்த சோதனையை தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி தலைமையிலான குழு தொடங்க உள்ளது.

சென்னையில் 3 வழித்தடங்களில் 2 ஆம் கட்ட மெட்ரோ பணிகள்

சென்னையில் சுமார் 116 கிலோ மீட்டர் தூரத்திற்கு 3 வழித்தடங்களில் 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளில் கலங்கரை விளக்கம், பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் 26 கிலோ மீட்டர்கள் மற்றும் பூந்தமல்லி, போரூர் வரையிலான 10 கிலோ மீட்டர்கள் தூரத்திற்கு பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்த வழிகளில் மெட்ரோ சேவையை தொடங்குவதற்கான பாதுகாப்பு சான்றிதழ்களையும் ரயில்வே வாரியம் வழங்கியுள்ளது.

இதையும் படிங்க : மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு.. நிகிதாவை நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவு

பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் – பாதுகாப்பு சோதனை

இந்த நிலையில், பூந்தமல்லி – வடபழனி இடையிலான 16 கிலோ மீட்டர் தூரத்திற்கு தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு கமிஷ்னர் ஏ.எம்.சவுத்ரி தலைமையிலான குழுவினர் இன்று சோதனையை தொடங்க உள்ளனர். பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து காலை 10 மணிக்கு இந்த சோதனை தொடங்க உள்ளது. இந்த ஆய்வின் போது மெட்ரோ ரயில் சீராக மற்றும் பாதுகாப்பாக இயங்குகிறதா என்பதனை சோதனை செய்யும் விதமாக மெட்ரோ ரயில் பாதைகள், ரயில் நிலையங்கள், பிரேக்கிங் தொழில்நுட்பம், சிக்னல் தொழில்நுட்பம் மற்றும் பயணிகள் பாதுகாப்பு அம்சம் ஆகியவை சோதனை செய்யப்பட உள்ளன.

இதையும் படிங்க : விஜயுடன் கூட்டணி அமைக்கும் சசிகலா.. அறிவிப்பு எப்போது தெரியுமா? வெளியான தகவல்

இன்று தொடங்கும் இந்த மெட்ரோ ஆய்வில் பூந்தமல்லி மற்றும் போரூர் இடையேயான 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது என அதிகாரிகள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us