2025ல் ஐபோனை விட சிறந்த 6 ஆண்ட்ராய்டு போன்கள் – உங்க சாய்ஸ் எது?
Top Android Phones Beating iPhone : ஐபோன்கள் அதன் செயல்திறன், கேமரா வசதி ஆகியவற்றின் காரணமாக அனைவரது விருப்பமான தேர்வாக இருந்து வருகிறது. ஆனால் அதன் விலை மற்றும் இதர செலவுகளால் ஐபோன் வாங்க பலரும் யோசித்து வருகின்றனர். இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டில் ஐபோன்களை விட சிறந்த செயல்திறன் கொண்ட 6 ஆண்ட்ராய்டு போன்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

ஐபோன் (iPhone) என்பது பலரது கனவு. அதன் செயல்திறன், கேமரா வசதி மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவை ஆண்ட்ராய்டு (Android) போன்களைக் காட்டிலும் பல மடங்கு சிறந்ததாக இருக்கும். ஆனால் அதன் விலை மற்றும் இதர செலவுகளால் ஐபோன் வாங்க பலரும் யோசித்து வருகின்றனர். மேலும் ஆண்ட்ராய்டு போல நம்மால் விருப்பத்தின் பெயரில் ஆப்களை பதிவிறக்கம் செய்வது போன்ற பல பணிகளை செய்ய முடியாது. இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சில ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸை (iPhone 16 Pro Max)மிஞ்சும் அளவுக்கு மேம்பட்டுள்ளன. குறிப்பாக கேமரா வசதிகள், செயல்திறன், பேட்டரி ஆயுள் மற்றும் ஏஐ டூல்கள் என ஐபோன்களை விட சிறந்த அம்சங்களுடன் கிடைக்கின்றன. டைம்ஸ் நவ் இணையதளத்தில் வெளியான செய்தியின் அடிப்படையில் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் உடன் போட்டியிடும் 6 சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
1. Samsung Galaxy S25 Ultra
இந்த ஸ்மார்ட்போனில் உள்ள 200எம்பி பிரதான கேமரா, 50எம்பி அல்ட்ரா வைட் மற்றும் 3x, 5x டெலிஃபோட்டோ லென்ஸ்கள் உங்கள் கேமரா அனுபவத்தை சிறப்பானதாக மாற்றும். மேலும் இதில் Snapdragon 8 Elite சிப், 12GB RAM, 1டிபி ஸ்டோரேஜ் வசதி ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கின்றன. மேலும் 5,000mAh பேட்டரி, 45W வேக சார்ஜிங், ரிவர்ஸ் வைர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் கிடைக்கின்றன. குறிப்பாக ஐபோனை விட உயர் தரமான கேமரா, நீண்ட பேட்டரி ஆயுள், வேகமான சார்ஜிங், சிறப்பான ஏஐ அம்சங்கள் என உங்களுக்கு நல்ல அனுபவத்தை அளிக்கும்.
2. OnePlus 13
இந்த ஸ்மார்ட் போனில் Snapdragon 8 Elite சிப், 12ஜிபி/24ஜிபி ரேம், 6.8″ AMOLED டிஸ்ப்ளே ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாகும். மேலும் HyperRendering டிஸ்ப்ளே தொழில்நுட்பம், Cryo Velocity குளிரூட்டல் அமைப்பு ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஐபோன் 16 ப்ரோ மேக்ஸை விட அதிக செயல்திறன், சிறப்பான கேமிங் அனுபவம் குறைந்த விலை என உங்களுக்கு நல்ல சாய்ஸாக இருக்கும்.
3. Vivo X200 Pro
இந்த ஸ்மார்ட்போனில் Zeiss ஆப்டிக்ஸ் லென்ஸ் உடன் 50எம்பி டிரிபிள் கேமரா அமைப்பு, MediaTek Dimensity 9400 சிப், 12ஜிபி/16ஜிபி ரேம், 6.67″ AMOLED டிஸ்ப்ளே, 5800mAh பேட்டரி ஆகியவை இதன் சிறப்பம்சங்கள். ஐபோன் 16ப்ரோ மேக்ஸை விட மேம்பட்ட நைட் மோட் மற்றும் போர்ட்ரேட் போட்டோஸ், அதிக பேட்டரி திறன் அகியவை இதன் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.
4. OPPO Find X8 Ultra
இந்த ஸ்மார்ட் போனில் 50எம்பி குவாலிட்டி கேமரா, 6,100mAh பேட்டரி, Snapdragon 8 Elite சிப், 16ஜிபி ராம், 100 வாட்ஸ் ஸ்பீட் சார்ஜிங், 6.82″ AMOLED டிஸ்ப்ளே ஆகியவை இதன் சிறப்பம்சங்கள். மேலும் ஐபோனை விட சிறந்த கேமரா திறன், ஃபாஸ்ட் சார்ஜிங் ஆகியவை இதன் கூடுதல் சிறப்பம்சங்கள்.
5. Sony Xperia 1 VII
இந்த ஸ்மார்ட் போனில் 6.5″ 4K OLED டிஸ்ப்ளே, 52MP பிரதான கேமரா, 52 எம்பி கேமரா, Snapdragon 8 Elite சிப், 12ஜிபி ரேம், 3.5mm ஹெட்ஃபோன் ஜாக், microSD கார்டு ஸ்லாட் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள். மேலும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸை விட சிறந்த கேமரா அம்சங்கள், ஆடியோ அனுபவம் ஆகியவை இதில் முக்கியத்துவம் பெறுகிறது.
6. Xiaomi 15 Ultra
இந்த ஸ்மார்ட்போனில் 50MP டிரிபிள் கேமரா அமைப்பு, 6.73″ LTPO AMOLED டிஸ்ப்ளே, Snapdragon 8 Elite சிப், 12ஜிபி/16ஜிபி ராம், 90W வேக சார்ஜிங், 5410mAh பேட்டரி ஆகியவை இதன் சிறப்பம்சங்கள். மேலும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸை விட வேகமான சார்ஜிங், மேம்பட்ட கேமரா திறன் ஆகியவை உங்களுக்கு நல்ல அனுபவத்தை அளிக்கும்.