Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Google Meet : தமிழில் பேசினால் ஆங்கிலத்தில் கேட்கும்.. கூகுள் மீட்டில் வந்த அசத்தல் அம்சம்!

Google Meet Adds Real-Time Speech Translation | பெரும்பாலான நபர்களுக்கு ஆங்கிலம் பேசுவதில் சில சிக்கல்கள் இருக்கும். ஆங்கிலத்தில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கும் கூட பேசுவதில் சிக்கல் இருக்கும். இந்த நிலையில் தான் கூகுள் நிறுவனம் கூகுள் மீட் செயலியில் ஒரு அசத்தல் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

Google Meet : தமிழில் பேசினால் ஆங்கிலத்தில் கேட்கும்.. கூகுள் மீட்டில் வந்த அசத்தல் அம்சம்!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 24 May 2025 11:54 AM

கூகுள் (Google) நிறுவனத்தின் கூகுள் மீட் (Google Meet) செயலியை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, அலுவலகங்களில் ஊழியர்களுடன் உரையாற்றுவதற்காக இந்த கூகுள் மீட் செயலி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கூகுள் மீட் செயலியில் ஏற்கனவே பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ள நிலையில், பயனர்களுக்கு உதவும் வகையில் அவ்வப்போது பல புதிய அப்டேட்டுகளை அந்த நிறுவனம் வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில், தற்போது ஒரு அட்டகாசமான அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அது என்ன அம்சம், அதனை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் கூகுள் மீட்

முன்பெல்லாம் ஒருவரை முகம் பார்த்து பேச வேண்டும் என்றால் நேரில் சந்தித்து மட்டுமே பேச முடியும். ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியால், தற்போது எங்கிருந்து வேண்டுமானாலும் ஒருவருடன் ஒருவர் முகம் பார்த்து பேச முடியும். அந்த வகையில் நேரில் பேசுவது போன்ற அனுபவத்தை கொடுக்கவும், முகம் பார்த்து பேசவும் பயன்படுத்தப்படும் முக்கிய செயலி தான் கூகுள் மீட். பல செயலிகள் இந்த அம்சத்தை வழங்கினாலும் கூகுள் மீட் செயலியில் மட்டும் தான் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதன் காரணமாக வேறு நிகழ்ச்சிகளும் இந்த கூகுள் செயலியில் மேற்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதிக மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் மீட் செயலியை மேம்படுத்தும் வகையில், அந்த நிறுவனம் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது குரல் மொழிப்பெயர்ப்பு அம்சத்தை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதன் மூலம் தமிழில் பேசினாலும், அது அந்த பக்கத்தில் இருந்து கேட்கும் நபருக்கு ஆங்கிலத்தில் கேட்கும். இதனால், பேசுவதில் நீடித்து வந்த மொழில் சிக்கலுக்கு தீர்வு காணப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கூகுள் மீட்டில் வந்த குரல் மொழிப்பெயர்ப்பு – எப்போது பயன்பாட்டுக்கு வரும்

கூகுள் நிறுவனம் தனது கூகுள் மீட் செயலியில் நேரடி குரல் மொழிப்பெயர்ப்பு (Real Time Speech Translation) அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. Consumer AI Subscribers-க்கு இந்த அம்சம் முதலில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. பிறகு படிப்படியாக மற்ற பயனர்களுக்கும் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரிஷப ராசியில் சுக்கிரன்.. இந்த 5 ராசிக்கு செல்வம் கிட்டும்!
ரிஷப ராசியில் சுக்கிரன்.. இந்த 5 ராசிக்கு செல்வம் கிட்டும்!...
கில் கேப்டன்.. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
கில் கேப்டன்.. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு...
'STR 50' படத்தில் திருநங்கை வேடத்தில் சிம்பு நடிக்கிறாரா?
'STR 50' படத்தில் திருநங்கை வேடத்தில் சிம்பு நடிக்கிறாரா?...
ஆதாரில் உள்ள விவரங்களை இலவசமாக அப்டேட் செய்வது எப்படி?
ஆதாரில் உள்ள விவரங்களை இலவசமாக அப்டேட் செய்வது எப்படி?...
காலையில் எழுந்திருக்கும் போதே உடல் சோர்வா? 5 முக்கிய காரணங்கள்!
காலையில் எழுந்திருக்கும் போதே உடல் சோர்வா? 5 முக்கிய காரணங்கள்!...
வட்டி மட்டுமே ரூ.89,989 கிடைக்கும் - அஞ்சலக FD திட்டம்!
வட்டி மட்டுமே ரூ.89,989 கிடைக்கும் - அஞ்சலக FD திட்டம்!...
”ED-க்கும், மோடிக்கும் பயப்பட மாட்டோம்" துணை உதயநிதி ஸ்டாலின்
”ED-க்கும், மோடிக்கும் பயப்பட மாட்டோம்
பாஜக-திமுக அணிக்கு பின்னணி உள்ளதா? – சீமான் கேள்வி
பாஜக-திமுக அணிக்கு பின்னணி உள்ளதா? – சீமான் கேள்வி...
அறைக்குள் நுழைந்த ராஜ நாகத்தை அசால்டாக கையாண்ட நபர்!
அறைக்குள் நுழைந்த ராஜ நாகத்தை அசால்டாக கையாண்ட நபர்!...
இணையத்தில் மாமன் படம்.. உழைப்பை மதிக்குமாறு சூரி வேண்டுகோள்!
இணையத்தில் மாமன் படம்.. உழைப்பை மதிக்குமாறு சூரி வேண்டுகோள்!...
சனி பகவானை மகிழ்விக்க என்ன செய்யலாம்? - ஆன்மிக வழிகள் இதோ!
சனி பகவானை மகிழ்விக்க என்ன செய்யலாம்? - ஆன்மிக வழிகள் இதோ!...