Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஜிபிடி-5 மாடலை அறிமுகப்படுத்திய ஓபன் ஏஐ – அப்படி என்ன ஸ்பெஷல்?

OpenAI Launches GPT-5 : ஏஐ சாட்பாட்கள் மூலம் ஏற்கனவே அதிசயங்களை உருவாக்கி வரும் ஓப்பன் ஏஐ நிறுவனம் ததனது  புதிய ஜிபிடி-5 மாடலை  அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் மற்றும் இதன் விலை உள்ளிட்ட விவரங்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

ஜிபிடி-5 மாடலை அறிமுகப்படுத்திய ஓபன் ஏஐ – அப்படி என்ன ஸ்பெஷல்?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 08 Aug 2025 22:18 PM

ஏஐ  (Artificial Intelligence) சாட்பாட்கள் மூலம் ஏற்கனவே அதிசயங்களை உருவாக்கி வரும் ஓப்பன் ஏஐ (Open AI),  புதிய ஜிபிடி-5 (GPT-5) மாடலை  அறிமுகப்படுத்தியுள்ளது.   இந்த அப்டேட் மூலம் மொழிகளை முன்பைக் காட்டிலும் மிக தெளிவாக புரிந்துகொள்ள முடியும்.  இதன் மூலம் நம் கேள்விகளை மிக சரியாக புரிந்துகொண்டு அதற்கேற்ப பதில்களையும் அளிக்கிறது. மேலும் இது நமது டெக்ஸ்ட் மட்டுமல்லாமல் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆடியோவையும் புரிந்துகொண்டு அதற்கேற்ப பதிலளிக்க முடியும். இந்த புதிய அப்டேட்டானது, முன்பைக் காட்டிலும்,  அதிகமான உரையாடல்களை நினைவில் வைத்திருக்க முடியும். இது நமக்குத் தேவையான தகவல்களை வழங்குவது மட்டுமல்லாமல், சிக்கலான விஷயங்களுக்கும் எளிதில் தீர்வு காண முடியும்.

இது சந்தாதாரர்கள் மட்டுமல்லாமல் இலவசமாக பயன்படுத்துபவர்களும் இந்த  GPT-5 ஐப் பயன்படுத்தலாம். இருப்பினும், எந்த வசதி எவ்வளவு காலத்துக்கு இலவசமாக கிடைக்கும் என்பது குறித்து விளக்கமளிக்கப்படவில்லை. இதுவரை, ப்ரோ மற்றும் டீம் பயனர்களுக்கு மட்டுமே GPT-5 இலவசமாக பயன்படுத்தும் வாய்ப்பு இருந்தது. தற்போது புதிய அப்டேட்டில், அனைவரும் ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முறை மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும். இந்த புதிய மாடல் GPT-5, GPT-5-Mini, GPT-5-Nano என மூன்று அளவுகளில் கிடைக்கிறது. இருப்பினும், நீங்கள் GPT-5 வரம்பை அடைந்தவுடன், தானாக GPT-5 Miniக்கு மாற்றும்.

இதையும் படிக்க : இந்தியாவின் அதிகம் பயன்படுத்தும் 8 முக்கிய அரசு செயலிகள் – இந்த லிஸ்ட்டில் உங்க ஆப் இருக்கா?

GPT-5 மாதிரிய இலவசமாக பயன்படுத்த முடியுமா?

இலவச பயனர்களுக்கு ஓப்பன் ஏஐ இன்னும் சரியான வரம்பை நிர்ணயிக்கவில்லை. இதனால் நாம் குறிப்பிட்ட வரம்பை மீறினால் அது உங்களை GPT-5 Miniக்கு மாறும்.  இந்த பதிப்பு GPT-4 ஐ விட மிகவும் சிறந்தது, ஆனால் GPT-5 போல சக்தி வாய்ந்தது அல்ல. குறிப்பிட்ட வரம்பு முடிந்த பிறகும், நீங்கள் இன்னும் GPT-5 மினியைப் பயன்படுத்தலாம். இலவச பயனர்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தைத் தொடர்ந்து வழங்குவதற்காக இந்த பதிப்பு குறிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் முழு GPT-5 ஐ வரம்புகள் இல்லாமல் பயன்படுத்த விரும்பினால், நீங்கள் ஒரு Pro சந்தாவை பணம் செலுத்தி பெற வேண்டும்.

இதையும் படிக்க : வைஃபை மூலம் நபர்களை அடையாளம் காணுதல்.. புதிய தொழில்நுட்பத்தால் பாதுகாப்பா..? சிக்கல்களா?

இந்த நிலையில் இந்தியாவின் சாட்ஜிபிடி பயன்பாடு குறித்து பேசிய சாம் ஆல்ட்மேன், ”இந்தியாவில் சாதாரண மக்கள் முதல் வணிக நிறுவனங்கள் வரை அனைவரும் ஏஐ பயன்படுத்துவதைக் கண்டு ஆச்சரியப்படுவதாக அவர் கூறினார். AI உடன் இந்தியர்கள் செய்து வரும் புதுமையான சோதனைகள் மிகச் சிறந்தவை என்றும் அவர் கூறினார். இந்தப் போக்கைத் தொடர இந்தியாவில் ஓப்பன் ஏஐ தயாரிப்புகளை மேலும் கிடைக்க முயற்சிப்போம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.