Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Oakley Meta HSTN: மெட்டாவின் ஏஐ ஸ்மார்ட் கண்ணாடி ! அப்படி என்ன ஸ்பெஷல் ?

Oakley Meta AI Powered Smart Glass : ஆக்லே மற்றும் மெட்டா ஆகிய நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய ஸ்மார்ட் கண்ணாடியை அறிமுகப்படுத்தியிருக்கின்றன. இந்த ஸ்மார்ட் கண்ணாடி முக்கியமாக விளையாட்டு வீரர்கள், ஆக்டிவான லைஃப் ஸ்டைல் கொண்டவர்கள், மற்றும் சைக்கிளிங் செல்பவர்கள், கோல்ஃப் விளையாடுபவர்கள், ஸ்கேட்டிங் செய்பவர்கள் போன்ற உடல் இயக்கம் கொண்டவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

Oakley Meta HSTN:  மெட்டாவின் ஏஐ ஸ்மார்ட் கண்ணாடி ! அப்படி என்ன ஸ்பெஷல் ?
ஆக்லே மெட்டாவின் ஏஐ ஸ்மார்ட் கண்ணாடி
Karthikeyan S
Karthikeyan S | Published: 20 Jun 2025 23:16 PM IST

ஏஐ (AI) தொழில்நுட்பம் இன்று பல துறைகளில் முன்னேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களிலும் ஏஐ நுழைந்து விட்டன.  அந்த வகையில் ஆக்லே (Oakley) மற்றும் மெட்டா (Meta) நிறுவனங்கள் இணைந்து, விளையாட்டு வீரர்களுக்கு (athletes) மற்றும் விளையாட்டு ஆர்வலர்களுக்கு ஏற்ற வகையில் ஏஐ (AI)தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் கண்ணாடியை  ஆக்லே மெட்டா எச்எஸ்டிஎன்னை (Oakley Meta HSTN)வெளியிட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் கண்ணாடி முக்கியமாக விளையாட்டு வீரர்கள், ஆக்டிவான லைஃப் ஸ்டைல் கொண்டவர்கள், மற்றும் சைக்கிளிங் செல்பவர்கள், கோல்ஃப் விளையாடுபவர்கள், ஸ்கேட்டிங் செய்பவர்கள் போன்ற உடல் இயக்கம் கொண்டவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் கண்ணாடியின் முக்கிய அம்சங்கள்:

  • இதில் 3கே அல்ட்ரா எச்டி கேமார கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1080பியை விட தெளிவாக காட்சிகளைக் காண முடியும். மேலும் முன்னனி ரேபான் மெட்டாவின் ஸ்மார்ட் கண்ணாடியைக் காட்டிலும் மேம்பட்டது. இதில் உள்ள கேமரா மூல் உங்கள் செயல்களை தெளிவாக கண்காணிக்க முடியும்.
  • இதில் உள்ள ஸ்பீக்கர் வசதி (Open ear) இயர் போன் போல காதுகளில் மாட்டாமல் ஒலியைக் கேட்கலாம்.
  • மெட்டாவின் வாய்ஸ் அசிஸ்டென்ட் கொடுக்கப்பட்டிருப்பதால் ஹே மெட்டா (Hey Meta) என அழைத்து வீடியோ எடுக்கலாம்,  காற்றின் வேகம், கால நிலை போன்ற தகவல்களைக் கேட்கலாம்.
  • இதில் ஐபிஎக்ஸ்4 வாட்டர் ப்ரூஃப் கொடுக்கப்பட்டிருப்பதால் மழையிலும் பயமில்லாமல் பயன்படுத்த முடியும்.
  • இதில் உள்ள அதிவேக சார்ஜிங் வசதி, 20 நிமிடங்களில் 50 சதவிகிதம் வரை சார்ஜ் செய்யக் கூடிய திறன் கொண்டது. மேலும் சார்ஜிங் கேஸ் மூலம் 48 மணி நேர பேட்டரி பேக்கப் கிடைக்கும்.
  • ஒருமுறை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் தொடர்ச்சியாக பயன்படுத்த முடியும். மேலும் ஸ்டேண்ட் பையில் 19 மணி நேரம் வரை செயல்படும். கூடுதல் சார்ஜிங்கிற்கு கேஸை பயன்படுத்தினால் 48 மணிநேரம் வரை பயன்படுத்தலாம்.

ஸ்மார்ட் கண்ணாடியின் சிறப்புகள் குறித்து வீடியோ வெளியிட்ட ஆக்லே நிறுவனம்

 

விலை மற்றும் கிடைக்கும் நாடுகள்

இதன் விலை 499 அமெரிக்க டாலர்கள் என்று கூறப்படுகிறது. மேலும் இந்திய மதிப்பில் ரூ.43,200 என்று கூறப்படுகிறது. இது லிமிட்டட் எடிசனுக்கான விலை.

நேரடி விற்பனை இந்த ஆண்டு இறுதிக்குள் செய்யப்படும் என்றும் அதன் விலை ரூ.399 அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ.34,500 என்று கூறப்படுகிறது.

லிமிட்டட் எடிசன் தற்போது அமெரிக்கா, கனடா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் கிடைக்கும்.

மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா , மெக்சிகோ மற்றும் பிற ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.