AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு.. நிகிதாவை நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவு..

நிகிதா அளித்த புகார் எந்த அளவுக்கு உண்மைத்தன்மை உடையது என்பது குறித்தும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதன் முடிவில், நிகிதா அளித்த நகை திருட்டு புகார் பொய்யானது என்பது நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பால் தெரிவிக்கப்பட்டது. இதனால், அந்த புகார் முடித்து வைக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக 90 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை தயாரித்து வருவதாகவும் சிபிஐ தரப்பில் கூறப்பட்டது.

மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு.. நிகிதாவை நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 10 Feb 2026 17:51 PM IST

மதுரை, பிப்ரவரி 10, 2026: மடப்புரம் அஜித் குமார் காவல் நிலையக் கொலை வழக்கில், பொய் புகார் அளித்ததாக கூறப்படும் நிகிதாவை மார்ச் 4ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, அஜித் குமார் மீது நிகிதா அளித்த நகை திருட்டு புகார் பொய்யானது என்பது சிபிஐ விசாரணையில் உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மடப்புரம் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார், நிகிதாவின் நகையை திருடியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அஜித்குமார் கொலை வழக்கு – நடந்தது என்ன?

விசாரணையின் போது, அஜித் குமாரை கடுமையாக தாக்கி சித்திரவதை செய்ததால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க: படிப்பு தான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன்.. மகளிர் கிறிஸ்தவ கல்லூரி விழாவில் பேசிய முதலமைச்சர்!

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. அஜித் குமார் கொலை வழக்கில் இதுவரை ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல், புகார் அளித்த நிகிதாவிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது.

நிகிதா அளித்த புகார் பொய்யானது என சிபிஐ தகவல்:

இந்தச் சூழலில், நிகிதா அளித்த புகார் எந்த அளவுக்கு உண்மைத்தன்மை உடையது என்பது குறித்தும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதன் முடிவில், நிகிதா அளித்த நகை திருட்டு புகார் பொய்யானது என்பது நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பால் தெரிவிக்கப்பட்டது. இதனால், அந்த புகார் முடித்து வைக்கப்பட்டதாகவும், இது தொடர்பாக 90 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை தயாரித்து வருவதாகவும் சிபிஐ தரப்பில் கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, “பொய் புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே?” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். இந்த நிலையில், நிகிதாவை அழைத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என சிபிஐ தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க: கூட்டணியை முடிக்காத தேமுதிக…அமைதிகாக்கும் தலைமை..குழப்பத்தில் தொண்டர்கள்.. என்னதான் திட்டம்?

நிகிதாவை நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவு:

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நிகிதாவை வரும் மார்ச் 4ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக சமன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இதனால், பொய் புகார் அளித்த நிகிதா கைது செய்யப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்நிலையில், அஜித் குமாரின் தாயார், பொய் புகார் அளித்த நிகிதா மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அஜித் குமார் கொலை வழக்கில் தொடர்ந்து ஏற்படும் இத்தகைய திருப்பங்கள், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

Follow Us