ஒருவர் இறந்த பிறகு அவரது சோஷியல் மீடியா கணக்கு என்ன ஆகும்?
Digital Legacy : நாம் தற்போது டிஜிட்டல் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் அன்றாட செயல்பாடுகள், மகிழ்ச்சி, துக்கம் அனைத்தையும் சமூக வலைதளங்களில் வெளிப்படுத்துகிறோம். இந்த நிலையில் ஒருவர் இறந்து விட்டால் அவரது சமூக வலைதள கணக்கு என்ன ஆகும் என யோசித்து இருக்கிறீர்களா? இந்த கட்டுரையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நாம் இப்போது சோஷியல் மீடியா யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு மனிதன் உயிருடன் இருக்கும்போது வெளியிடும் எண்ணற்ற ஃபேஸ்புக் (Facebook) பதிவுகள், இன்ஸ்டாகிராம் (Instagram) புகைப்படங்கள், வாட்ஸ்அப் மெசேஜ்கள், ஸ்பாடிஃபை பிளே லிஸ்ட், கூகுள் தேடல் வரலாறுகள் என அனைத்தும் அவனது உணர்வுகளையும், வாழ்க்கையையும் நமக்கு பிரதிபலிக்கின்றன. ஆனால், அவர் மரணமடைந்த பிறகு அவரது சோஷியல் மீடியா பக்கங்கள் என்ன ஆகும்? அவரது டிஜிட்டல் சொத்துக்களான அவற்றின் உரிமை யாருக்கு கிடைக்கும்? அவை அழிக்கப்பட வேண்டுமா? யாரால் எப்படி பராமரிக்கப்பட வேண்டும் என்பது குறித்து நமக்கு பல்வேறு சந்தேகங்கள் இருக்கும். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
டிஜிட்டல் லெகசி என்றால் என்ன?
டிஜிட்டல் லெகசி என்பது நம்மால் இணையத்தில் உருவாக்கப்படும் அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியது. இது இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது.
-
டிஜிட்டல் சொத்துகள் (Digital Assets):
இதில் ஜிபே (Gpay), போன் பே மொபைல் பேங்கிங், கிரிப்டோ கரன்சி, ஆன்லைன் வர்த்தகங்கள், யூடியூப் போன்ற மதிப்பு மிக்க சமூக வலைதளங்கள், டொமைன் பெயர்கள், ஐபி அட்ரஸ் ஆகியவை அடங்கும்.இதையும் படியுங்கள்வாட்ஸ்அப்பின் புதிய Voice Chat வசதி: இனி டைப் செய்ய வேண்டாம்… ஈஸியா பேசலாம்!சிசிடிவி கேமரா வைக்க போறீங்களா? இந்த 5 விஷயத்தை கவனிங்க!ChatGPT : சாட்ஜிபிடி மூலம் Black & White புகைப்படத்தை Colour-ஆக மாற்றுவது எப்படி?.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!Google : Weak Password-களை இனி கூகுளே மாற்றிவிடும்.. புதிய அம்சம் அறிமுகம்! -
டிஜிட்டல் அடையாளம் (Digital Presence):
இதற்கு பண மதிப்பில்லாதபோதிலும் நம்மை உணர்ச்சி ரீதியாக பிரதிபலிக்கும் விஷயங்கள். எடுத்துக்காட்டாக ஃபேஸ்புக் பதிவு, இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள், ஜிமெயில், ஸ்பாடிபை பிளே லிஸ்ட், கூகுள் தேடல்கள், ஹெல்த் ஆப்ஸ் டேட்டா, யூடியூப் ஹிஸ்ட்ரி ஆகியவை அடங்கும்
மரணத்திற்கு பிறகு நமது டிஜிட்டல் லெகசி என்ன ஆகும்?
முன்பே இதுகுறித்து திட்டமிடாவிட்டால், உங்கள் இந்த டிஜிட்டல் உலகம் சில நாட்களில் காணாமல் போய்விடும். பல சமூக வலைதள நிறுவனங்களின் விதிமுறைகள் பிரைவசியை முன்னிலைப்படுத்துவதால், குடும்பத்தினர் கூட இந்த கணக்குகளை அணுக முடியாது. சில நேரங்களில், மரணச் சான்றிதழ் போன்ற ஆவணங்களை சமர்பித்து கணக்குகளை நிரந்தரமாக மூடவோ, பதிவுகளை பதிவிறக்கம் செய்யவோ முடியும். ஆனால் சில கணக்குகள், குறிப்பாக ஸ்பாடிபை, நெட்ஃப்ளிக்ஸ், கூகுள் போன்றவை, பயனரின் அன்றாட பழக்கங்களை, இசை விருப்பங்களை, தேடல் வரலாற்றை வைத்தே அந்த நபரின் வாழ்க்கையை புரிந்துகொள்ள உதவும் என்பதால் குறிப்பிட்ட நபரை தவிர வேறு யாரையும் தொடர அனுமதிப்பதில்லை.
தற்போதைய இணைய நிறுவனங்களின் விதிகள் ஒரே மாதிரியானவை அல்ல. ஒரு சில நிறுவனங்கள் நம் சமூக வலைதள கணக்குகளை, தகவல்களை டெலிட் செய்வதற்கோ அல்லது டவுன்லோரடு செய்வதற்கோ அனுமதிக்கின்றன. சில நிறுவனங்கள் குறிப்பாக சமூக வலைதள நிறுவனங்கள், ஒருவர் இறந்து விட்டால் அவரது பெயரிலான அக்கவுண்டை அவர் இறந்துவிட்டதாக அறிவித்து நினைவுகளுக்காக அப்படியே விடுகின்றன. குறிப்பிட்ட அந்த அக்கவுண்ட்டில் உள்ள நபர் இறந்துவிட்டதாகவும் நினைவுகளுக்காக இந்த கணக்கு தொடரப்படுவதாகவும் குறிப்பிட்டிருப்பதை நீங்கள் பார்க்க முடியும். அதே நேரம், இந்த தகவல்களை நீண்ட காலம் சேமித்து வைக்கப்படும் போது யார் உரிமையுடன் அதை நிர்வகிக்க வேண்டும் என்பது கேள்விக்குறியாகிறது.
உலகம் முழுவதும் டிஜிட்டல் தளங்களில் நாம் உருவாக்கும் தடங்கள், மரணத்திற்கு பிறகு நம்மை நினைவுகூரும் வழியாக மாறுகின்றன. எனவே, நம்முடைய சமூக வலைத்தளங்களும், ஆன்லைன் தகவல்களும் மரணத்திற்கு பிறகு எவ்வாறு கையாளப்படவேண்டும் என்பதற்கான திட்டமிடல் அவசியமாகிறது. இது நமது நெருங்கியவர்களுக்கு நம்மை மேலும் நினைவுகூர ஒரு அரிய வாய்ப்பையும் வழங்கும். ஒருங்கிணைந்த சட்டங்கள், நிலையான விதிமுறைகள் மற்றும் நம்முடைய சுய பொறுப்புணர்வுடன் இணைந்தால், டிஜிட்டல் லெகசி ஒருவர் இறந்த பின்னும் அவரது நினைவுகளைத் தொடர உதவ முடியும்.