AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

5 ஆண்டுகளில் ஏஐ பல வேலைகளை மாற்றி அமைக்கும் – கூகுள் டீப் மைண்ட் சிஇஓ எச்சரிக்கை

AI to Disrupt Careers : இன்னும் 5 ஆண்டுகளில் ஏஐ பல வேலைகளை மாற்றி அமைக்கும் எனவும் அதனை தவிர்க்க முடியாது எனவும் கூகுள் டீப்மைண்ட் சிஇஓ டெமிஸ் ஹசாபிஸ் எச்சரிக்கைவிடுத்துள்ளார். மேலும் இளைஞர்களும் மாணவர்களும் அதற்கு தயாராக வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியிருக்கிறார்.

5 ஆண்டுகளில் ஏஐ பல வேலைகளை மாற்றி அமைக்கும் – கூகுள் டீப் மைண்ட் சிஇஓ எச்சரிக்கை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 28 May 2025 19:19 PM IST

தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்து வரும் இந்தக் காலத்தில், செயற்கை நுண்ணறிவு (AI) நமது வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் ஏஐ காரணமாக இன்னும் 5-10 ஆண்டுகளில் பல வேலைகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என கூகுள் டீப்ப்மைண்ட் (Google DeepMind) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டெமிஸ் ஹசாபிஸ் எச்சரித்தார். மனித அறிவுக்கு சமமாக சிந்திக்கும் மற்றும் செயலாற்றும் அளவுக்கு ஏஐ மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கிறது. தற்போது கல்வி, மருத்துவம், வணிகம் போன்ற பல துறைகளில் ஏஐ ஆக்கிரமித்திருக்கிறது.  எடுத்துக்காட்டாக, சாட்ஜிபிடி, ஜெமினி, டீப்சீக் என  போன்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளை மக்கள் பயன்படுத்த தொடங்கியிருக்கின்றனர். இந்த டூல்கள், தகவல்களை பகுப்பாய்வு செய்வது, பதில்கள் தருவது போன்ற பல வலைகளை செய்கிறது.

ஏஐ காரணமாக புதிய வேலைகள் உருவாகும்

டீப்மைண்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக  இருக்கும் டெமிஸ் ஹசாபிஸ், சமீபத்தில் Google I/O 2025 மாநாட்டில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், இன்னும் 5 முதல் 10 ஆண்டுகளில், ஏஐ பல வேலைகளை மாற்றிவிடும். ஆனால் அதே நேரத்தில், புதிய,  முன்பைக் காட்டிலும் அதிக மதிப்புள்ள வேலைகளும் உருவாகும் என்று தெரிவித்தார். மேலும் ஏஐ வளர்ச்சி என்பது கவலைக்குரியது அல்லது. அது ஒரு வாய்ப்பு. ஏஐ தற்போது இணையதளங்களை விட அதிக வளர்ச்சியில் இருக்கிறது. இந்த மாற்றத்துக்கு இளைஞர்களும், மாணவர்களும் தயாராக இருக்க வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு குறித்து பேசிய டெமிஸ் ஹசாபிஸ்

 

ஏஐயின் இந்த வளர்ச்சி, தற்போது பள்ளியில், கல்லூரியில் படிக்கும் மாணவர்களை பெரிதும் பாதிக்கக்கூடும். அதனால் இப்போது முதல் ஏஐ கருவிகளைப் பயன்படுத்த கற்றுக்கொள்ளுங்கள் என ஹசாபிஸ் வலியுறுத்துகிறார். இதுகுறித்து பேசிய அவர், இன்றைய இளைஞர்கள், ஏஐ கருவிகளை புரிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு விரைவாக அதைக் கற்றுக் கொள்கிறீர்களோ, அவ்வளவு உங்கள் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும், என அவர் கூறினார்.  இந்த காலகட்டம் 2000 ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்களுக்கு மிகவும் முக்கியமானது. அது அவர்களின் எதிர்காலத்தை வெகுவாக பாதிக்கும்.

புத்திசாலித்துடன் கூடிய திறமை தேவை

ஏஐ வளர்ச்சியின் பின்னணியில், மனிதர்கள் மிகுந்த கவனத்துடன் தங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் அறிவு பெற்றிருக்க வேண்டும். மேலும் கோடிங் அறிவு மிகவும் முக்கியமானது. மேலும் படைப்பாற்றல், ஆக்கப்பூர்வமான சிந்தனை ஆகியவற்றை வளர்த்துக்கொள்ள வேண்டும். இது தான் எதிர்காலத்தில் அவர்களை வழி நடத்தும்.

செயற்கை நுண்ணறிவு என்பது எதிர்காலம் இல்லை. இன்றைய நிஜம். அது உலகின் செயல்பாடுகளை மாற்றியுள்ளது. நீங்கள் எந்த துறையில் இருந்தாலும் ஏஐ விரைவில் நுழையும் என்றார்.

Follow Us