Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

படிப்பு தான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன்.. மகளிர் கிறிஸ்தவ கல்லூரி விழாவில் பேசிய முதலமைச்சர்!

Tamil Nadu CM MK Stalin Speech | தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கிறிஸ்தவ கல்லூரி விழாவில் கலந்துக்கொண்டு மாணவிகள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், படிப்பு தான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் என்று மாணவிகள் மத்தியில் பேசியுள்ளார்.

படிப்பு தான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன்.. மகளிர் கிறிஸ்தவ கல்லூரி விழாவில் பேசிய முதலமைச்சர்!
கோப்பு புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 10 Feb 2026 12:53 PM IST

சென்னை, பிப்ரவரி 10 : சென்னை (Chennai) மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் (WCC – Women’s Christian College) இன்று (பிப்ரவரி 10, 2026) நடைபெற்ற பாராட்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu Chief Minister MK Stalin) பங்கேற்றார். அப்போது பேசிய அவர் படிப்புதான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன் என்று கூறியுள்ளார். இந்த நிலையில், சென்னை மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்கள் மத்தியில் உரையாற்றியது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் உரையாற்றிய முதலமைச்சர்

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் நகர்புறங்களை விட கிராமப்புறங்களை சேர்ந்த மாணவிகள் தான் அதிகம் பயன் பெற்றுள்ளனர். புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் பெண்கள் உயர்கல்வி சேர்க்கை 34 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல குடும்பங்களின் தலை எழுத்தை திமுக அரசு மாற்றியுள்ளது என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : மகாபலிபுரம்-கொடைக்கானலில் ரோப் கார் சேவை…மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை!

காலை உணவு திட்டத்தின் மூலம்  19 லட்சம் மாணவர்கள் பயன்

பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவு திட்டத்தின் மூலம் சுமார் 19 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். வெற்றிக்கு குறுக்கு வழி கிடையாது. கடினமாக உழைக்க வேண்டும். எந்த துறையின் சாதனையாளர்களை எடுத்துக்கொண்டாலும், அவர்கள் அதில் அதிக முயற்சி செய்திருப்பார்கள். கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது.

இதையும் படிங்க : சென்னை மெரினா கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ்.. 2 ஆம் கட்ட பணிகள் தீவிரம்!

உங்கள் கல்விக்காக பெற்றோர்கள் தங்கள் பொருள், உழைப்பு எல்லாம் செலவிடுகிறார்கள். உங்களை பற்றி உங்களது பெற்றோர் பெருமையுடன் 4 பேரிடம் கூறினால், அதை விட மகிழ்ச்சி அவர்களுக்கு கிடையாது. பெண்கள் என்றாலே அழகு தான். ஆனால், படிப்பு தான் ஒரு பெண்ணுக்கு உண்மையான அணிகலன். போட்டி உலகில் நிலைத்து நிற்க ஒரு டிகிரி மட்டும் போதாது. மேற்கொண்டு படிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பெண்கள் பணிபுரிந்தால் ஒரு தலைமுறையே முன்னேறும்

நாட்டிலேயே வறுமை மிகுந்த மாநிலமாக இருந்த தமிழகம், இப்போது பொருளாதாரத்தில் 2வது இடத்தில் உள்ளது. உலக நாடுகளுடன் போட்டி போடும் நிலையில் தமிழ்நாடு விளங்குகிறது. அதிக பெண்கள் பணிபுரியும் மாநிலம் தமிழ்நாடு. பெண்கள் பணிபுரிந்தால் ஒரு தலைமுறையே முன்னேறும். நீங்கள் படித்து வாழ்க்கையில் முன்னேறினால் அதுதான் நீங்கள் எனக்கு தரும் நன்றி என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.