Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கூகுளில் விரைவாக தகவல்களை பெற வேண்டுமா? இந்த முக்கிய டிப்ஸை டிரை பண்ணுங்க!

Google Search Tips : இணையத்தில் தகவலை விரைவாகவும், துல்லியமாகவும் தேடக்கூடிய திறன் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் முக்கியமான ஒன்று. கூகுள் சர்ச் இன்ஜினில் இருக்கும் சில டிப்ஸ்களைப் பயன்படுத்துவதால் விரைவில் தகவல்களைப் பெறலாம். இந்த கட்டுரையில் உங்கள் தேடலை விரைவாக்கும் 5 எளிய கூகுள் டிப்ஸ்கள் குறித்து பார்க்கலாம்.

கூகுளில் விரைவாக தகவல்களை பெற வேண்டுமா? இந்த முக்கிய டிப்ஸை டிரை பண்ணுங்க!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 08 Jul 2025 18:34 PM

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இணையத்தில் கோடிக்கணக்கான தகவல்கள் கிடைக்கின்றன. அவற்றில் இருந்து நமக்கு தேவையானதை மட்டும் துல்லியமாக பெறுவது மிகவும் கடினமானதாக இருக்கிறது. மேலும் தகவல்களை சரியாகவும் சுருக்கமாகவும் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமான திறனாக பார்க்கப்படுகிறது. அது எக்ஸ்பெர்ட்களுக்கு மட்டுமே சாத்தியம் என கூறப்படுகிறது. உலகம் முழுவதும் பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தும் சர்ச் இன்ஜினான கூகுள் (Google), ஒவ்வொரு நிமிடமும் சுமார் 59 லட்சம் தேடல்களை எதிர்கொள்கிறது. ஆனால் பலரும் இதன் மேம்பட்ட தேடல் வசதிகள் பற்றி தெரிந்து கொள்ளாமல் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள்.

கூகுள் சர்ச் இன்ஜின், பல ஆண்டுகளாக பல பயனுள்ள தகவல்களைக் கொண்ட சக்திவாய்ந்த தகவல் கருவியாக மாறியுள்ளது. இதில் சில ட்ரிக்ஸ் தெரிந்திருந்தால், உங்கள் நேரத்தை மிச்சப்படுவதோடு மிக, துல்லியமான முடிவுகள் கிடைக்கும் வகையிலும் மாற்றிக்கொள்ளலாம். மாணவர்கள், வேலைசெய்யும் நபர்கள், மற்றும் சாதாரண பயனர்கள் யாராக இருந்தாலும் அவர்களது அன்றாட வாழ்வில் இந்த டிப்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 filetype: மூலம் பிடிஎஃப் உள்ளிட்ட டாக்குமெண்ட்களை தேடலாம்

நீங்கள் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் PDF, DOC, PPT போன்ற ஃபார்மெட்களில் கூகுகளில் தேட விரும்பினால், filetype என்பதை உபயோகிக்கலாம். உதாரணமாக Microsoft annual report 2024 filetype: pdf என டைப் செய்தால் அதிகாரப்பூர்வ டாக்குமென்ட் உங்களுக்கு எளிதாக கிடைக்கும்.  இது Microsoft annual report 2024 என்று தேடுவதை விட உங்கள் வேலை எளிதாகும்.

தேவையில்லாத வார்த்தைகளை நீக்க (-) பயன்படுத்தலாம்

நீங்கள் கூகுளில்  தேடும் போது குறிப்பிட்ட சில விஷயங்களைத் தவிர்க்க (-) மைனஸை பயன்படுத்தலாம். உதாரணமாக மார்கெட் ஸ்டிராட்டிஜியில் சமூக வலைதளங்கள் குறித்த தகவல் வேண்டாம் என்றால் Marketing Strategy – social media என தேடினால், உங்களுக்கு கிடைக்கும் முடிவுகளில் Social Media தொடர்பான தகவல்கள் மட்டும் நீக்கப்படும்.

இதையும் படிக்க: கம்ப்யூட்டரில் வேலை பார்க்கிறீங்களா? பயனுள்ள 10 கீபோர்டு ஷார்ட்கட் இதோ!

ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் மட்டும் தேட site: என்பதை பயன்படுத்தலாம்

உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் இருந்து மட்டும் தகவல் வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் தேடவேண்டிய கீவேர்டுடன் site: என்பதற்கு அடுத்து இணையதளத்தை குறிப்பிட்டால், அந்த இணையதளத்தில் இருந்து மட்டும் தகவல் கிடைக்கும். குறிப்பாக உங்களுக்கு டிவி9 தமிழ் இணையதளத்தில் இருந்து EPFO குறித்த தகவல் வேண்டும் என்றால் கூகுளில் EPFO site: www.tv9tamilnews.com என டைப் செய்தால், அந்த இணையதளத்தில் இருந்து மட்டும் தகவல் கிடைக்கும்.

பட்ஜெட் விலையில் பொருட்களைத் தேட( ..) என்பதைப் பயன்படுத்தலாம்.

நீங்கள் ஆன்லைனில் பொருட்களை தேடும்போது, நீங்கள் விரும்பும் பட்ஜெட்டுக்குள் பொருட்கள் வேண்டும் என்றால் . . என்பதைப் பயன்படுத்தலாம். உதாரணமாக பட்ஜெட் விலையில் போன் தேடுகிறீர்கள் என்றால், கூகுளில், phone Rs.10,000 .. Rs.15000 என டைப் செய்தால் அந்த பட்ஜெட்டுக்குள் இருக்கும் போன்களின் பட்டியல் மட்டும் உங்களுக்கு கிடைக்கும்.

குறிப்பிட்ட வார்த்தைகளை வைத்து மட்டும் தகவல்களைப் பெற (~) பயன்படுத்தலாம்

நீங்கள் பெற வேண்டிய தகவல்களுக்கு ஒரே வார்த்தை மட்டும் தான் உங்களுக்கு தெரியும் என்றால் (~) என்பதைப் பயன்படுத்தலாம். உதாரணமாக ஆரோக்கியமான உணவுகளைப் பற்றி தேட வேண்டும் என்றால், healthy (~) என்பதை வைத்து தேடலாம்.