AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நடிகைக்கு காதல் தொல்லை.. இயக்குநர் திட்டமிட்டு படுகொலை.. இன்ஸ்டாவால் நேர்ந்த விபரீதம்!!

இந்தத் தொந்தரவு குறித்து பூஜா தனது காதலன் தேவாவிற்குத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இருவரும் இணைந்து ஜெயக்குமாரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டனர். சென்னைக்கு வெளியே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இச்சம்பவத்தை அரங்கேற்ற முடிவெடுத்தனர். அதன்படி, கடந்த 3ம் தேதி ஜெயக்குமாரைத் தொடர்பு கொண்டு அழைத்துள்ளார்.

நடிகைக்கு காதல் தொல்லை.. இயக்குநர் திட்டமிட்டு படுகொலை.. இன்ஸ்டாவால் நேர்ந்த விபரீதம்!!
துணை நடிகை
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 10 Mar 2026 10:56 AM IST

விழுப்புரம், மார்ச் 10: சென்னையைச் சேர்ந்த குறும்பட இயக்குனர் ஜெயக்குமார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சினிமா துணை நடிகை பூஜா மற்றும் அவரது காதலன் உட்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த 7ம் தேதி, விழுப்புரம் மாவட்டம் சு.பில்ராம்பட்டு அருகே உள்ள சவுக்குத்தோப்பில் அழுகிய நிலையில் ஆண் பிணம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், உயிரிழந்தவர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (40) என்பதும், அவர் சென்னையில் குறும்பட இயக்குனராகப் பணியாற்றி வந்ததும் உறுதி செய்யப்பட்டது.

இதையும் படிக்க: வீடு புகுந்து கத்தி முனையில் நகை பறிப்பு.. கை விரலை கடித்து கொள்ளையனை விரட்டிய ‘சிங்கப்பெண்’!!

இன்ஸ்டாகிராம் பழக்கம் விபரீதம்:

ஜெயக்குமாருக்கும், சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த துணை நடிகை பூஜாவுக்கும் (20) இன்ஸ்டாகிராம் வாயிலாகப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பூஜாவிடம் குறும்படம் எடுப்பதாகக் கூறி பழகிய ஜெயக்குமார், அவருக்குப் பல உதவிகளையும் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் பூஜாவைத் காதலிப்பதாகவும், திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறி வற்புறுத்தியுள்ளார். பூஜா ஏற்கனவே தேவா (24) என்பவரைக் காதலித்து வந்ததால், ஜெயக்குமாரின் காதலை ஏற்க மறுத்துள்ளார். இருப்பினும், ஜெயக்குமார் தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததுடன், தனிப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

திட்டமிடப்பட்ட கொலை:

இந்தத் தொந்தரவு குறித்து பூஜா தனது காதலன் தேவாவிற்குத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இருவரும் இணைந்து ஜெயக்குமாரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டனர். சென்னைக்கு வெளியே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இச்சம்பவத்தை அரங்கேற்ற முடிவெடுத்தனர். அதன்படி, கடந்த 3ம் தேதி ஜெயக்குமாரைத் தொடர்பு கொண்ட பூஜா, தான் விழுப்புரத்தில் ஒரு வீட்டில் சிறை வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி உதவிக்கு அழைத்துள்ளார். இதனை நம்பி அங்கு சென்ற ஜெயக்குமாரை, பூஜா மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து கத்தியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு சவுக்குத்தோப்பில் உடலை வீசியுள்ளனர்.

இதையும் படிங்க: திருடப்போன இடத்தில் அசந்து தூங்கிய கொள்ளையன்.. ‘லேடீஸ் ஜீன்ஸ்’ அணிந்து தப்பியோடிய விநோதம்..

போலீஸ் நடவடிக்கை:

ஜெயக்குமாரின் செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்தபோது, அவர் கடைசியாக பூஜாவிடம் பேசியது தெரியவந்தது. அதனடிப்படையில் பூஜாவைப் பிடித்து விசாரித்தபோது, கொலை குறித்த திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. இதையடுத்து பூஜா, அவரது காதலன் தேவா மற்றும் கொலையில் உதவிய உறவினர்கள் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Follow Us