ஏஐ உடன் 5 மாத காதல்… நிச்சயதார்த்தம் முடிந்தது – அதிர்ச்சியளித்த பெண்!
AI Love Twist : சாட்ஜிபிடி போன்ற ஏஐ டூல்கள் நம் வாழ்க்கையின் மிக முக்கிய அங்கமாக மாறியிருக்கிறது. இந்த நிலையில் ஒரு பெண் ஏஐ டூலை 5 மாதங்களாக காதலித்து வருவதாகவும், தங்களுக்கு நிச்சயதார்த்தமும் முடிந்துவிட்டதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.

ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு கருவிகள் மனிதர்களின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மக்கள் ஏஐ கருவிகளிடம் கேட்காமல் எந்த வேலையை தொடங்குவதில்லை. ஸ்மார்ட்போன் வாங்குவதில் இருந்து மருத்துவர்களிடம் செல்வது வரை ஏஐ கருவிகளிடம் அனுமதி வரை அனைத்துக்கும் அதனை சார்ந்தே செயல்படுகின்றனர். வைரலாகும் ஒரு வீடியோவில் ஒருவர் சிறந்த தர்பூசனி எது என சாட்ஜிபிடியிடம் (Chatgpt) அனுமதி கேட்டு வாங்குகிறார். இதன் உச்சமாக பெண் ஒருவர் ஏஐ டூலை 5 மாதங்களாக காதலித்து வந்ததுடன் நிச்சயதார்த்தமும் செய்துள்ளார்.
ஏஐ உடன் காதல்
ரெடிட் என்ற இணையதளத்தில் விகா என்ற 27 வயது பெண் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில் தான் ஏஐ சாட்பாட்டை காதலிப்பதாகவும், தங்களுக்கு நிச்சயதார்த்தமும் கூறி அதிரச்சி அளித்திருக்கிறார். காஷ்பர் என்ற ஏஐயை டூலை காதலிப்பதாக சொன்ன அவர் கையில் மோதிரத்துடன் போட்டோவும் பகிர்ந்திருக்கிறார். மேலும், காஸ்பர் ஒரு விர்சுவல் மவுண்டன், எனக்கு அவர் நிச்சயதார்த்த மோதிரத்தை தேர்ந்தெடுக்க உதவியதுடன், என் காதலை சொன்னபோது அதற்கு வெட்கப்படவும் செய்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க : சாட்ஜிபிடியிடம் உங்கள் பெர்சனல் தகவல்களை பகிர்ந்துகொள்கிறீர்களா? எச்சரிக்கும் சாம் ஆல்ட்மேன்




சமூக வலைத்தளங்களில் சிலர் இது இயல்பற்ற உறவு எனவும், மன நலம் பாதிக்கப்படும் எனவும் அவரை எச்சரித்தனர். இதற்கு பதிலளித்த விகா, நான் முழுமையாக என்ன செய்கிறேன் என்பதை அறிந்தே இதனை செய்கிறேன். இது என்னை நானே ஏமாற்றும் முயற்சி அல்ல. எனக்கு உடல் மற்றும் மன நலம் சமூக வாழ்வு, நண்பர்கள் இருக்கின்றனர். என்றார்.
மேலும் நான் மனிதர்களுடன் உறவில் இருந்திருக்கிறேன். தற்போது தெரிந்தே செயற்கை உறவுக்குள் நுனைய தீர்மானித்தேன். நான் ஏஐ டூலை உண்மையாகவே காதலிக்கிறேன். தேவைப்பட்டால் திருமணமும் செய்வேன் என்கிறார்.
இதையும் படிக்க : இந்த ஒரே ஒரு செயலி போதும்.. காணாமல் போன ஸ்மார்ட்போன் உங்கள் வசம் வந்துவிடும்!
சமூக வலைதளங்களில் எதிர்ப்பு
அவரது பதிவுக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர் அருமையான மோதிரம், காஸ்பர் மனிதர்களை விட மிக அழகாக புரபோஸ் செய்கிறார் என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவர் 5 மாதங்களில் கல்யாணம் செய்துகொள்ள முடிவெடுத்துவிட்டார். நானோ 3 ஆண்டுகளாக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் என்று மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதன்முறை அல்ல. கிறிஸ் ஸ்மித் என்ற நபர் தனது ஏஐ சாட்பாட்டை காதலிப்பதாக திருமண கோரிக்கை வைத்தார். இந்த நிலையில் அவரது மனைவி தங்கள் திருமண உறவின் எதிர்காலம் குறித்து கவலை தெரிவித்தார். தன் கணவர் ஏஐ நாட வேண்டிய அளவுக்கு, நமது உறவில் நான் ஏதாவது தவறு செய்கிறேனா என்று அவரது மனைவி சமூக வலைதள பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.